SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்ணின் பெருமை போற்றும் பைக்கிங் குயின்ஸுக்கு ஜெர்மனியில் சிறப்பான வரவேற்பு

2019-08-07@ 17:07:02

ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சூரத்தைச் சேர்ந்த பைக்கிங் குயின்ஸ் இருவருக்கும் வரவேற்பு அளிக்கப்பட்ட்து.பெண் உரிமை மற்றும் பெண்ணின் பெருமையை உலகுக்குப் பறை சாற்றும் வகையில் சூரத்தை சேர்ந்த டாகடர். சரிகா மேத்தா மற்றும் திருமதி.ருதாலி இருவரும் இணைந்து ஐரோப்பா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஐரோப்பா முழுவதும் 25000 கிமீ சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இவர்கள் இன்று ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரில் உள்ள இந்தியத் தூதரகம் வந்தடைந்தனர். இந்தியத் தூதரக அதிகாரி மற்றும் அவரின் குழுவினர் இவர்கள் இருவரையும் சிறப்பாக வரவேற்றனர்.அதன் பின் அவர்களிடையே மகிழ்ச்சியான கலந்தாய்வு நடந்தது.சுவிஸ்சர்லாந்திலிருந்து ப்ளாக் பாரஸ்ட் வழியாக பிராங்பேர்ட் வந்தடைந்த இவர்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.கடந்த வருடம் டாகடர் சரிகா மேத்தா தலைமையில் மேலும் 40 பெண்கள் இணைந்து இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan-hospital

    பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

  • temple-dubai-6

    துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்