SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாதொருபாகன் நாவல் ஆசிரியர் விரக்தி என் புத்தகங்களை தீயிட்டு கொளுத்துங்கள்

2015-01-14@ 00:08:39

நாமக்கல்: பிரபல எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய மாதொருபாகன் நாவலில் பெண்கள் குறித்து இழிவாக கூறப்பட்டுள்ளதாக கூறி திருச்செங்கோட்டில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக கடையடைப்பு போராட்டமும் நடத்தினர். இதையடுத்து நேற்று முன்தினம் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், பெருமாள்முருகன் வருத்தம் தெரிவித்தார். இதனால், போராட்டக்குழுவினரும் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில்,  பெருமாள்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எழுத்தாளன் பெருமாள்முருகன் இனி இல்லை. அவன் கடவுள் அல்ல. ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான். மாதொருபாகன்’ நூலோடு பிரச்சனை முடியப்போவதில்லை.

வெவ்வேறு அமைப்புகள், தனிநபர்கள் நான் எழுதிய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். நான் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் அனைத்தையும் திரும்பப்பெற்றுக்கொள்கிறேன். இனி எந்த நூலும் விற்பனையில் இருக்காது. எனது நூலை வெளியிட்ட பதிப்பகங்களுக்கு உரிய நஷ்டஈடு அளிப்பேன். எனது நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்க தயார் இவ்வாறு பெருமாள்முருகன் தெரிவித்துள்ளார்.

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures
walgreens promo 64.239.151.187 free pharmacy discount cards
abilify and coke abilify maintena abilify and coke
how do abortion pill work cost for an abortion misoprostol abortion
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons

மேலும் செய்திகள்

Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்