SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருந்துவது எப்போது?

2015-02-02@ 00:54:19

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, பேரணாம்பட்டு, ராணிப்பேட்டை, குடியாத்தம் பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள், தோல் பொருள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. சிப்காட் பேஸ் -1 பகுதியில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி நள்ளிரவில் திடீரென உடைந்தது. இதிலிருந்து பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீரில் சிக்கி, தூங்கிக்கொண்டு இருந்த 10 தொழிலாளர்கள் இறந்தனர். சுமார் ஒன்றரை லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த கழிவுநீர் தொட்டியின் சுவர் 9 அங்குலத்தில்தான் அமைக்கப்பட்டிருந்தது. 6 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த தொட்டிக்கு, சட்ட ரீதியான அனுமதி பெறப்படவில்லை. திடக்கழிவு சேமிக்க கட்டப்பட்ட இந்த தொட்டியில் திரவ கழிவு சேமித்துள்ளனர். தொட்டியில் கொட்டப்பட்ட கிரோமிக் ஆசிட் கான்கிரீட் வரை அரித்துள்ளதை தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியும், விபரீதத்தை யாரும் உணரவில்லை. இதனால் வலுவிழந்து தொட்டி உடைந்துள்ளது. இதற்கு முன்பு 2010ல் வாணியம்பாடியில் உள்ள தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்த 5 பேர் விஷவாயு தாக்கி இறந்துள்ளனர். இப்படி தோல் தொழிற்சாலைகள் ஒருபுறம் உயிர்பலியையும், தொழிலாளர்களுக்கு தோல் நோயையும் பரிசாக அளித்து வருகின்றன.

பெரும்பாலான தொழிற்சாலைகள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இது மிகுந்த லாபம் ஈட்டும் துறையாக இருந்தாலும் இங்கு பணிபுரியும் தொழிலாளர் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. தோல் தொழிற்சாலைகளால் ஆண்டுக்கு சுமார் ஸி10 ஆயிரம் கோடிக்கு மேல் அந்நிய செலாவணி வருகிறது. பதனிடப்பட்ட தோல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த தொழில் சுற்றுச்சூழலுக்கு கேடு என்பதால் பெரும்பாலான நாடுகள் இதை ஊக்குவிப்பதில்லை. அதனால்தான் இந்தியாவில் இருந்து தோல் ஏற்றுமதி அதிக அளவில் செய்யப்படுகிறது.

லாபமான தொழில்  என்பதற்காக பாதுகாப்பு அம்சங்களை கோட்டை விடக்கூடாது. சுற்றுச்சூழல் கெடுவதை தடுக்க வேண்டும். தொழிலாளர் நலனில் அக்கறை காட்ட வேண்டும். அனைத்து தொழிற்சாலைகளையும் ஆய்வு செய்து, முறையான அனுமதி பெற்றுள்ளனவா, பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதிகாரிகள் அலட்சியத்தால் சென்னையில் அடுக்குமாடி கட்டிட விபத்து நடந்தது. மற்றொரு அலட்சியம் தற்போது தோல் தொழிற்சாலை தொழிலாளர்கள் உயிரை பறித்துள்ளது. இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அலட்சியம் காட்டும் அதிகாரிகள் எப்போது தான் திருந்துவரோ?

sms spy app read spy apps free
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-04-2021

    11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • harffghh

    புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!

  • robbbaa

    சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!

  • 09-04-2021

    09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-brezil8

    எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்