ஆம்புலன்ஸ்
2015-01-31@ 09:39:18

சாதாரணமான காய்ச்சல், தலைவலி என்றால் வைத்தியரைப் பார்க்க பொடி நடையாகவே சென்றுவிடலாம். நடக்கவே முடியாத ஒருவர்... வாகனப் போக்குவரத்து வசதி இல்லாத அந்தக் காலத்தில் எப்படிச் செல்வார்? அக்காலத்தில் உறுதியான இரண்டு மூங்கில்களுக்கிடையே துணியைக் கட்டி, அதில் நோயாளியைப் படுக்க வைத்து வைத்தியரிடம் தூக்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். கட்டைவண்டி பயன்பாட்டுக்கு வந்தபோது நோயாளிகளுக்கு கட்டை வண்டியே ஆம்புலன்ஸ் ஆனது. சிலுவைப்போர் நடந்த கி.பி. 11ம் நூற்றாண்டில் போர் வீரர்களைக் காப்பாற்ற குதிரை வண்டி களை இங்கிலாந்தில் பயன்படுத்தினார்கள்.
கி.பி. 17ம் நூற்றாண்டில் நெப்போலியன் போனபார்ட் படையின் தலைமை மருத்துவராக இருந்த டோமினிக் ஜீன் லாரே ஆம்புலன்ஸை வடிவமைத்தார். முதல் உதவிப் பொருட்கள், மருத்துவம் தெரிந்த ஒருவர் வண்டியில் இருக்க வேண்டும் என்று முக்கியமான சில விதிகளை உருவாக்கினார். அமெரிக்கன் சிவில் யுத்தம் நடந்த கி.பி. 1861-65 காலத்தில் லாரேவின் ஆம்புலன்ஸ் வடிவத்தை அமெரிக்கர்கள் இன்னும் நவீனப்படுத்தினார்கள். இந்த வாகனங்களுக்கு ‘ஆம்புலன்ஸ் வேகன்’ என்று பெயரும் வைத்தார்கள்.
1869ல், நியூயார்க் பெவில்யூ மருத்துவமனையில் பொதுமக்களுக்கென முதல் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போர் நடந்த 1939-1945 காலகட்டத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டன. கடல் வழியாகப் பயணப்படும் போட் ஆம்புலன்ஸ், மொத்தமாக போர் வீரர்களையோ, நோயாளிகளையோ அழைத்துச் செல்லும் ரயில் ஆம்புலன்ஸுகளும் இருந்தன. 1970க்குப் பிறகு, ஆம்புலன்ஸில் பணிபுரிவதற்காகவே மருத்துவர்கள், உதவியாளர்கள், செவிலியருக்குப் பயிற்சி கொடுத்தார்கள். பிறகு, அவசர வாகனம் என்பதைக் குறிக்கும் சுழல்விளக்கு, சைரன் போன்றவை பொருத்தப்பட்டன.
இப்போது அமெரிக்காவில் டைப் 1, டைப் 2, டைப் 3, டைப் 4 என 4 வகை ஆம்புலன்ஸுகள் பயன்படுத்தப்படுகின்றன. நோயாளிக்கு என்ன பிரச்னை என்று கதைச்சுருக்கம் சொன்னால் அதற்கேற்றாற்போல வண்டி அனுப்புவார்கள். இங்கிலாந்தில் இன்னும் ஒரு கிலோமீட்டர் முன்னே போய் ‘ஜூம்புலன்ஸ்’ என்ற வாகனம் பிரபலமாகி வருகிறது. ‘ஹாஸ்பிட்டல் லைஃப் போரடிக்குதுங்க’ என்று போன் அடித்தால், டாக்டரின் அனுமதியுடன் நோயாளி களை ரிலாக்ஸாக பிக்னிக் அழைத்துப் போகும் இந்த ஜூம்புலன்ஸ். இந்த வாகனத்தில் நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகளுடன், பொழுதுபோக்கு வசதிகளும் நிறையவே இருக்கும்.
சரி... நிறைவாக ஒரு தகவல்...
முன்பு கட்டண சேவையாக நம் ஊரில் இருந்த ஆம்புலன்ஸ், இப்போது இலவச சேவையாக செயல்பட்டு வருவது நமக்குத் தெரியும். அதற்கு ஏன் 108 என்ற எண்ணைப் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? ஜனவரி 8 அன்று உலக ஆம்புலன்ஸ் தினமாக உலகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1/08 என்பதன் அடையாளமாகவே 108 என்ற எண்ணை வைத்திருக்கிறார்கள்!
மேலும் செய்திகள்
ஹர்ஷா டொயோட்டா வேலப்பன்சாவடி மற்றும் பல்லாவரம் ஷோரூமில் ‘கூல் நியூ டொயோட்டா கிளான்ஸா’ அறிமுகம்.!
இயல்பான பிரசவத்திற்கு கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி: அரசு சித்த மருத்துவர் அசத்தல்
ஆங்கில புத்தாண்டு எப்படி வந்தது?
உடல் பருமனும் மகளிர் நலமும்
ஒரு தம்பதியர் கர்ப்பமடைவதற்கு சிறிது காலம் எடுக்கும் பொழுது அது தாமதமான கருவுறுதல்
தீபாவளியை தித்திப்பாக்க திண்டுக்கல் ஜிலேபி ரெடி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!