SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆக்ராவில் மதமாற்றம் மாயாவதி எதிர்ப்பு

2014-12-11@ 00:04:11

மாநிலங்களவையில் மதமாற்ற பிரச்னையை நேற்று எழுப்பிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ‘‘ஆக்ராவில் உள்ள ஏழை முஸ்லிம்கள் 100 பேரிடம் ஆசைவார்த்தை கூறியும், கட்டாயப்படுத்தியும் இந்துவாக மாற்றும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்பான பஜ்ரங்தள் ஈடுபட்டுள்ளது. இது மிகவும் முக்கிய பிரச்னை. அரசியலமைப்பு சட்டத்தில் மதச் சுதந்திரத்துக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.  அனைத்து மதத்தையும் காக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு. ஆக்ரா சம்பவத்துக்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். கட்டாயப்படுத்தி மதம் மாற்றுதல் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள், இது தொடர்பாக பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதற்கு பதில் அளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ‘‘இச்சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச அரசு எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

இது சட்டம், ஒழுங்கு பிரச்னை என்பதால், இதற்கு மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இதில் எதுவும் செய்ய முடியாது. இச்சம்பவத்தில் அரசியல் காரணங்களுக்காக ஆர்.எஸ்.எஸ் பெயர் இழுக்கப்படுகிறது. இதை அவை குறிப்பில் இருந்து, அவைத் தலைவர் நீக்க வேண்டும்’’ என்றார். இதே பிரச்னை குறித்து விவாதிக்க மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுல்தான் அகமது ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தார். இதை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நிராகரித்தார்.

plavix plavix 300 plavix plm

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்