ஜப்பான் வாலிபர் மாயம் தூதரக அதிகாரி நேரில் விசாரணை
2015-02-03@ 00:22:14

சென்னை : மாயமான ஜப்பான் நாட்டு வாலிபர் விஷயத்தில், அந்நாட்டு தூதரக அதிகாரி வாலிபர் தங்கி இருந்த விடுதி நிர்வாகிகளிடம் நேரடி விசாரணை நடத்தினார். ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் யுடோ குகுச்சி (25). இவர், கடந்த சில தினங்களுக்கு முன் சென்னைக்கு சுற்றுலா வந்தார். எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை அருகே உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த 28ம் தேதி வெளியே சென்றவர், மீண்டும் தங்கும் விடுதிக்கு திரும்பவில்லை. அவரது உடமைகள் அனைத்தும் அவரது அறையிலேயே இருந்தன. இதனால், அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகி சேகர், எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஜப்பான் வாலிபர் கடத்தப்பட்டாரா அல்லது வழி தெரியாமல் தவித்து வருகிறாரா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இதுதொடர்பாக, ஜப்பான் தூதரக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு ஜப்பான் தூதரக அதிகாரி ரயேஜ் ப்யூஜி நேரில் சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து யுடோ குகுச்சி பெற்றோருக்கும் தகவல் தெரிவிப்பதற்கான நடைமுறையும் தொடங்கியுள்ளது. இதற்கிடையே, மாயமான ஜப்பான் வாலிபரின் புகைப்படம் சென்னை மட்டும் அல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிந்தவர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது; சென்னையில் 2,124 பேருக்கு தொற்று உறுதி: சுகாதாரத்துறை அறிக்கை..!
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!
சென்னை விமானநிலையத்தில் துபாய் விமானத்தில் இயந்திர கோளாறு: பயணிகள் 4 மணி நேரம் தவிப்பு
தொகுதி மக்களுக்கும், கட்சிக்கும் பேரிழப்பாகும்..! ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
மிரட்டும் கொரோனா வைரஸ்: சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும்..! மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்
மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா: தடுப்பு நடவடிக்கை குறித்து மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை..!
11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!
09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!