SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அச்சமின்றி விளையாடுங்கள்

2015-02-01@ 00:28:39

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றத்துடன் நாடு  திரும்புகிறது இந்திய அணி. மழை காரணமாக ஒரு லீக் ஆட்டம் ரத்தானதால் கிடைத்த சாதகமான நிலையை இந்திய வீரர்கள் வீணடித்துவிட்டனர்.  கடந்த இரண்டு மாதத்துக்கும் மேலாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் முத்தரப்பு தொடரில் விளையாடிய இந்திய  அணியால், ஒரே ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யமுடியவில்லை. உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள  நிலையில், இந்திய அணியின் மோசமான ஆட்டம் ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. சாம்பியன் பட்டத்தை நமது அணி தக்கவைத்துக்  கொள்ளும் என்ற நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வருகிறது.

ஆஸ்திரேலியாவுடன் நடந்த டெஸ்ட் தொடரில் கற்ற பாடங்கள் எங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும். அணியில் மூன்று வேகப்  பந்துவீச்சாளர்களை சேர்ப்பதால் பேட்டிங் பலவீனமாகிவிடுகிறது. எனவே உலக கோப்பையில் நான்கு பவுலர்களுடன் களமிறங்குவது பற்றி தீவிரமாக  ஆலோசித்து வருகிறோம். பாகிஸ்தான் அணியுடன் மோதவுள்ள லீக் ஆட்டத்துக்கு வீரர்கள் தயாராக உள்ளனர். கொஞ்சம் ஓய்வு மட்டுமே தேவை.  புத்துணர்ச்சியுடன் மீண்டும் வந்து சிறப்பாக விளையாடுவோம்’ என்கிறார் கேப்டன் டோனி. ஆனாலும், ரசிகர்களுக்கு நம்பிக்கை வர மறுக்கிறது.  தொடர்ச்சியாக எட்டு சர்வதேச ஆட்டங்களில் வெற்றி பெற முடியாத அணியை வைத்துக் கொண்டு டோனி உலக கோப்பையை எப்படி தக்கவைக்கப்  போகிறார் என்பதே அவர்களின் ஆதங்கம்.

தொடக்க வீரர் தவான் ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருவதும், ரோகித் ஷர்மா காயம் அடைந்திருப்பதும் இந்திய அணியின் நெருக்கடியை  அதிகரித்திருக்கிறது. நம்பிக்கை நட்சத்திரமான விராத் கோஹ்லி பார்மில் இல்லாதது அணியின் வெற்றி வாய்ப்பை வெகுவாகப் பாதித்திருக்கிறது.டோனி, ரெய்னாவும் அதிரடி ஆட்டத்தை மறந்து நாளாகிறது. பந்துவீச்சு படுமோசம். சர்வதேச போட்டிகளுக்கு லாயக்கில்லாதவர் என்று  விமர்சிக்கப்பட்ட பின்னி ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டது மட்டுமே ஆறுதலாக உள்ளது.

இந்த நிலையில், ஆஸி. டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் முரளி விஜய், உள்ளூர் போட்டிகளில் அடித்து நொறுக்கிக்  கொண்டிருக்கும் யுவராஜ் இருவரும் அணியில் இடம் பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு  என்பதால், இருக்கும் அணியை வைத்துக் கொண்டு போராடுவது மட்டுமே இழந்த பெருமையை மீட்க உதவும். தோல்வி பற்றி கவலைப்படாமல்,  எந்தவித அச்சமும் இன்றி அடித்து விளையாடினால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும். வித்தியாசமான வியூகங்களும் அவசியம்.

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures
plavix tonydyson.co.uk plavix plm
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-04-2021

    11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • harffghh

    புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!

  • robbbaa

    சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!

  • 09-04-2021

    09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-brezil8

    எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்