அதிகாரமல்ல, அங்கீகாரம்
2015-01-24@ 01:03:02

இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தம் முழுமையாக செயல்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். தமிழீழம் கேட்டு விடுதலைப் புலிகள் அமைப்பு போரில் ஈடுபட்டது சரியா, தவறா என்ற வாதம் தற்போதும் தொடர்கிறது. இருப்பினும் இலங்கையின் வளர்ச்சியில் அங்குள்ள தமிழர்களின் பங்கு முக்கியமானது. அதைவிட சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் தங்களின் முக்கியத்துவத்தை தமிழர்கள் உணர்த்தினர். தமிழர்களின் வாக்குகள் மொத்தமாக கிடைத்ததால்தான் மைத்ரிபால சிறிசேன, புதிய அதிபராக அமர முடிந்தது என்பதை அவர் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், அதுதான் உண்மை என்பது அவருக்கே தெரியும்.
தமிழர்கள் வசிக்கும் மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் கடந்த 1987ம் ஆண்டு இந்தியா, இலங்கைக்கு இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி கொண்டுவரப்பட்டதே அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது சட்டத் திருத்தம். ஆனால் இதுவரை அது எழுத்து வடிவிலேயே உள்ளது. கடந்த 27 ஆண்டுகளில் இருந்த அரசுகள் அதை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை. இந்த நேரத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தையும் பார்க்க வேண்டும். வேல்ஸ், ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற பல்வேறு முடியரசுகள் ஒன்றாக இணைந்ததுதான் யுனைடெட் கிங்க்டம் என்கிற இங்கிலாந்து என்கிற பிரிட்டன். இதில் ஸ்காட்லாந்தைப் பிரித்து தனி நாடாக அறிவிக்கக் கோரி போராட்டங்கள் நடந்தன.
இதற்காக நடந்த வாக்கெடுப்பின்போது, பிரிட்டனுடன் இணைந்து இருக்கவே விரும்புவதாக ஸ்காட்லாந்து மக்கள் வாக்களித்தனர். தங்களுக்கு தேவை தனி நாடல்ல. தனி அதிகாரம், வசதிகள் போன்றவையே என்று ஸ்காட்லாந்து மக்களின் வாக்கெடுப்பு முடிவுகள் கூறுகின்றன. ஸ்காட்லாந்து நாடு சுதந்திரமாக செயல்படுவதற்குத் தேவையான அனைத்து அதிகாரங்களும் விரைவில் வழங்கப்படும் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்ததுடன் அதற்கான செயல்முறை, கால அட்டவணை தயாராகி வருகிறது. இதே நிலையில்தான் இலங்கையில் உள்ள தமிழர்கள் உள்ளனர். ஒடுக்கப்பட்டு வந்த இந்த மக்கள் எதிர்பார்ப்பது அதிக அதிகாரத்தை மட்டுமல்ல, அங்கீகாரத்தை தான்.
Tags:
Thalaiyangamமேலும் செய்திகள்
அலட்சியம் ஏன்?
விவசாயிகளுக்கு விஷ உணவு
உடனே களமிறங்குங்கள்
அதிமுகவும், ஊழலும்
மீண்டும் முதல்ல இருந்தா?
உரிமை உள்ளதா?
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!
பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!
சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!
13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்