கிருஷ்ணகிரி வங்கி கொள்ளை எதிரொலி கூட்டுறவு கடன் சங்கங்களில் நகைக்கடன் வழங்க திடீர் தடை
2015-02-03@ 00:17:31

சென்னை : கிருஷ்ணகிரி வங்கி கொள்ளை சம்பவம் எதிரொலியாக, ‘ஸ்ட்ராங் ரூம்‘ வசதி இல்லாத தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகை கடன் வழங்க வேண்டாம் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் விவசாய தேவைகளுக்கு கந்துவட்டி வாங்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில், 4,000க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 23 மத்திய கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும், 123 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றில், 50 சதவீதம் வாடகை கட்டிடங்களில் இயங்குகின்றன.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பொறுத்தவரை கிராமங்களில் அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஊருக்கு ஒதுக்குபுறமாகவோ அல்லது மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் அமைந்துள்ளது. மேலும், அரசு அலுவலகங்கள் மட்டுமே செயல்படும் இடங்களில் இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் உள்ளது. இந்தப் பகுதியில் அலுவலக நேரத்துக்கு பிறகு ஆள் நடமாட்டமே இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாதுகாப்பு வசதிகளோ அல்லது உள் கட்டமைப்பு வசதிகளோ இருப்பது இல்லை. இந்நிலையிதான் இதுபோன்ற கட்டமைப்பில் உள்ள தேசிய வங்கியான பாங்க் ஆப் பரோடாவில் கடந்த வாரம், 6 ஆயிரம் பவுன் நகை கொள்ளை போனது. இச்சம்பவத்தின் எதிரொலியாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள், மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களிடம் நகை, பணத்தை பாதுகாக்கும், ‘ஸ்ட்ராங் ரூம்’ வசதி குறித்து கேட்டறிந்தனர்.
இதை தொடர்ந்து, கான்கிரீட்டினால் ஆன ‘ஸ்ட்ராங் ரூம்‘, அலாரம் போன்ற வசதிகள் இல்லாத கூட்டுறவு கடன் சங்கங்கள், நகைக் கடன் வழங்கக் கூடாது என அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். மேலும் அடகு வாங்கி வைத்திருக்கும் நகைகளை விரைவாக உரியவர்களிடம் வழங்கவும் கூறியுள்ளனர். இதனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் செய்வது அறியாது உள்ளனர். இதுகுறித்து, கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் சிலர் கூறுகையில், ‘கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் ‘நபார்டு‘ வங்கி மூலம் நலிவடைந்த வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உயிர் பெற்றன. இந்நிலையில், அதிகாரிகள் திடீரென நகை கடன் வழங்க வேண்டாம் என்றால் சங்கங்களை நடத்த இயலாது. பெரும்பாலான சங்கங்கள் நகை கடன் மூலம் பெறும் வருவாய் மூலமே பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குகிறது. இதனை நிறுத்தினால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை மூடுவதை தவிர வேறு வழியில்லை‘ என்றனர்.
விவசாய சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதை விட்டு விட்டு, நகைக்கடன் வழங்க வேண்டாம் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறியிருப்பது, விவசாயிகள் வயிற்றில் அடிப்பதாக பொருள். இது, விவசாயிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விவசாயிகள் போதிய மழையின்றி மனஉளைச்சலில் உள்ளனர். நகைக்கடனும் பெற முடியாவிட்டால், தனியாரிடம் கூடுதல் கந்து வட்டிக்கு பணம் வாங்கி, தங்களது நிலத்தை எழுதிக் கொடுக்க வேண்டியது தான்‘ என்றார்.
மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கிடையே வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் விதமாக ஊஞ்சல், தேன் சிட்டு இதழ் திட்டத்திற்கு ரூ.7.15 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு: சென்னை காவல் ஆணையர் தொடங்கிவைத்தார்
தமிழ்நாடு அரசின் தாய் - சேய் நல பெட்டக டெண்டருக்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி வரை அவகாசம்
தமிழக விமானநிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை 19 லட்சமாக அதிகரிப்பு
இந்து சமய அறநிலையத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் திருக்கோயில் பெருந்திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!