லண்டன் நகரில் ஹாரோ தமிழ் சமூக சங்கம் சார்பில் பொங்கல் திருவிழா : தமிழர்கள் உற்சாகம்
2020-01-23@ 15:19:37

லண்டன் : இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள ஹாரோ பகுதியில் தமிழர்கள் பொங்கல் திருவிழாவை வெகுவிமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.ஹாரோ தமிழ் சமூக சங்கம் ஏற்பாடு செய்த இந்த திருவிழா, ஹாரோ கவுன்சில் சேம்பரில் நடைபெற்றது.
ஹாரோ தமிழர்கள் என்ற அமைப்பினர் 10வது முறையாக மிகச்சிறப்பாக நடத்திய இத்திருவிழாவில், 300-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர். தமிழ் குழந்தைகளும், பெண்களும், பரதம் மற்றும் கிராமிய நடனங்களான ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். மேலும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் ஹரோ மேயர், கவுன்சிலர் நிதின் பரேக், ஹாரோ கவுன்சில் தலைவர் கிரஹாம் ஹென்சன் மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.
Tags:
லண்டன்மேலும் செய்திகள்
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற வரலட்சுமி விரதம்: விளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்ட பெண் பக்தர்கள்
பெண்ணின் பெருமை போற்றும் பைக்கிங் குயின்ஸுக்கு ஜெர்மனியில் சிறப்பான வரவேற்பு
ஜெர்மனியில் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் தேர்த் திருவிழா
லண்டனில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்
சுவிட்சர்லாந்தில் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகோற்சவ விழா
லண்டனில் உள்ள அருள்மிகு ராஜராஜேஸ்வரி திருத்தலத்தில் தேரோட்டம் விழா
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!