சென்னை மாணவிக்கு அமெரிக்கா தியேல் அறக்கட்டளையின் ஊக்க விருது
2018-07-09@ 16:42:08

சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் உள்ள தியேல் அறக்கட்டளையின் 2018ம் ஆண்டிற்கான தியேல் பெல்லோஷிப், சென்னையைச் சேர்ந்த 21 வயதான மாணவி அபர்ணா கிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது. உலகம் முழுவதிலுமிருந்த தேர்வு செய்யப்பட்ட 20 பேர் பட்டியலில் இவரும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கணிதத்தில் ஆர்வம் கொண்ட இவர் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மேலும் விளையாட்டுத் துறையிலும் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளார். ரகசிய குறியீடுகள் மற்றும் நாணயங்கள் தொடர்பான பிளாக்செயின் கிளப்பில் முன்னோடியாக திகழ்ந்த இவர், இந்த தொழில்நுட்பத்தை மாணவர்கள் மற்றும் நிறுவனங்களிடம் பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். மேலும் ரகசிய குறியீடு மற்றும் பொருளாதார ஆராய்ச்சிக்கான முதல் சோதனை நிலையத்தையும் இவர் ஏற்படுத்தினார். ஓமன், மெக்சிகோ, இந்தியா, ஹாங்காங் மற்றும் அமெரிக்காவில் பிளாக் செயின் பயிற்சி அளித்துள்ளார். தற்போது தியேல் அறக்கட்டளை ஊக்குவிருதைப் பெறுவதன் மூலம், உலகின் தலைசிறந்த ரகசிய குறியீடு நிபுணர்கள் வரிசையில் இடம் பெறுகிறார். இளம் வயதிலேயே நிறுவனங்களைத் தொடங்கவும், சிறந்த பெரிய வழிமுறைகளைக் கண்டறியும் திறமையுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த பெல்லோஷிப் வழங்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
கனடிய தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் நடத்திய சிறப்பு பொங்கல் விழா
சிகாகோவில் சத சண்டி ஹோமம்
வாஷிங்டனில் வட்டார தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுவன் Spell Bee போட்டியில் வெற்றி
அரிசோனாவில் ஸ்ரீ மஹா கணபதி ஆலய ராஜகோபுர கும்பாபிஷேகம்
வடஅமெரிக்காவில் சாக்கரமெண்டோ தமிழ் மன்றத்தில் தமிழ் புத்தாண்டு விழா
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!