சிங்கப்பூர் ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் வேம்பு அம்மன் விழா
2017-07-31@ 12:02:24

சிங்கப்பூர்: ஆடிப்பூர மகா பிரம்மோற்சவத்தையொட்டி சிங்கப்பூர் ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் முத்திரைத் திருவிழாவான ஸ்ரீ வேம்பு அம்மன் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஒரு மண்டல காலம் புனித நீரில் ஆதிவாசம் செய்த ஸ்ரீ வேம்பு அம்மன் பஞ்ச தீப வழிபாட்டுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பூக்கரகம், அக்கினிக் கப்பறை, கும்பம் என முப்பெரும் சக்திகளாக மலர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. வேம்பு அம்மன் வழிபாட்டிற்குரிய உட்பு, மிளகு முதலியவற்றை ஆலயமே வழங்கி மஞ்சள் நீராட்டினை பக்தர்கள் தாங்களாகவே செய்ய ஆலய நிர்வாகம் அனுமதியளித்தது. சிங்கப்பூரில் இத்தகு விழா இவ்வாலயத்தில் மட்டுமே நடைபெற்று வருவதால் அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
சிங்கப்பூரில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு பிரம்மாண்ட முழு உருவ வெள்ளி கவசம் சாற்றும் விழா
சிங்கப்பூரின் 200ம் ஆண்டு விழா சிறப்பு ஒருங்கிணைப்பு பூப்பந்தாட்டப் போட்டி
சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் நடத்திய கண்ணப்ப நாயனார் இசை நாடகம்
சிங்கப்பூரில் அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயத்தில் ஆனி மாத சதுர்த்தி திருவிழா
சிங்கப்பூரில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாளுக்கு சகஸ்ர கலசாபிஷேகம்
சிங்கப்பூர் ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் விளம்பி வருட மஹோத்சவத் திருவிழா
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்