நவீன உலகத்தின் அரக்கண் ஹைபிரீட் எனும் உயிர் சத்தில்லாத பண்டங்கள்
2015-01-29@ 11:58:20

உயிர்வாழ உண்டு வந்த காலம் மாறி, ருசிக்காக புசிக்கும் காலம் மிக வேகமாக மாறி வருகிறது. இந்த மாற்றத்துக்கு உணவுமுறையே முக்கிய காரணியாக உள்ளது. இதுவே மனிதர்களின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று வருகிறது என்ற உண்மை அனைவரும் அறிந்திராதது.
பிளாஸ்டிக் புழக்கத்திற்கு வருவதற்கு முந்தைய காலத்தில் உணவு பொருட்கள் தூய்மையானதாக இருந்தது. பிளாஸ்டிக் பொருட்களின் வருகைக்கு பின்னர், அதன் தூய்மை களங்கப்படுத்தப்பட்டது. பாக்கெட்டுகளில் அடைப்பதற்காக உணவு பொருட்களின் தன்மை செயற்கையாக மாற்றப்பட்டு, எளிதில் கெடாமல் இருக்க செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகிக்கவும் வழி வகுப்பதால் உடல் நலத்துக்கு கேடாக அமைகிறது.
உடை, கலைநயமிக்க நகைகள் போன்ற பொருட்களில் வெளிநாட்டினரின் பழக்கத்தை கடைபிடித்த நம் மக்கள், நாளடைவில் அவர்களின் உணவு முறைக்கும் அடிமையாகி வருகிறோம். இதனால் எளிதில் தமிழகத்துக்குள் புகுந்துவிட்ட பாஸ்ட்புட் உணவுமுறை, உடலின் தன்மையை தாறுமாறாக மாற்றிவிட்டது. போதாதற்கு தற்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களை பயன்படுத்துவதில் அதிகளவிலான ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
பழங்கள் வண்ணங்களில் எடுப்பாகவும், எளிதில் கெடாமலும் இருக்க, ரசாயன பூச்சுகள் முக்கிய பங்காற்றுகிறது. உணவு பண்டங்கள் விஷமாகி உயிரை பறிக்கும் முன் அவற்றை கண்டறிந்து அழிக்கும் பொருட்டு செயல்படும் உணவு பாதுகாப்பு துறை, கலப்பட பொருட்களை விற்று பகல் கொள்ளையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு ஆதரவாகவே செயல்படுவதாக பொதுமக்களின் குற்றச்சாட்டுகளும் ஆங்காங்கே உள்ளது.
இது, ஒரு புறம் இருக்க தற்போது வேளாண்மை துறையில் அசுர வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதில் முக்கியமானதாக ஹைப்ரட் என்று சொல்லக்கூடிய வீரிய ரக உற்பத்தி விவசாயத்தையே வேறோடு அழிக்கும் வல்லமை பெற்றுள்ளது. இந்த வீரிய ரக உற்பத்தியால் முதலில் அழிவது விவசாயிகளுக்கே உரித்தானதாக கருதப்படும் உழைப்பு. கடந்த காலங்களில் உழைப்பை மூலதனமாக கொண்டு உற்பத்தியை பெருக்கிய விவசாயி, தற்போது அதிக உற்பத்திக்கு ஆசைப்பட்டு, நிலத்துக்கும் மனித உடலுக்கும் கேடு விளைவிக்கும் செயற்கை உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தை யோசனையின்றி உபயோகிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக இயற்கை விவசாயி ஒருவர் கூறியதாவது:
நடைமுறையில் உள்ள விவசாயம் பேராசைக்கு வித்திட்டதாக உள்ளது. கடந்த கால விவசாய முறையில் இயற்கை உரங்களை பயன்படுத்தி நெல் நடவு செய்தோம். அதில் பதர் போக போதுமான அளவுக்கு விளைச்சல் இருக்கும். ஆனால் விளைவித்த அனைத்தும் முழுமையான உயிர்சத்து மிகுந்ததாக இருந்தது. ஆனால் தற்போது வீரிய ரகம் என்ற பெயரில் பதர் இல்லாத 100 சதவீத உற்பத்தியை தருகின்றனர். இதில் தேவையான சத்து உள்ளதா என்பது கேள்விக்குறிதான்.
