அபுதாபியில் எஸ்டிபிஐ மாநில பொது செயலாளருக்கு வரவேற்பு
2015-01-31@ 15:32:44

அபுதாபியில் இயங்கி வரும் அய்மான் சங்கம் சார்பில் SDPI கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி. அப்துல் ஹமீது அவர்களுக்கு அபுதாபி செட்டிநாடு ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். காயல் SAC ஹமீது வாழ்த்துரை வழங்கி நிகழ்ச்சியை அழகுற தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் கருத்துரையாற்றிய பி. அப்துல் ஹமீது அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதாவது: அமீரகத்தில் கடந்த 40 வருடங்களாக அய்மான் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு நலப் பணிகளையும், சமூக முன்னேற்றப் பணிகளையும் அய்மான் சங்கம் செய்து வருவது பாராட்டுதலுக்குரியது. தமிழகத்திலும், தேசிய அளவிலும் சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளும், பிரதிநிதித்துவமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு தேசிய அளவில் குரல் கொடுக்க, அதற்கான போராட்டங்களை முன்னெடுக்க எந்த அரசியல் கட்சிகளும் தயாராக இல்லை.
அரசியல் என்னும் அதிகாரப் பகிர்விற்கான தளம் வெற்றிடமாகவே உள்ளது. இந்த வெற்றிடத்தை SDPI கட்சி நிவர்த்தி செய்துள்ளது. தேசம் முழுக்க பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகளை நடத்திக் கொண்டிருக்கின்றது. SDPI கட்சி நேர்மறை அரசியலை கையில் எடுத்து தேர்தல் அரசியல் மற்றும் போராட்ட அரசியலைக் கொண்டு மக்களுக்கான சேவைகளை செவ்வனே செய்து வருகின்றது. இவ்வாறு அவர் தனது கருத்துரையில் கூறினார். அய்மான் சங்கத்தின் சார்பாக சமுதாய கட்சிகள் தாயகத்தில் ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டும் என்றும், ஒற்றுமையாக தேர்தல் களங்களை சந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு பதிலளித்த பி. அப்துல் ஹமீது அவர்கள், “ஒற்றுமைக்கும், ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும் SDPI கட்சியின் கதவுகள் என்றும் திறக்கப்பட்டே இருக்கின்றன. அதற்கான முயற்சிகளையும், முன்னேற்பாடுகளையும் SDPI கட்சி முன்னெடுத்திருக்கின்றது.
வரும் காலங்களில் நல்ல ஒரு மாற்றத்தை நம்மால் ஏற்படுத்த முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அபூதாபி காயல் நலச் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். DCW ஆலையின் ஆபத்தை உணர்ந்து SDPI கட்சி முன்னெடுத்த முற்றுகைப் போராட்டத்திற்கு அவர்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். அத்துடன் மாநில அளவிலும், தேசிய அளவிலும் இதன் பாதகங்களை எடுத்துச் சென்று DCW ஆலையின் அநீதியான போக்கை தடுக்க SDPI கட்சி ஆவன செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பி. அப்துல் ஹமீது அவர்கள், “மக்கள் நலனில் அக்கறை SDPI கட்சி இதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. DCW ஆலையினால் காயல் பட்டினம் மக்கள் மட்டும் அல்ல; அதன் சுற்று வட்டார மக்களும் புற்று நோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கு ஆட்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதன் பாதகங்களை அரசு மற்றும் மக்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கான போராட்ட வழிமுறைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
மாற்றம் காண இணைந்து உழைப்போம்” என்று கூறினார். நிகழ்ச்சியில் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் அபூதாபி மண்டல தலைவர் கியாசுதீன், அமீரக பொதுச் செயலாளர் முனவ்வர், மாநில பொதுச் செயலாளர் வலசை ஃபைஸல், துபை மண்டல தலைவர் ஸுஹைல் யூசுஃப் மற்றும் அய்மான் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இறுதியில் அய்மான் சங்க நிர்வாகி சல்மான் ஃபாரிஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
மேலும் செய்திகள்
துபாயில் வரவேற்பை பெறும் ரஜினி உணவகம்..ரசிகர்கள் உற்சாகம்
தீபாவளியையோட்டி துபாயில் 16 நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள்
காந்தி பிறந்தநாளையொட்டி துபாயில் சிறப்பு நிகழ்ச்சிகள்... அமைதி மற்றும் சகிப்புதன்மைக்கான நடைபயணம்
இந்திய சுதந்திர தினத்தையோட்டி துபாயில் ரத்ததான முகாம்
ஐக்கிய அரபு எமிரேட்சில் முதல்முறையாக ரூபே வகை ஏடிஎம் கார்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
கேரளாவின் முக்கிய அரசியல் பிரமுகர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!