SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு இன்று பிறந்த தின விழா

2012-01-30@ 08:35:19

மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் 61-வது பிறந்த தின விழா மதுரையில் இன்று பிரமாண்ட விழாவாக நடைபெறுகிறது. 16 ஆயிரத்து 661 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரிக்கு இன்று 61-வது பிறந்த தினமாகும். இதையொட்டி அவரை வாழ்த்த தென் மாவட்டம் முழுவதும் இருந்து தி.மு.க.வினர் மதுரையில் குவிந்த வண்ணம் உள்ளனர். மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகிலுள்ள ஐராவதநல்லூர் மகாராஜன் திருமண மண்டபத்தில் இன்று பிரமாண்ட விழா நடைபெறுகிறது.

இன்று காலை 7 மணிக்கு மதுரை சத்தியசாயி நகரிலுள்ள இல்லத்தில் மு.க.அழகிரி பிறந்த நாள் கேக் வெட்டுகிறார். 8 மணிக்கு நெல்பேட்டையிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். இதற்காக சிலை தி.மு.க. கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து விழா நடைபெறும் திருமண மண்டத்திற்கு அழைத்து வரப்படுகிறார். பின்னர் மேள தாளம் முழங்க வரவேற்று விழா மேடைக்கு அழைத்து செல்லப்படுகிறார். அங்கு கேக் வெட்டி திமுக தொண்டர்களுக்கு வழங்குகிறார். விழாவில் 16 ஆயிரத்து 661 ஏழைகளுக்கு வேட்டி சேலை, தையல் இயந்திரம், மாற்றுத் திறனாளிக்கு வண்டி, அயர்ன் பாக்ஸ், தொண்டர்களுக்கு நிதி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்குகிறார். அங்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு பொது நல அமைப்பினர் பங்கேற்கின்றனர். 'அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை' புத்தகம் 20 ஆயிரம் பேருக்கு வழங்க விழா மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழா மண்டபத்தில் 10 ஆயிரம் பேருக்கு அசைவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு கொடி தோரணங்கள், கட்டி எழுச்சிமயமாக காட்சி அளிக்கிறது. மதுரை நகரிலும், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மு.க.அழகிரியை வாழ்த்தி வண்ணச் சுவரொட்டிகள் பளிச்சிடுகின்றன.விழாவுக்கு வரும் வாகனங்களை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியிலும், விரகனூர் பகுதியிலும் நிறுத்த வேண்டுமென மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் தளபதி, மூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளனர். மதுரை நகரிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் இன்று இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்க தி.மு.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்