HTC டிசயர் 826 அக்டா கோர் ஸ்மார்ட்போன் விலை வெளியீடு
2015-01-30@ 12:50:09

HTC நிறுவனம் டிசயர் 826 என்ற ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிசயர் 826 ஸ்மார்ட்போனின் 16ஜிபி வேரியன்ட் CNY 2,299 (சுமார் ரூ. 22,600) விலையில் கிடைக்கிறது, மற்றும் 32ஜிபி வேரியன்ட் CNY 2,499 (சுமார் ரூ. 24,500) விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை HTC Eshop வளைத்தளத்தில் இருந்து வியாழக்கிழமை முதல் கிடைக்கும். டிசயர் 826 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் பற்றி இன்னும் அறியப்படவில்லை, எனினும் நிறுவனத்தின் இந்திய வளைத்தளத்தில் ஸ்மார்ட்போனை பற்றி ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ளது.
4ஜி செயல்படுத்தப்பட்ட டிசயர் 826 ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் (ஒற்றை சிம் மற்றும் இரட்டை சிம்) வருகிறது. HTC டிசயர் 826 ஸ்மார்ட்போனில் HTC சென்ஸ் UI கொண்ட ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இயங்குகிறது. இதில் 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் முழு HD டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. டிசயர் 826 ஸ்மார்ட்போனில் Adreno 405 ஜி.பீ. யூ மற்றும் ரேம் 2GB உடன் இணைந்து அக்டா கோர் (1.5GHz நான்கு கோர்கள் மற்றும் 1.0GHz நான்கு கோர்கள்) 64-குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 615 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
இதில் (f / 2.2) 28mm லென்ஸ், BSI சென்சார், மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 4-UltraPixel சூட்டர் கொண்ட முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி/32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது.
HTC டிசயர் 826 ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள், 3ஜி, 4ஜி (இரட்டை 4ஜி), ப்ளூடூத் 4.0, Wi-Fi 802.11 b/ g/ n, ஜிஎஸ்எம், ஜிபிஎஸ்/எ- ஜிபிஎஸ், மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இது 2600mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் தடிமன் 7.5 மிமீ மற்றும் 155 கிராம் எடையுடையது. டிசயர் 826 ஸ்மார்ட்போன் ஒயிட் பிர்ச், ப்ளூ லகூன், மற்றும் பர்ப்பிள் ஃபயர் ஆகிய இரண்டு தொனி வண்ணங்களில் வருகிறது. மேலும் இதில் காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர் மற்றும் ஆம்பிஎண்ட் லைட் சென்சார் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.
HTC டிசயர் 826 ஸ்மார்ட்போன் முக்கிய குறிப்புகள்:
- ஒற்றை சிம் மற்றும் இரட்டை சிம்,
- 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் முழு HD டிஸ்ப்ளே,
- ரேம் 2GB,
- 1GHz அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 615 பிராசசர்,
- 13 மெகாபிக்சல் பின்புற கேமரா,
- முன் எதிர்கொள்ளும் கேமரா,
- மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி/32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
- 3ஜி,
- 4ஜி (இரட்டை 4ஜி),
- ப்ளூடூத் 4.0,
- Wi-Fi 802.11 b/ g/ n,
- ஜிஎஸ்எம்,
- ஜிபிஎஸ்/எ- ஜிபிஎஸ்,
- மைக்ரோ-யுஎஸ்பி,
- ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்,
- 2600mAh பேட்டரி,
- 155 கிராம் எடை.
மேலும் செய்திகள்
ஹூண்டாய் டூசான்
சீன சூழ்நிலை இந்தியாவுக்கு சாதகமாகுமா?
பொலீரோ பிக்அப் வேன்
டாடா டிகோர் எக்ஸ்எம் ஐ-சிஎன்ஜி
என்பீல்டு ஹண்டர்: சந்தை விலை சுமார் ரூ.15 லட்சம்
மாருதி சுசூகி ஸ்விப்ட் சிஎன்ஜி
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...