இயற்கையாக விளைந்த பப்பாளியில் காய், கனி, விதை, இலை என ஒவ்வொன்றும் தனித்தனி மருத்துவ குணத்தை கொண்டதாகும். ஆனால் வீரிய ரக பப்பாளியில் விதையே இல்லை. விதை இருந்தாலும் அதிலிருந்து ஒரு செடியை கூட வளரவைக்க முடியாது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் வீரிய ரகம் என்று சொல்லக்கூடிய எந்த பொருளிலும் உயிர் சத்து அறவே இல்லை. உயிர் சத்து இல்லாத பப்பாளியோ, கொய்யாவோ, தக்காளியோ, கத்தரிக்காயையோ சாப்பிடுவதால் என்ன பயன்?
வீரிய ரக மோகத்துக்கு முக்கிய காரணியாக இருப்பது, அதிகமான மக்கள் தொகை, ரியல் எஸ்டேட்காரர்களின் நிலச் சுரண்டல் ஆகியவையே பிரதானமாக உள்ளது. இதனால் அதிக விளைச்சல் தரவேண்டும் என்ற உந்துதலால் வீரிய ரக விளைச்சலை நாடுகின்றனர் விவசாயிகள்.
வாழைப்பழத்தை எடுத்துக்கொண்டால் மோரீஸ் என்ற ரகத்தில் விதை இல்லை. ஆனாலும் எடுப்பான நிறம் குறைவான விலையில் பெரிய அளவில் இருப்பதால் அதைத்தான் மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இதனால் பயன் என்ன என்பதை மக்கள் தான் உணர வேண்டும்.
இப்படி வீரிய ரகத்தில் விளைவிக்கப்பட்ட விதை இல்லாத பொருட்களை உண்டு வருவதால் வயிறு நிறைகிறது. ஆனால் மனிதனுக்கு தேவையான சத்துகள் கிடைக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. ஏனென்றால் விளைவிக்கப்பட்ட பொருட்களில் இருந்து பெறப்படும் விதையை வைத்து மீண்டும் உருவாக்கப்படும் பொருட்களிலேயே உயிர் சத்துகள் உண்டு. விதை இல்லாத விளைச்சலில் இருந்து எப்படி சத்துள்ள பொருளை பெற முடியும்? மண்கட்டியை வயிற்றில் நிரப்புவதைப் போலத்தான். பசியை தீர்க்குமே தவிர சத்துக்களை அளிப்பதில்லை. இருந்தால்தானே அளிப் பதற்கு, என்றார்.
உணவு பண்டங்களின் தூய்மை, கடந்த காலங்களில் இருந்தது போல் தற்போதைய அறிவியல் வளர்ச்சியடைந்த காலத்தில் இல்லை என்பது கண்கூடு. இருந்தும் எதற்காக நாம் போலியான உணவு பண்டங்களை உண்ண வேண்டும்? விலை கொடுத்து எதற்காக நோயை வாங்க வேண்டும்? ஒவ்வொருவரும் தாங்கள் வசிக்கும் இடத்தில் தோட்ட பயிர் செய்து முடிந்த வரை அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாமே. இயற்கையாய் விளைந்த பொருட்களை உண்ண பழகி நோயற்ற வாழ்க்கை முறையை கடைபிடித்து போலிகளை ஒழிக்க நம்மால் முடிந்த வேலைகளை செய்ய நாமே முன்வர வேண்டும்.
மேலும் செய்திகள்
ஹர்ஷா டொயோட்டா வேலப்பன்சாவடி மற்றும் பல்லாவரம் ஷோரூமில் ‘கூல் நியூ டொயோட்டா கிளான்ஸா’ அறிமுகம்.!
இயல்பான பிரசவத்திற்கு கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி: அரசு சித்த மருத்துவர் அசத்தல்
ஆங்கில புத்தாண்டு எப்படி வந்தது?
உடல் பருமனும் மகளிர் நலமும்
ஒரு தம்பதியர் கர்ப்பமடைவதற்கு சிறிது காலம் எடுக்கும் பொழுது அது தாமதமான கருவுறுதல்
தீபாவளியை தித்திப்பாக்க திண்டுக்கல் ஜிலேபி ரெடி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!