பிரான்ஸ் வார இதழ் அலுவலகத்தில் காரில் வந்த 2 பேர் சுட்டதில் 12 பேர் பலி
2015-01-08@ 01:31:46

பாரிஸ்: மத நம்பிக்கைக்கு எதிராக செய்தி, கேலிசித்திரம் வெளியிட்டு வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வார இதழ் அலுவலகத்தில் நுழைந்த இரண்டு பேர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர் மூலம் இரண்டு பேர் நடத்திய தாக்குதலில் வார இதழின் ஆசிரியர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ளது சார்லி ஹெப்தோ என்ற வாரஇதழின் தலைமை அலுவலகம். நேற்று மதியம் அடுத்த இதழ் குறித்த ஆசிரியர் குழு ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு காரில் வந்த இரண்டு பேர், ஏ.கே. 47 துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர் கொண்டு சரமாரியாக சுட்டனர்.
அலுவலகத்துக்குள் நுழைந்தவர்கள் ஒவ்வொருவரையும் அவர்களுடைய பெயர்களைக் கேட்டு தெரிந்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆசிரியர் குழுக் கூட்டம் நடைபெற்ற அறைக்குச் சென்ற இருவரும் சரமாரியாக சுட்டனர். பின்னர் அங்கிருந்து வெளியேறி தப்பிக்க முயன்றனர். அப்போது சாலையில் இருந்த ஒரு போலீஸ்காரர், தன்னை விட்டுவிடும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவரையும் சுட்டுக் கொன்ற அந்த 2 பேர் தாங்கள் வந்த காரிலேயே தப்பிச் சென்றனர். தப்பிச் செல்லும்போது தங்களது மதத்துக்கு ஆதரவாகவும் அவர்கள் கோஷமிட்டுள்ளனர்.
முன்னதாக இந்தக் காரை கடத்திக் கொண்டு வந்த இவர்கள், சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஒருவர் மீது மோதி காயப்படுத்தினர். பின்னர் வாரஇதழ் அலுவலகத்தின் வாயிலில் நிறுத்திவிட்டு தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர். இந்த தாக்குதலில் வாரஇதழின் ஆசிரியர் ஸ்டீபன் சார்போனீர், கேலிசித்திரம் வரையும் கார்ட்டூனிஸ்ட்கள் ஜீன் காபு, பெர்னார்ட் டிக்னஸ் வெரியாக், ஜார்ஜ் வூலின்ஸ்கி உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் பாரிஸ் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை நோக்கி சுட்டனர். பதிலுக்கு அவர்களும் துப்பாக்கியால் சுட்டபடியே காரில் தப்பிச் சென்றனர். உயிரிழந்த 12 பேரில் இரண்டு போலீசாரும் அடங்குவர். குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிராகவும் தொடர்ந்து பல்வேறு செய்திக் கட்டுரைகள், கேலி சித்திரங்களை வெளியிட்டு வந்தது சார்லி ஹெப்தோ. இதற்காக பலமுறை தாக்குதல்களையும் சந்தித்துள்ளது. கடந்த 2006ல், மற்றொரு பத்திரிகையில் வெளியான கேலி சித்திரத்தை சார்லி ஹெல்தோ வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த 2011ம் ஆண்டு இதன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
இதுபோல் பல்வேறு தாக்குதல்களை இந்த வாரஇதழ் சந்தித்துள்ளது. இதன் ஆசிரியர் சார்போனீரை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டுவந்தால் பரிசு அளிக்கப்படும் என்று அல்காய்தா முன்பு அறிவித்திருந்தது. சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவரான அபு பாக்தாதி குறித்து சமீபத்தில் இந்த வாரஇதழில் விமர்சித்து எழுதப்பட்டிருந்தது. அதையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலாண்டே, பிரதமர் டேவிட் கேமரூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களும் இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
அமெரிக்காவின் இந்தியாவுக்கான தூதராக கார்செட்டி பதவியேற்பு: கமலா ஹாரிஸ் பங்கேற்பு
லண்டன் நாடாளுமன்ற சதுக்கம் அருகே காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டம்
புளோரிடா பல்கலை. அறங்காவலர் குழுவில் இந்தியர்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பதவியேற்பு
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் அரசு ஊழியர்கள் சீனாவின் `டிக்-டாக்’ செயலியை பயன்படுத்த தடை!
பாம்பே ஜெயஸ்ரீ குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் டிவிட்டரில் தகவல்!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி