துபாயில் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி சார்பில் கருத்தரங்கம்
2015-01-31@ 15:39:16

சமூக நலப் பணிகளை ஆற்றி வரும் சோஷியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் அமீரகப் பிரிவான இந்தியன் கல்ச்சுரல் சொஸைட்டியின் சார்பாக பொதுக் கூட்டம் பர்துபையில் உள்ள முஸல்லா டவரில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக SDPI தமிழ் மாநில பொதுச் செயலாளர் பி. அப்துல் ஹமீது அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பிஜேபி போன்ற மதவாத கட்சிகள் கலவரத்தையும், வன்முறையையும் தூண்டி பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி, வெறுப்பு அரசியலை செய்து வருகின்றனர். இதற்கு எதிரான தேசம் மற்றும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட மாற்று அரசியலை கையில் எடுக்க வேண்டும்” என்று அவர் தனது சிறப்புரையில் குறிப்பிட்டார். முன்னதாக இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் அமீரக மாநில பொதுச் செயலாளர் வலசை ஃபைஸல் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் தமிழ் மாநில துணைத் தலைவர் திருச்சி முபாரக் அவர்கள் தலைமை உரையாற்றினார்.
இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் அமீரக தேசிய பொதுச் செயலாளர் முஹம்மது முனவ்வர், துபை மண்டல தலைவர் சுஹைல் யூசுப், ஷார்ஜா மண்டல தலைவர் ஆடிட்டர் ஹசன் பாஷா, அபூதாபி மண்டல தலைவர் கியாசுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அடுத்து, சிறப்புரையாற்றிய SDPI கட்சியின் தமிழ் மாநில பொது செயலாளர் பி. அப்துல் ஹமீது அவர்கள் இந்திய அரசியலின் சாராம்சத்தையும், அண்ணல் அம்பேத்கர் வகுத்துத் தந்த அரசியலமைப்பையும் விவரித்து பேசினார். குறிப்பாக முஸ்லிம்கள் இந்திய நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று வரை ஏனைய அரசியல் கட்சிகளை சார்ந்தன் விளைவாக தொடர்ந்து ஏமாற்றபட்டார்கள் என்பதையும், அடிப்படை உரிமை மற்றும் சமூக பாதுகாப்பு என அனைத்திலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு இன்றைய அரசியல் கட்சிகள்தான் காரணம் என்பதையும் சுட்டிகாட்டினார். அதற்கான மாற்று சக்தியின் அரசியல் பரிணாமம்தான் சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா என்பதை விளக்கினார்.
அவர் தனது சிறப்புரையில் மேலும் கூறியதாவது: ஒரு புறம் காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகள் சிறுபான்மையினரை வாக்கு வங்கி அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றனர். மறுபுறம் பிஜேபி போன்ற மதவாத மக்கள் விரோத கட்சிகள் கலவரத்தையும், வன்முறையையும் தூண்டி பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி, வெறுப்பு அரசியலை செய்து வருகின்றனர். மேலும் இந்திய ஆட்சியாளர்கள் வாக்களித்த நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு பதிலாக, கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு சாதகமாகவே செயல்படுகிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து இந்திய வளங்கள் எல்லாம் அந்நிய முதலாளிகளுக்கு அடகு வைக்கப்படுகின்றன. தற்போது மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜகவின் மதவாதத்தை முன்னிறுத்தி செயல்படும் போக்கு இந்தியாவின் மதச்சார்பின்மையை கேள்விக்குறியாக்கியிருக்கின்றது. சிறுபான்மை மக்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் அச்சத்துடன் வாழும் நிலையை இந்த அரசு ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், மதவாத அரசியலை மாற்றியமைக்கவும், ஜனநாயகம் சாமனிய மக்களை சென்றடையவும் ஒரு போராட்ட அரசியலை கையில் எடுக்க நாம் தயாராக வேண்டும். இவ்வாறு அவர் தனது சிறப்புரையில் குறிப்பிட்டார். பின்னர் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. பார்வையாளர்கள் இந்திய அரசியல் நிலை குறித்தும், முஸ்லிம்களின் நிலை குறித்தும், SDPI குறித்தும் கேட்ட கேள்விகளுக்கு அப்துல் ஹமீது அவர்கள் பதில் அளித்தார். இறுதியாக, ஷார்ஜா மண்டல பொதுச் செயளாலர் அப்துர் ரஹ்மான் அவர்கள் நன்றியுரை நவின்றார். மொத்த நிகழ்ச்சியையும் நெல்லை ஏர்வாடி கவிஞர் பத்ருஸ் ஸமான் தொகுத்து வழங்கி நெறிப்படுத்தினார்.
மேலும் செய்திகள்
துபாயில் வரவேற்பை பெறும் ரஜினி உணவகம்..ரசிகர்கள் உற்சாகம்
தீபாவளியையோட்டி துபாயில் 16 நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள்
காந்தி பிறந்தநாளையொட்டி துபாயில் சிறப்பு நிகழ்ச்சிகள்... அமைதி மற்றும் சகிப்புதன்மைக்கான நடைபயணம்
இந்திய சுதந்திர தினத்தையோட்டி துபாயில் ரத்ததான முகாம்
ஐக்கிய அரபு எமிரேட்சில் முதல்முறையாக ரூபே வகை ஏடிஎம் கார்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
கேரளாவின் முக்கிய அரசியல் பிரமுகர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...