சுறுசுறுப்பான குழந்தைகளையும் முடக்கும்!
2015-06-30@ 15:40:59

நூடுல்ஸ் சிக்கல்ஸ்
மேகி நூடுல்ஸை விரும்பிச் சாப்பிடும் குழந்தைகள் மற்ற நிறுவன நூடுல்ஸை திரும்பிக் கூட பார்ப்பதில்லை. இப்படியாக தன் சுவையால் குழந்தைகளை வசியப்படுத்தியிருக்கும் நூடுல்ஸ் சுவையூக்கிகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து கூறுகிறார் குழந்தைகள் நல நிபுணர் ஆத்மார்த்தன்...
‘‘மோனோ சோடியம் க்ளூட்டோமேட் உப்பு அதிக அளவு சேர்ப்பதுதான் நூடுல்ஸின் மிகுசுவைக்கு காரணமாகும். பன்றியின் குடலில் உள்ள தேவையற்ற அமினோ அமிலங்களில் இருந்து மோனோ சோடியம் க்ளூட்டோமேட் உப்பை தயாரிக்கிறார்கள். நல்ல சுவைதான் விற்பனைக்கு அடித்தளமாக இருக்கிறது என்பதால் உணவுப் பொருட்களில் சேர்க்கவே கூடாத இந்த உப்பை 67 சதவிகிதம் வரையிலும் சேர்க்கிறார்கள். இதனால் குழந்தைகளோடு, பெரியவர்களும் கூட இதன் சுவைக்கு அடிமையாகிவிடுகிறார்கள்.
நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருப்பதற்காக மெழுகுப்பூச்சு செய்யப்படுகிறது. இந்த மெழுகானது உடலை விட்டு வெளியேற குறைந்தது 4 நாட்கள் ஆகும். குறிப்பிட்ட நூடுல்ஸில் 17 பங்குகள் காரீயம் பயன்படுத்தப்படுகிறது. அளவுக்கு அதிகமான இந்தக் காரீயம் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி, கை கால் உதறல், நடுக்கம், மன இறுக்கம் ஆகியவற்றை கொண்டுவரும். இதனால் குழந்தைகளின் இயல்பான சுறுசுறுப்பை பாதித்து முடக்கிப்போடும்.
மோனோ சோடியம் க்ளூட்டோமேட் உப்பானது குழந்தைகளின் உடலில் அதிகம் சேர்ந்தால் நச்சுத்தன்மையை அதிகமாக்கி மைக்ரேன் என்னும் ஒற்றைத் தலைவலியை உருவாக்கும். இதயத் துடிப்பை அதிகப்படுத்தி இதய நோய்கள், மிகை ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கும் காரணமாகும்.
நூடுல்ஸ் மட்டுமல்ல... பாக்கெட்டிலும் டின்னிலும் அடைத்து வரும் பதப்படுத்தப்பட்ட எந்த உணவு வகைகளையும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்கக் கூடாது. வீட்டில் அளவான உப்போடு சமைத்த சத்தான உணவுகளையே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்...’’
மேலும் செய்திகள்
சருமத்தை பாதுகாப்பது எப்படி?
டீடாக்ஸ் செய்வது எப்படி?
தொடர் சிகிச்சைகள் அவசியமா?
உணவுமுறை எப்படி இருக்க வேண்டும்?
ஆண்களின் அவதி...
கோடை கால குறிப்புகள்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!