SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நனி சைவம் போற்றும் வீகன் டயட்!

2022-07-07@ 15:45:55

நன்றி குங்குமம் டாக்டர்

வீகன் டயட்  இன்று உலகம் முழுதும் பிரபலம். இது முழுமையான ஒரு சைவ டயட். பால் முட்டை உட்பட எல்லாவிதமான அசைவப் பொருட்களையும் தவிர்த்து உண்பதே வீகன் டயட். இது வாழ்நாள் முழுமைக்குமான ஒரு மாற்று உணவுமுறை.

வீகன் டயட்டின் உணவு பிரமீடு என்பது, அனைவருக்கும் பொதுவானது. எடையை அதிகரிக்க விரும்புபவர்களுக்கும்கூட அது பொதுவானது. எனவே, எடையைக் குறைக்க விரும்புபவர்கள் அதற்கு ஏற்ப உங்களின் உணவுத் தேர்வை மாற்றி அமைக்க வேண்டும்.

கொழுப்புச்சத்துக்கு என்ன செய்வது?

வீகனில் அசைவம்தான் கிடையாதே தவிர கொழுப்பும், புரதமும், சோடியமும் உள்ள உணவுகள் நிறைய உள்ளன.  கொழுப்பு உடல் குறைப்புக்கு எதிரானது. எல்லோரும் உண்ணும் அளவுக்கு கொழுப்பை உடல் எடையைக் குறைக்க விரும்புவர்களும் உண்டால் பலன் கிடைக்காது.சோயாபால், சோயா (மீல் மேக்கர்), நட்ஸ் வகைகள் போன்றவற்றில் கொழுப்புச்சத்து நிறைந்துள்ளன. இவற்றின் கலோரி அளவைக் கணக்கிட்டு உங்கள் எடைக்குறைப்பின் திட்டமிடலுக்கு ஏற்ப இவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

முழுதானியங்கள்   

முழுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வதில் தவறு இல்லை. சில எடைக்குறைப்பு டயட்களில் முழுதானியங்களைச் சேர்க்க வேண்டாம் என்பார்கள். ஆனால், இதில் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் உள்ளிட்ட முக்கியமான உயிர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன என்பதால், அளவாக எடுத்துக்கொள்ளலாம்.அதே சமயம், வீகன் டயட் பிரமீட்டில் முழுதானியங்கள் ஒரு நாளுக்கு மூன்று முதல் ஐந்து கப் என்று இருந்தால், எடை குறைக்க விரும்புபவர்கள் குறைந்தபட்ச அளவான மூன்று கப்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தீட்டப்பட்ட தானியங்களோடு ஒப்பிடும்போது முழுதானியங்களில் பலன்கள் அதிகம். முழுதானியங்களில் ஆரோக்கியமான காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்கள் உள்ளன. இவை ரத்தத்தில் மெதுவாக கலந்து, உடலுக்குத்  தேவையான குளுக்கோஸை சிறிது சிறிதாக உடலுக்குத் தருகின்றன. இதனால், ரத்த சர்க்கரை அளவு சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு, எடை குறைப்பு நிகழ்வதோடு,  நம் செரிமானமும் மேம்படுகிறது. எனவே, தீட்டப்பட்ட தானியங்களுக்குப் பதிலாக முழுதானியங்களை அளவாகப் பயன்படுத்தலாம்.

சர்க்கரைக்கு தடா!

சர்க்கரை உடல் குறைப்புக்கு எதிரானது. எனவே, அதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். மேலும் அளவுக்கு அதிகமாக சர்க்கரையை எடுத்துக்கொள்வது உடலில் ஈஸ்ட் உற்பத்தியை அதிகரிக்கும். ஈஸ்ட் உற்பத்தி உடல் பருமனை உருவாக்கும். எடைக் குறைப்புக்கு எதிராகச் செயல்படும்.பழச்சாறுகளைத் தவிர்க்க வேண்டும். ஜூஸ் என்பது உடலில் சர்க்கரையைச் சேர்ப்பதற்கான வழிகளில் ஒன்று. பழங்கள் நம் உடலுக்கு அவசியமானவை.

அதில் உள்ள வைட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துகள், நார்சத்துக்கள் அவசியம் நம் உடலுக்குத் தேவை. ஆனால், பழங்களை ஜூஸாகக் குடிக்கும்போது இந்த சத்துக்கள் சிதைந்துவிடுகின்றன. மேலும், அவற்றில் உள்ள ஃப்ரக்டோஸ் எனும் சர்க்கரை மட்டுமே உடலுக்குக் கிடைக்கிறது. எனவே, பழங்களை கடித்து, மென்று உண்பதே ஆரோக்கியம்.கீரைகள், காலிஃபிளவர், புரோகோலி, முட்டைக்கோஸ் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றில் கால்சியம் நிறைந்துள்ளது. கால்சியம் எடை குறைப்புக்கு மிகவும் அவசியம்.

தண்ணீர் அவசியம்!

தினசரி 6-12 டம்ளர் தண்ணீர் பருகுங்கள். உணவில் உள்ள நார்ச்சத்து முழுமையாகச் செயல்பட தண்ணீர் மிகவும் அவசியம். நீர்ச்சத்து நிறைந்த பூசணிக்காய், செளசெள, சுரைக்காய், தர்பூசணி போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வதும் நல்லதே.

நட்ஸ் நல்லது!


நட்ஸ் உடலுக்கு மிகவும் அவசியம். அவற்றில் வீகன் புரோட்டின் நிறைந்துள்ளது. மேலும், உடலுக்குத் தேவையான என்சைம்கள், நுண்ணூட்டச்சத்துகளும் இவற்றில் உள்ளன. வறுக்கப்பட்ட நட்ஸ் சுவையானது மட்டும் அல்ல உடலில் புரத்தத்தையும் சற்று அதிகரிக்கும். எனவே, வறுக்கப்பட்ட, வறுபடாத நட்ஸ் இரண்டையுமே சாப்பிடலாம். ஆனால், எடை குறைப்புதான் இலக்கு என்றால்,  தினசரி கால் கப் நட்ஸுக்கு மேல் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி அவசியம்!

வீகன் டயட்டில் எடைக்குறைப்பு என்பது உடற்பயிற்சி இல்லாமல் முழுமையடைவது இல்லை. தினசரி அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது என்பது எடைக்குறைப்புக்கு அழகான வழி. 10 நிமிடங்கள் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள், 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது ஏதேனும் உடற்பயிற்சி செய்வது நல்லது. ஏரோபிக்ஸ், சைக்கிளிங், டிரெட் மில் பயிற்சிகளும் செய்யலாம்.

தொகுப்பு: யுவராஜ்

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்