SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பர்த்வான் குண்டுவெடிப்பு : சென்னையை சேர்ந்த 3 பேருக்கு தொடர்பு

2014-10-16@ 03:26:12

சென்னை :  பர்த்வான் குண்டு வெடிப்பில் சென்னையை சேர்ந்த மூன்று பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, விசாரணை நடத்த தேசிய பாதுகாப்பு படை ஐஜி நேற்று சென்னை வந்தார்.மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் மாவட்டத்தில் வீடு ஒன்றில் கடந்த 2ம் தேதி குண்டு வெடித்தது. தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் வெடிகுண்டு தயாரித்தபோது குண்டு வெடித்ததில் சாகில் அஹமது, கோவன் ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர். ஹாசன் சாகிப் என்பவன் படுகாயம் அடைந் தான். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் நான்கு பேரை மேற்குவங்க மாநில சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இந்த விசாரணை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. இது, விசாரணையை தொடங்கி குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து தடயங்களை சேகரித்தது.

மேலும் முர்ஷிதாபாத்தில் உள்ள உயிரிழந்த சாகில் அஹமதுவின் வீட்டையும் சோதனையிட்டு, முக்கிய ஆவணங்கள் மற்றும் குண்டு தயாரிப்புக்கான முக்கிய கருவிகளை பறிமுதல் செய்தனர்.இந்த சோதனையிலும், மேற்கொண்டு தேசிய புலனாய்வு நடத்திய விசாரணையிலும் சென்னையை சேர்ந்த மூன்று பேருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு உள்ளதாக அதிர்ச்சி தகவலை தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த மூன்று பேருக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது.சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இதுதவிர, நேரில் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் பி.வி.ராமசாஸ்திரி ஐதராபாத்திலிருந்து நேற்று மாலை சென்னை வந்தார்.

சென்னையில் தங்கியிருந்து மூன்று பேரிடமும் அவர் நேரில் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.இதேபோல், பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசன் வழக்கில் கியூ பிராஞ்ச் அளித்த ஆவணங்கள் அடிப்படையில் ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன. அருண் செல்வராசனுக்கும், ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் ஜாகீர் உசேனுக்கும் உள்ள தொடர்பு பற்றி கியூ பிரிவு போலீசார் ஏராளமான ஆவணங்களை அளித்துள்ளனர். அதில் ஜாகீர் உசேன் மூலம் அருண் செல்வராசன் கள்ளநோட்டு பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான தகவல் அளிக்கப்பட்டிருந்தது.கடந்த 2012ம் ஆண்டு அருண் செல்வராசன் மாநகராட்சியில் போலி பிறப்பு சான்றிதழ் பெற்று அதன் மூலம் இந்திய பாஸ்போர்ட் எடுத்த தகவலும் தெரியவந்துள்ளது.

கியூ பிரிவு போலீசார் அளித்த தகவல்கள் அடிப்படையில் 200 கேள்விகளை தயார் செய்து அருண் செல்வராசனை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தினர். அதிலும் பல திடுக் கிடும் தகவல்களை அவர் அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கான ஆவணங்களுடன் தேசிய புலானாய்வு அமைப்பின் எஸ்பி பிராபகர் ராவ் டெல்லி சென்றுள்ளார். சென்னை வரும் ராமசாஸ்திரி அருண் செல்வராசனின் வழக்கு விசாரணை குறித்தும் ஆலோசிக்க உள்ளதால் டெல்லியிலிருந்து பிரபாகர் ராவ் இன்று சென்னை திரும்புகிறார். சென்னையில் தங்கியுள்ள ராமசாஸ்திரி சென்னை தேசிய புலனாய்வு செயல்பாடுகள் மற்றும் அருண் செல்வராசனின் வழக்கு விசாரணை குறித்து ஆலோசனை வழங்குவார்.

venlafaxine forum mdwguide.com venlafaxine 150
abortion pill procedures farsettiarte.it having an abortion
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்