SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் மீண்டும் 0.25% குறைய வாய்ப்பு

2015-02-02@ 12:27:07

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி (RBI), நாளை வெளியிடயிருக்கும் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% என்ற அளவுக்கு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 20 மாதங்களாக நாட்டின் பொருளாதார நிலைமையை மதிப்பிட்ட பிறகு 25 அடிப்படை புள்ளிகள் (bps) என்ற விகிதத்தில் ஆச்சரியமூட்டும் வகையில் வட்டி விகிதத்தை குறைக்க உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த மாதம் தெரிவித்துள்ளது. அதாவது பிப்ரவரி 3ம் தேதி, செவ்வாய்கிழமை, 2014-15ம் நிதியாண்டில் அதன் ஆறாவது இரு மாத நிதிக் கொள்கையின் மறுஆய்வு கூட்டத்தில், மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் கோல் இந்தியா நிறுவனத்தின் 10% பங்கு விற்பனையின் மூலம், மத்திய அரசுக்கு ரூ.22,500 கோடி லாபம் கிடைத்துள்ளது.

ரிசர்வ் வங்கி கடந்த மாதம் ஜனவரி 15ம் தேதி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% ஆக குறைத்து 8%ல் இருந்து 7.75% ஆக நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சில்லரை பணவீக்கம் 5% ஆகவும், மொத்த விலை பணவீக்கம் 0.1% ஆகவும், குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது இன்னும் கூடுதலான அதிகரிக்கப்பட்டால் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை சமாளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் அரசாங்கத்திற்கு ரூ.24,000 கோடி கிடைத்துள்ளது, அதில் செயில் நிறுவன பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் கடந்த வருடம் ரூ.1,719 கோடி மத்திய அரசுக்கு நிதி கிடைத்துள்ளது. மேலும் பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை கூடுதலாக அதிகரிக்கப்படுவதால் இந்த வருடத்தின் பங்கு விற்பனை ரூ.43,425 கோடி என்ற இலக்கை மத்திய அரசு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓரியண்டல் வங்கியின் வர்த்தக தலைமையாளரான அனிமீஸ் சவுகான், ரிசர்வ் வங்கியின் கவர்னரான ரகுராம் ராஜன் பிப்ரவரி 3ம் தேதி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% ஆக குறைப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

sms spy app click spy apps free
rite aid load to card coupons link rite aid store products
prescription coupon card viagra online coupon viagra online coupon


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்