நடிகர் மீசை முருகேசன் மரணம
2014-11-09@ 01:32:35

சென்னை: பிரபல நடிகர் மீசை முருகேசன் சென்னையில் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 85. ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை‘, ‘உயிரே உனக்காக‘, ‘உன்னால் முடியும் தம்பி‘, ‘பெரியண்ணா‘ உட்பட சுமார் நூறு படங்களுக்கு மேல் நடித்தவர் மீசை முருகேசன். கடைசியாக, ‘பிரிவோம் சந்திப்போம்‘ படத்தில் நடித்திருந்தார். சென்னை வடபழனி குமரன் காலனியில் வசித்து வந்த முருகேசன், கடந்த சில நாட்களுக்கு முன் பாத்ரூமில் வழுக்கி விழுந்தார். இதில் அவர் தலையில் ரத்தக்கட்டு ஏற்பட்டது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரைச் சேர்த்தனர். அங்கு ஒரு நாள் சுயநினைவோடு இருந்த அவரை மருத்துவர்கள் வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கூறினர். வீட்டில் சுயநினைவின்றி இருந்த அவர் நேற்று மாலை மரணமடைந்தார். அவரது உடல் தகனம் இன்று நடக்கிறது.மறைந்த முருகேசனுக்கு கண்ணம்மா என்ற மனைவியும் ஜோதிகுமார், நாகராஜா என்ற மகன்களும் சரஸ்வதி, செல்வி ஆகிய மகள்களும் உள்ளனர்.
சிறு வயதிலேயே இசைத்துறையில் நுழைந்தவர் மீசை முருகேசன். அவர் தந்தை சுப்ரமணிய முதலியார் அந்த காலகட்டத்தில் பிரபல தவில் வித்வான். கடசங்கரி, முங்கோஸ், கொட்டாங்குச்சி உள்ளிட்ட சில இசைக்கருவிகளை மீசை முருகேசனே உருவாக்கி, ‘அபூர்வ தாளவாத்தியங்கள்‘ என்ற பெயரில் உலகம் முழுக்க இசைக்கச்சேரி நடத்தி உள்ளார்.இசை அமைப்பாளர்கள் சுப்பையா நாயுடு, ஜி.ராமநாதன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, குன்னக்குடி வைத்தியநாதன், லட்சுமிகாந்த் பியாரிலால் ஆகியோர்களிடம் பணியாற்றியுள்ள அவர், மீசையை பெரிதாக வைத்திருந்ததால் மீசை முருகேசன் என்று அழைக்கப்பட்டார்.
மேலும் செய்திகள்
பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட ஒப்பந்தப்படி தண்ணீர் திறக்க வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்
தேர்தல் ஆணைய உத்தரவை மதித்து மக்கள் வரிப்பணத்தில் விளம்பரங்கள் வெளியிடுவதை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்: ஆர். எஸ். பாரதி எம்.பி வலியுறுத்தல்
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை..!!
அறநிலையத்துறையை மிரட்டும் மோசடி பேர்வழிகள்: அதிகார மையமாக மாறுகிறார்களா?; பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூல்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் விரைவில் நல்ல தீர்வு: ஓபிஎஸ் எதிர்பார்ப்பு
இரண்டாம் கட்ட திட்டத்தில் மெட்ரோ வழித்தடங்களுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டது
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்