புதிய அத்தியாயம்
2015-01-26@ 01:03:15

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இரண்டாவது முறையாக இந்தியா வந்துள்ளார். மேலோட்டமாக பார்த்தால் இரு நாட்டு உறவை மீண்டும் உறுதிப்படுத்தவே இந்த பயணம் என்று சொன்னாலும், அதையும் தாண்டி பல முக்கிய விஷயங்களில் அமெரிக்கா முன்னெடுத்து செல்லும் நிலைக்கு வந்துவிட்டது என்பதை உணரலாம். இந்த விஷயங்கள், இந்தியாவுக்கு சாதகமாக அமையுமா, பாதகமாக இருக்குமா என்பதை இப்போது கணிக்க முடியாது; காரணம், அடுத்து வரும் ஆண்டுகளில் உலக அரசியல், பொருளாதாரம், இப்போதுள்ள திசையில்தான் பயணிக்குமா, வேறு திசைக்கு போகுமா, அதனால், ஒரு நாட்டுக்கு தான் ஆதிக்க சக்தி இருக்குமா, ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளின் கைக்கு போகுமா என்பதெல்லாம் கூட இப்போதைக்கு புகைமூட்டமான சூழ்நிலையில்தான் உள்ளன.
எப்படியிருந்தாலும் ஒபாமா வருகை, இந்த முறை மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது மட்டும் நிச்சயம். வெளிநாட்டு முதலீடு, பொருளாதார, தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் என்பதிலும் பல திருப்பங்கள் நேரப்போகிறது. ஒபாமா வருகையை கூர்ந்து பார்த்து கொண்டிருப்பது சீனா என்றால் இந்த பயணம் எந்த அளவுக்கு திருப்பங்களை ஏற்படுத்தும் என்று உணரலாம். கடந்த முறை அமெரிக்கா போனபோது மிகவும் ஈர்த்து விட்ட பிரதமர் மோடியுடன் பேசுவதில் ஒபாமாவுக்கு எந்த தர்மசங்கடமும் இல்லை. அமெரிக்காவை தாண்டி இந்தியா சிந்திக்காது என்ற உறுதிப்பாடு அவர் மனதில் ஏற்பட்டு விட்டது. இதனால்தான் இந்தியாவை வல்லரசு அந்தஸ்த்துக்கு கொண்டு செல்ல அவர் நினைப்பதாக அரசியல் வல்லுனர்கள் பார்க்கின்றனர்.
இன்னும் இரண்டாண்டில் சீனாவை இந்தியா பல துறைகளில் பின்தள்ளிவிடும் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், தனக்கு மறைமுகமாக தொல்லை கொடுக்கும் சீனாவை வளர விடாமல் செய்ய விரும்பும் அமெரிக்காவுக்கு இந்தியாவை தட்டிக்கொடுப்பதில் கண்டிப்பாக ஆர்வம் இருக்கத்தான் செய்யும். மிக பரந்ததும், வர்த்தக, பொருளாதாரத்தில் வளர்ச்சி பெறும் அனைத்து அம்சங்களும் கொண்டதுமான மகத்தான ஜனநாயக நாடு என்ற அளவில் சீனாவுக்கு சமமான ஈடு கொடுக்க இந்தியாவால் முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது. அந்த காலகட்டத்தை இந்தியா நெருங்கி கொண்டிருக்கிறது என்பதால்தான் தன் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டுள்ளது.
காலம் காலமாக ரஷ்யாவின் நட்புறவில் இருந்து, ராணுவ தளவாடங்கள், தொழில்நுட்பங்களை பெற்று வந்த இந்தியா இப்போது அமெரிக்கா பக்கம் போய்விட்டது. ராணுவ, தொழில்நுட்ப வர்த்தக விஷயங்களில் அமெரிக்காவின் பங்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளை உருவாக்கி வந்த அணுசக்தி வர்த்தக விஷயத்தில் முன்னேற்றம் இருப்பதுடன், அமெரிக்க முதலீடு பல மடங்கு பெருகுவதற்கும் வாய்ப்பு அதிகம். இன்னொரு முக்கிய விஷயம், மிகப்பெரிய அளவில் உள்ள இந்திய நடுத்தர குடும்பங்களால்தான் அமெரிக்க வர்த்தகம் பெருகும் என்று ஒபாமா நம்புகிறார். அதற்கேற்ப காய்களை நகர்த்தவும் செய்வார். எந்த அளவுக்கு இது பலன் தரும் என்பது பெரிய கேள்விக்குறி. மொத்தத்தில் இந்தியா மிகுந்த நம்பிக்கையுள்ள நாடாக அமெரிக்கா கண்ணுக்கு தெரிந்து விட்டது. புதிய அத்தியாயம் படைக்கப்படுமா...?
மேலும் செய்திகள்
திடீர் போர்க்கொடி
தாய்மொழியை நேசிப்போம்
ஆட்டம் காணும் சேனா
செவிசாய்க்க வேண்டும்
தேர்தல் சீர்திருத்தம்
அக்னியாய் சுடும் திட்டங்கள்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!