SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடியரசு தினவிழாவின் பின்னணி

2015-01-26@ 06:30:30

ஜனவரி 26, 1930. இந்த நாளில்தான் முழுமையான சுயாட்சி கோரி இந்திய தேசிய காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட்ட நாள். இந்த அறிவிப்பில், பிரிட்டனிடம் இருந்து பூரண விடுதலை பெற்று முழு சுயாட்சி பெறுவதே காங்கிரசின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டது. 1920ம் ஆண்டு இறுதி வரையில், விடுதலை இயக்கத்தில் சுயாட்சி குறித்த கோரிக்கைகள் எழவில்லை. அப்போது எல்லாம் வரையறுக்கப்பட்ட சுயாட்சி, மேலாட்சி போன்ற அதிகாரங்களையே விடுதலை இயக்கத்தினர் போராடி வந்தனர்.

இந்தியர்களுக்கு படிப்படியாக அதிக அதிகாரங்களும் ஆளும் உரிமைகளும் வழங்கப்படும் என அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதிக அளவில் ஆட்சி உரிமைகளை வழங்க பிரிட்டன் தயாராக இல்லை என்பது, 1928&29ம் ஆண்டுகளில் வெளியான சைமன் குழு அறிக்கையில் எதிரொலித்தது. இது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய அமைப்புகள் பிரிட்டனுக்கு எதிராக கடும் நிலையை எடுத்தன. காங்கிரஸ் கட்சிக்குள் சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான ஒரு குழு, பிரிட்டனிடமிருந்து உடனடியாக முழு விடுதலை அடைவது கட்சியின் குறிக்கோளாக வேண்டும் என்று விரும்பினார். மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் உடனடியாக கடுமையான போக்கினை மேற்கொள்ள விரும்பவில்லை. நேரு போன்ற மிதவாதிகள், ஒட்டுமொத்தமாக பிரிட்டனிடமிருந்து பிளவு வேண்டாம், அந்நாட்டு ராணியின் மேற்பார்வையில் மேலாட்சி முறை வேண்டலாம் எனக் கருதினர்.

1928ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் கொல்கத்தா மாநாட்டில் இக்கருத்து வேறுபாடு வெளிப்படையாகப் பூசலாக வெடித்தது. காந்தி மற்றும் நேருவின் ஆதரவாளர்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றனர். உடனடியாக முழு விடுதலை வேண்டும் என்ற சுபாஷ் சந்திரபோசின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனினும், மேலாட்சி உரிமை போதாது முழு சுயாட்சி நிலை வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் எண்ணத் தொடங்கினர். அக்டோபர் 1929ல் இந்திய வைஸ்ராய் இர்வின் பிரபு, லண்டனில் நடைபெற இருந்த வட்ட மேசை மாநாட்டில் பங்கு பெறும்படி காந்தி, முகமது அலி ஜின்னா ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் மேலாட்சி அல்லது முழு தன்னாட்சி வழங்குவது குறித்து மாநாட்டில் பேசப்படுமா எனபது குறித்து உறுதியளிக்க முடியாதென்று கைவிரித்துவிட்டார்.

மேலாட்சி குறித்து பேச்சுவார்த்தை நிகழ்த்த பிரிட்டன் காலனி அரசு மறுத்ததால், காங்கிரசில் தேசியவாதக் குரல்கள் தீவிரமடைந்தன. டிசம்பர் 1929 இறுதியில் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இதுகுறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. மேலாட்சி போதாதென்றும் பிரிட்டனிடம் இருந்து முழு தன்னாட்சி பெற வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. டிசம்பர் 31 நள்ளிரவில் லாகூரில் இந்திய மூவர்ணக் கொடியை ஜவஹர்லால் நேரு ஏற்றினார். அவரைப் பின்பற்றி இந்தியாவெங்கும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மூவர்ணக் கொடியினை ஏற்றினர். பின் இந்திய விடுதலை அல்லது முழு தன்னாட்சிக்கான அறிவிப்பு காந்தியால் உருவாக்கப்பட்டது:‘‘பிரிட்டன் காலனி அரசு இந்திய மக்களின் சுதந்திரத்தை பறித்ததோடு, மக்களை சுரண்டுவதையே அடிப்படைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. தனது செயல்களால் இந்தியாவைப் பொருளியல், பண்பாடு, அரசியல், ஆன்மிகம் என பல துறைகளிலும் நாசமாக்கியுள்ளது.... எனவே பிரிட்டனுடனான உறவை இந்தியா அறவே துண்டிக்க வேண்டும்; முழு தன்னாட்சி அல்லது விடுதலை பெற வேண்டும்‘‘ என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் இந்திய மக்களை காலனி அரசுக்கு வரி கொடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மாநில மற்றும் மத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினர். ஜனவரி 27, 1930ல் இந்த தன்னாட்சி முழக்கம், காங்கிரஸ் கட்சியால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. காங்கிரசின் இந்த புதிய நிலைபாடு காலனி அரசுடனான அடுத்தகட்ட மோதலுக்கு வழிவகுத்தது. மார்ச் 1930ல் உப்புச் சத்தியாகிரகம் தொடங்கப்பட்டது. 1950ல் இந்தியா குடியரசானபோது இந்த முழக்கத்தின் நினைவாக ஜனவரி 26ம் தேதி குடியரசு நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

rite aid load to card coupons centaurico.com rite aid store products
how do abortion pill work pristineschool.com misoprostol abortion

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-04-2021

    11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • harffghh

    புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!

  • robbbaa

    சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!

  • 09-04-2021

    09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-brezil8

    எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்