5வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்
2015-02-02@ 02:06:58

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 5வது முறையாக சாம்பி யன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி மர்ரேவுடன் (6வது ரேங்க்) நேற்று மோதினார் ஜோகோவிச். டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டில் ஜோகோவிச் 7,6 (7,5) என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். இந்த செட் 72 நிமிடம் நடந்தது. இரண்டாவது செட்டில் இரு வீரர்களும் சளைக்காமல் போராட, விறுவிறுப்பான ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. 80 நிமிடம் நடந்த இந்த செட்டில் ஆண்டி மர்ரே 7,6 (7,4) என வெ ன்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.
மூன்றாவது செட்டின் தொடக்கத்தில் சற்று நெருக்கடி கொடுத்த மர்ரே, பின்னர் சோர்வடைந்து ஜோகோவிச்சின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் சரணடைந்தார். மூன்று மணி, 19 நிமி டம் நடந்த இப்போட்டியில் ஜோகோவிச் 7,6 (7,5), 6,7 (4,7), 6,3, 6,0 என்ற செட் கணக்கில் வென்று 5வது முறையாக ஆஸி. ஓபன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவர் ஏற்கனவே 2008, 2011, 2012, 2013ல் இங்கு சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். ஜோகோவிச் பெறும் 8வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது. விம்பிள்டனில் 2 முறையும், யுஎஸ் ஓபனில் ஒரு முறையும் பட்டம் வென்றுள்ளார். ஆஸி. ஓபனில் தலா 4 முறை பட்டம் வென்றுள்ள ஆந்த்ரே அகஸ்ஸி (அமெரிக்கா), ரோஜர் பெடரரின் (சுவிஸ்) சாதனையை ஜோகோவிச் நேற்று முறியடித்தார். ராய் எமர்சன் 6 முறை ஆஸி. ஓபன் பட்டம் வென்று முதலிடத்தில் உள்ளார்.
மேலும் செய்திகள்
டிராவிட் இன்னொரு முகம் தோனிக்கு தெரியும்: இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்
அதிரடி காட்டிய ஷிகர் தவான், ப்ரித்வி ஷா: சென்னையை துவம்சம் செய்த டெல்லி அணி..! ஐபில் 2வது போட்டி ஒரு அலசல்
வால்வோ கார் ஓபன் டென்னிஸ்: ஆஷ்லி அதிர்ச்சி தோல்வி
சன்ரைசர்ஸ் - நைட் ரைடர்ஸ் சென்னையில் இன்று பலப்பரீட்சை
ஹர்ஷல் படேல் அபார பந்துவீச்சு: மும்பையை வீழ்த்தியது ஆர்சிபி
சூப்பர் கிங்சுக்கு கேப்பிடல்ஸ் சவால்: குருவை மிஞ்சுவாரா சிஷ்யன்
11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!
09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!