1983 உலக கோப்பையில் சாம்பியன் எதிர்பார்ப்பின்றி சாதித்த இந்தியா !
2015-02-02@ 17:24:46

3வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியும் இங்கிலாந்து நாட்டில் நடந்தது. இதில் கேப்டன் கபில் தேவ் தலைமையில் இந்தியா களம் கண்டது. கவாஸ்கர், கேப்டன் கபில்தேவ் தவிர அணியில் இருந்த மற்ற வீரர்கள் அனை வரும் அனுபவம் இல்லாதவர்கள். கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக கோப்பையை வென்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்போடு, வலம் வந்தது. அசுர பலம் வாய்ந்த அந்த அணியை வீழ்த்த முடியும் என்று எந்த அணிக்குமே நம்பிக்கை இல்லை. கோப்பையை வெல்லும் வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இல்லாத சாதாரண அணியாகவே இந்தியா பங்கேற்றது. கத்துக்குட்டி அணியான ஜிம் பாப்வே தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்ததை பார்த்த பிறகுதான், முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை என்ற எண்ணம் இந்திய வீரர்களுக்கும் ஏற்பட்டது.
பி பிரிவில் இருந்த இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் இரண்டு முறை உலக சாம்பி யனான வெஸ்ட் இண்டீசுடன் மோதி யது. இந்தப்போட்டியில், இந்தியா 34 ரன் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா 60 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 262 ரன் எடுத்தது. யஷ்பால் ஷர்மா 89, சந்தீப் பட்டீல் 36 ரன் எடுக்க, மற்ற வீரர்களும் கை கொடுத்தனர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 54.1 ஓவரில் 228 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ரவி சாஸ்திரி, ரோஜர் பின்னி தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இந்தியாவுக்கு 4 புள்ளிகள் கிடைத்தது. ஜிம்பாப்வே அணியுடன் நடந்த 2வது லீக் ஆட்டத்தில் 2வது வெற்றியை வசப்படுத்தியது. அடுத்து ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீசுடன் நடந்த ஆட்டங் களில் படுதோல்வியை சந் தித்த இந்தியா, மீண்டும் ஜிம்பாப்வே அணியை 2வது முறையாக சந்தித்தது .
முதலில் பேட் செய்த இந்தியா வுக்கு, தொடக்க வீரர்கள் கவாஸ்கர், ஸ்ரீகாந்த் இருவரும் டக் அவுட் ஆகி சரிவை தொட ங்கினர். அடுத்து வந்த மொகிந்தர் அமர்நாத் 5, யஷ்பால் ஷர்மா 9, சந்தீப் பட்டீல் 1 ரன்னில் அணி வகுக்க, 17 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது. இந்த நேரத்தில் களம் இறங்கிய கேப்டன் கபில் தேவ் அதிரடியாக ஆடி னார். பின்னி 22, சாஸ்திரி 1 ரன்னில் வெளியேற, இந்தியா 78 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்த நிலையில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடித்து நொறுக்கிக்கினார் கபில். 60 ஓவர் முடி வில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன் குவித் தது. கபில் 175 ரன் (138 பந்து, 16 பவுண்டரி, 6 சிக்சர்), கிர்மானி 24 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே 57 ஓவரில் 235 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதே உற்சாகத்தோடு கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 118 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா அரை இறுதிக்குள் நுழைந்தது. முதலாவது அரை இறுதியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது இந்தியா. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 60 ஓவரில் 213 ரன்னுக்கு ஆல் அவுட் ஆக, இந்தியா 54.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 217 ரன் எடுத்து பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரை இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானை போட்டுத்தள்ளி 3வது முறையாக பைன லுக்கு நுழைந்தது.
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்தியா 54.4 ஓவரில் 183 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்ரீகாந்த் 38 ரன் எடுத்தார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் எளிதாக வென்று மீண்டும் சாம்பியன் ஆகும் என்பது அனைவரின் எண்ணமாக இருந்தது. அதே எண்ணத்துடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. இந்திய வீரர் பல்விந்தர் சாந்து பந்து வீச்சில் தொடக்க வீரர் கார்டன் கிரீனிட்ஜ் (1) வெளியேறினார். 2வது விக்கெட்டுக்கு ஹெயின்சுடன் இணைந்த ரிச்சர்ட்ஸ் பவுண்டரியாக அடித்து நொறுக்க, இந்தியாவுக்கு நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. ஹெயின்ஸ் 13 ரன் எடுத்து மதன்லால் பந்துவீச்சில் பின்னியிடம் பிடிபட்டார்.
ஆக்ரோஷ ஆட்ட த்தை தொடர்ந்த ரிச்சர்ட்ஸ், மதன்லால் வீசிய பந்தை சிக்சருக்கு தூக்கும் முனைப்புடன் ஓங்கி அடிக்க, மட்டையின் விளிம்பில் பட்ட பந்து மிட்&விக்கெட் திசையில் ராக்கெட் போல உயரே பறந்து படுவேகமாய் கீழிறங்கியது. வெறித்தனமாய் கத்தியபடி ஓடிய கபில், பந்தை பார்த்தபடியே சுமார் 100 அடி பின்னோக்கி ஓடி சர்வ சாதாரணமாக கேட்ச் பிடித்தார். இதனால் இந்திய அணிக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
அதே வேகத்தில் கோம்ஸ் 5, கேப்டன் கிளைவ் லாயிட், பாக்கஸ் ஆகியோரை வெளியேற்ற வெஸ்ட் இண்டீஸ் 52 ஓவரில் 140 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீசின் சர்வாதிகார சாம்ராஜ்ஜியத்தை சரித்து இந்தியா கோப்பையை வென்றது. எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
மேலும் செய்திகள்
அதிரடி காட்டிய ஷிகர் தவான், ப்ரித்வி ஷா: சென்னையை துவம்சம் செய்த டெல்லி அணி..! ஐபில் 2வது போட்டி ஒரு அலசல்
வால்வோ கார் ஓபன் டென்னிஸ்: ஆஷ்லி அதிர்ச்சி தோல்வி
சன்ரைசர்ஸ் - நைட் ரைடர்ஸ் சென்னையில் இன்று பலப்பரீட்சை
ஹர்ஷல் படேல் அபார பந்துவீச்சு: மும்பையை வீழ்த்தியது ஆர்சிபி
சூப்பர் கிங்சுக்கு கேப்பிடல்ஸ் சவால்: குருவை மிஞ்சுவாரா சிஷ்யன்
ராமசாமி கோப்பை ஹாக்கி: ஐசிஎப் சாம்பியன்
11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!
09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!