ஓட்டா, நோட்டா?
2015-01-28@ 00:27:32

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான மனுத்தாக்கல் முடிந்துவிட்டது. திமுக, அதிமுக, பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் களத்தில் நிற்கிறது. 4 முனை போட்டி உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் போட்டியிடுவதாக இருந்தது. வேட்பாளர் பெயர் கூட வெளியில் கசிந்தது. ஆனால் நாங்கள் போட்டியிடவில்லை என மாநில காங்கிரஸ் தலைவர் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார். இதற்காக அவர் சொன்ன காரணம் முக்கியமானது. ஒரு ஓட்டுக்கு ஸீ 5 ஆயிரம் தர அதிமுக திட்டமிட்டு பணியைத் தொடங்கியுள்ளது என கூறியிருக்கிறார். மூன்று நாட்களுக்கு முன்னே பணப்பட்டுவாடா தொடங்கிவிட்டது. அட்வான்ஸ் போல ஆயிரம் ரூபாயை முதலில் கொடுத்துள்ள னர். தேர்தல் நேரத்தில் மீதியுள்ள ஸீ 4 ஆயிரத்தை தர அதிமுகவினர் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியிருப்பதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் சொல்லியிருக்கிறார்.
கொள்கைகளையும் வாக்குறுதிகளையும் கொடுத்து மக்களின் வாக்குகளை பெறுவதுதான் வாடிக்கையாக இருந்தது. இந்த அரசு அதை தலைகீழாக மாற்றியுள்ளது. இடைத்தேர்தல் என்பதே, பணத்தை வீசி வாக்குகளை அபகரிப்பது என்று அடையாளப்படுத்தி விட்டனர். ஏற்காடு இடைத்தேர்தலின்போதே இந்த பணப்பாய்ச்சல் வெளிப்படையாக நடந்தது. வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பணத்தை போலீஸ் வாகனங்களிலேயே கொண்டு செல்ல திட்டமிட்டிருப்பதால் துணை ராணுவ படையின் மூலம் போலீஸ் வாகனங்களை சோதனை செய்ய வேண்டும் என அப்போது திமுக அமைப்பு செயலாளர் மாநில தேர்தல் அதிகாரியிடம் புகார் மனுவே கொடுத்தார். மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தேர்தல் ஆணையத்துக்கு கட்டுப்படாமல் செயல்பட்டது.
சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின்போது மட்டும் பல கோடிக்கும் மேல் தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அடுக்கடுக்காக பல்வேறு புகார்கள் வந்த நிலையில், வாக்களிக்க பணம் வாங்கினால் ஓராண்டு சிறை என்ற எச்சரிக்கை அறிவிப்பை மட்டும் தேர்தல் ஆணையம் செய்தது. மறுபுறமோ காசு கரைபுரண்டு ஓடியது. நிலைமை கட்டுமீறி போய்விட்டதாக தேர்தல் அதிகாரியே பின்னர் சொன்னார். டெல்லியை சேர்ந்த ஊடக ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் வாக்குகளை வாங்குவதற்காக மக்களுக்கு பணம் தருவதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் இருப்பதாக சொல்லியதிலிருந்து இதன் வீச்சை புரிந்துகொள்ளலாம்.
இடைத்தேர்தல் என்பதை பணத்தால் ஆட்டம் காட்டும் விழாவாக மாற்றுவது ஜனநாயகத்தின் மீது வைக்கப்படும் கரும்புள்ளி. பல்வேறு சீர்திருத்தங்களை பற்றி பேசும் தேர்தல் ஆணையம் பணபலத்தை முறிப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கிறது. நூறும், ஆயிரமுமாக இருந்த இந்த கள்ளத்தனம் இந்த முறை 5 ஆயிரம் ரூபாயாக உயர்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இப்போதாவது ஆணையம் விழிப்புடன் இருந்து, பணபல ஆதிக்கத்தை நிறுத்த உறுதியான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும்.
மேலும் செய்திகள்
அலட்சியம் ஏன்?
விவசாயிகளுக்கு விஷ உணவு
உடனே களமிறங்குங்கள்
அதிமுகவும், ஊழலும்
மீண்டும் முதல்ல இருந்தா?
உரிமை உள்ளதா?
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!
பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!
சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!
13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்