மதுரை ஆதீனமாக நித்யானந்தா நியமனம் இந்து அமைப்புகள் கொதிப்ப
2012-04-30@ 01:47:44

மதுரை : மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்தது எதிர்த்தும், ஆதீனத்தை மீட்பதற்காகவும், தமிழகத்திலுள்ள மற்ற மடாதிபதிகளை திரட்டி, போராட்டம் நடத்த இந்து அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை தேர்வு செய்தது தொடர்பாக ஆதீனத்திடம் நேரில் இந்த பிரசனை தொடர்பாக விளக்கம் கேட்க இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் மதுரை ஆதீன மடத்திற்கு வந்தனர். இவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
பேரூர் திருப்பானந்தாள் மடாதிபதியின் தூதுவராக சுரேஷ்பாபு மட்டும் ஆதீனத்தை பார்க்க சென்றார். வெளியே வந்த சுரேஷ்பாபு, இந்துஅமைப்புகளை சேர்ந்தவர்களை வெளியே அழைத்து வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்: மதுரை ஆதீனம் சூழ்நிலை கைதியாக உள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள மடாதிபதிகளை ஆலோசனை செய்து ஆதீனத்தை மீட்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.
இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில்,‘ நித்யானந்தா நியமனத்தை பிற மடாதிபதிகள் ஏற்கவில்லை. மடாதிபதிகள் அனைவரையும் ஒன்று திரட்டி நித்யானந்தாவை நீக்கும் வரை போராடுவோம்’ என்றார். சீடர்கள் , போலீசார் மோதல்: ஆதீன மடத்தில் இந்து அமைப்பினர் உள்ளே இருந்த போது சீடர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரண்டு தரப்பினரும் கோஷம் போட்டனர்.
இந்த பிரச்னை நடந்து கொண்டிருக்கும் போது மடத்தின் பின்வாசல் வழியாக நித்யானந்தா காரில் புறப்பட்டு சென்றார். பின்னணி என்ன: சைவ சமயத்தை பரப்பும் நோக்குடன் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் மதுரை ஆதீனத்தை தமிழ் திருஞானசம்பந்தர் தோற்றுவித்தார். இதன் 292,வது ஆதீனமாக அருணகிரிநாதசுவாமி இருந்தார். இளைய ஆதீனமாக பல ஆண்டுகள் பணியாற்றி, 291,வது ஆதீனம் மறைந்த பிறகு 1980,ல் ஆதீனம் பொறுப்பை ஏற்றார். சம்பிரதாயப்படி ஆதீனம் ஓலைச்சுவடி பார்த்து இளைய ஆதீனம் தேர்வு செய்யும் பழக்கம் உள்ளது. அதன்படி தான், தானும் தேர்வு செய்யப்பட்டதாக கூறி வந்தார்.
இந்நிலையில், 2004,ல் சுவாமிநாதன் என்ற 15 வயது சிறுவனை துறவறம் பூணச் செய்து இளைய ஆதீனமாக பட்டம் சூட்டினார். சிறிது காலத்தில் அவரை நீக்கி மடத்தை விட்டு வெளியேற்றினார். இதன் பிறகு 8 ஆண்டுகளாக தனக்கு வாரிசாக யாரையும் அவர் நியமிக்கவில்லை. ஒரு வாரம் முன்பு: இந்த நிலையில் பெங்களூரிலுள்ள நித்தியானந்தா ஒரு வாரத்திற்கு முன் மதுரை ஆதீனத்திற்கு வந்து சென்றார். இதன் பிறகு சில நாட்களில் மதுரை ஆதீனம் பெங்களூர் ஆசிரமத்திற்கு சென்று தங்கினார். திடீரென்று மதுரை 293,வது ஆதீனமாக நித்தியானந்தாவை தேர்வு செய்துள்ளதாக அறிவித்தார்.
நேற்று காலையில் மதுரை ஆதீனம், நித்தியானந்தாவுக்கு பட்டம் சூட்டினார். அப்போது நித்தியானந்தாவை புகழும் பாடல்கள் ஒலிபரப்பபட்டன. விழாவில் மரபுபடி தமிழகத்திலுள்ள வேறு எந்த ஆதீனங்களும் அழைக்கப்படவில்லை.
‘பணம் கொடுத்தார்’
விழாவில் ஆதீனம் அளித்த பேட்டி: நித்தியானந்தவை ஆதீனமாக தேர்வு செய்தது, நான் செய்த தவத்தின் புண்ணியம். தகுதியானவரை தான் தேர்வு செய்துள்ளேன். நானும், அவரும் தகப்பன், மகன் போல் ஆதீனத்தில் செயல்படுவோம். அவர் எனக்கு அளித்துள்ள பணம், குருவுக்கு செலுத்திய பாதகாணிக்கை.
‘4 கோடி தருவேன்’
நித்தியானந்தா கூறும்போது ,மதுரை ஆதீனத்திற்கு ரூ.1 கோடி கொடுத்துள்ளேன். மேலும் ரூ.4 கோடி கொடுப்பேன் என்றார்.
மேலும் செய்திகள்
சமூக வலைத்தளங்களில் தணிக்கை செய்யப்பட்ட வீடியோவை வெளியிட உத்தரவிடக் கோரி வழக்கு: பேஸ்புக், யூடியூப், கூகுள் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
சசிகலா அரசியலுக்கு வரவேண்டும்.. ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு : பிரேமலதா விஜயகாந்த் கருத்து
சீர்காழியில் தீரன் பட பாணி கொலை, கொள்ளை.. கொள்ளையர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்.. என்கவுண்டரில் ஒருவன் சுட்டுக் கொலை
சீர்காழி நகை கொள்ளை சம்பவம்..! தப்ப முயன்ற 3 கொள்ளையர்களில் ஒருவரை என்கவுண்டர் செய்தது காவல்துறை
நகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொலை செய்து 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை: சீர்காழியில் பரபரப்பு
துரோகிகளுக்கு மன்னிப்பு இல்லை முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!