மோடியின் மோகம்
2015-01-30@ 00:22:42

சிறந்த தேசியவாதி; இந்தியப் பொருட்களையே விரும்புபவர், அதற்காக மேக் இன் இந்தியா திட்டத்தையே கொண்டு வந்தவர் என்றெல்லாம் புகழப்பட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடியின், வெளிநாட்டு மோகம் குடியரசு தினவிழாவின்போது வெளிப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்தபோது, ஜம்மென்று ஒரு கோட், சூட்டுடன் நின்றார் மோடி. அவர் அணிந்திருந்த கோட்டில் மெல்லிய வெள்ளைக் கோடுகள் இருந்தன. அதை சற்றே உற்று பார்த்தபோதுதான், மோடியின் முழுப்பெயர் சின்ன எழுத்துக்களால் நீண்ட வரிசையில் பதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
உலகிலேயே இதுபோன்ற ஆடைக்கு தேவை யான துணியை வழங்குவது லண்டனைச் சேர்ந்த ‘ஹாலண்ட் அண்ட் செர்ரி பேப்ரிக்ஸ்’ என்ற நிறுவனம்தான். உலகப்புகழ்பெற்ற ஆடை தயாரிப்பு நிறுவனம். பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கும், நிறுவனங்களுக்கும் அவர்கள் விரும்பும் பெயரை துணியில் இடம்பெறச் செய்து தருகிறது. பல்வேறு சிறப்பு ஆடைகளை தயாரித்து அளிப்பதில், சர்வதேச அளவில் பெயர் பெற்றுள்ளது. உலக கோடீஸ்வரர்கள் முக்கிய விசேஷங்களுக்கு இதனிடம்தான் பிரத்யேக துணியில் ஆடைகளை தயாரித்து வாங்கிக் கொள்வார்கள்.
இதுபோன்ற இந்நிறுவனம் தயாரித்த ஒரு டிசைன்தான், ‘சிக்னேச்சர் பேப்ரிக்ஸ்’. பெயர் பதிக்கப்பட்ட சிறப்பு துணியான இதன் ஆரம்ப விலையே மீட்டர் 300 பவுண்ட் (ஒரு பவுண்ட் சுமார் ரூ.93). குடியரசு தினவிழாவின்போது மோடி அணிந்திருந்த கோட், சூட்டுக்கான துணிக்கு மொத்தம் 7 மீட்டர் துணி செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ஆடைகளை தைத்து தருவது ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த, ‘டாம் ஜேம்ஸ்’ என்ற நிறுவனம்.
ஒபாமாவைச் சந்தித்தபோது மோடி அணிந் திருந்த கோட்டுக்கான துணி, ஆரம்ப விலை துணியை விட சற்று விலை அதிகமானது.
7 மீட்டருக்கு 3000 பவுண்டு செலவழிக்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் ரூ.2.80 லட்சம். இதுதவிர தைத்து தரும் வரையில் அதற்கு செலவழிக்கப்பட்ட தொகை 10,000 பவுண்டுகள். அதாவது, ரூ.9.31 லட்சம். தான் பார்த்த ஒரு விவசாயி, கோவணம் மட்டுமே கட்டியிருந்ததால், தன்னுடைய மேலாடையையே துறந்து கடைசி வரை வாழ்ந்து காட்டியவர் காந்தியடிகள். அந்த அளவுக்கு இல்லா விட்டாலும், தன்னுடைய ‘மேக் இன் இந்தியா’ கொள்கையிலாவது பிரதமர் உறுதியாக இருந்தால் சரிதான்.
Tags:
Thalaiyangamமேலும் செய்திகள்
அதிமுகவும், ஊழலும்
மீண்டும் முதல்ல இருந்தா?
உரிமை உள்ளதா?
மீண்டும் அச்சுறுத்தல்
ஜனநாயக கடமை
ஒரு விரல் புரட்சி செய்வோம்
11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!
09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!