SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்தம் நிறைவேற்றப்படும்: இலங்கை பிரதமர் உறுதி

2015-01-21@ 01:07:14

கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு, கூடுதல் அதிகாரத்தை வழங்கும் 13வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை, புதிதாக அமைந்துள்ள சிறிசேன அரசு நிறைவேற்றும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உறுதியளித்துள்ளார்.இலங்கையில், புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர், முதல்முறையாக இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேசியதாவது: இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் 13வது சட்ட திருத்தத்தை நாங்கள் முழுமையான கட்டமைப்புடன் நிறைவேற்றுவோம். ஜனநாயக சீர்திருத்தங்களை மேற்கொள்வது என்பது புதிய அரசுடைய 100 நாட்கள் திட்டத்தின் முக்கிய அம்சம். நாங்கள் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட வெவ்வேறு அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு. ஆனால், இலங்கையின் சர்வாதிகார குடும்ப ஆட்சிக்கு நாங்கள் முடிவு கட்டியுள்ளோம்.

அனைத்து அரசியல் கட்சிகளிடம் இருந்தும் கோரிக்கைகள், யோசனைகள, விமர்சனங்களை புதிய அரசு வரவேற்கிறது.தேசிய பிரச்னைகளை ஒன்றுபட்டு எதிர்கொள்வது என்பது நமக்கு ஒரு சவால். நாடாளுமன்ற வரம்புகளை மீறி, நமது பிரச்னைகளை கொண்டு செல்லக் கூடாது. ராஜபக்சே இருந்தபோது, இலங்கை நாடாளுமன்றம் கவலைக்கிடமான நிலை யில் இருந்தது. அதனை பலப்படுத்தக் கூடிய நடவடிக்கையில், புதிய அரசு ஈடுபடும். 3வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட, ராஜபக்சேவுக்கு அதிகாரம் அளித்த 18வது சட்ட திருத்தம் ரத்து செய்யப்படும். அரசு சிறப்பாக செயல்படும் வகையில், அரசியல் சாராத, சுதந்திரமாக இயங்கும் ஆணையங்கள் 19வது சட்ட திருத்தத்தின் மூலமாக அமைக்கப்படும். இவ்வாறு விக்ரமசிங்கே பேசினார்.

13வது சட்ட திருத்தம்
* 1987, ஜூலை 29ம் தேதி இந்தியா & இலங்கை இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதில், அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி, இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ஆகியோர் கையெழுத்திட்டனர்.
* இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் 13வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
* இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசுகளுக்கு கூடுதல் அதிகாரத்தை அளிக்க, இந்த 13வது சட்ட திருத்தம் வழிவகை செய்கிறது.
* இதன் மூலம், சட்டம் ஒழுங்கை பராமரிப்பது உள்ளிட்ட முக்கிய அதிகாரங்கள் மாகாண அரசின் வசம் ஒப்படைக்கப்படும் என்பதால், ராணுவத்தின் தலையீடு பெருமளவில் தவிர்க்கப்படும்.
* 13வது சட்ட திருத்தத்தை நிறைவேற்றுவதன் மூலமாக, இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பு, சம உரிமை, மரியாதை உள்ளிட்டவை கிடைக்கும் என நம்பப்படுகிறது.

sms spy app read spy apps free
prescription coupon card viagra online coupon viagra online coupon
drug coupon card prescription coupons drug discount coupons

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ramnjamaiii

  ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

 • nellai-16

  நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

 • nepallumbii

  நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

 • ooty-rose-exhi-14

  50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்