மின்சாரக் கண்ணா
2015-06-16@ 12:49:29

முதல் உதவி
‘மின்சாரம் தாக்கி பலி’ என்பது நாளிதழ்களில் தவறாமல் இடம்பெறுகிற செய்தியாகி விட்டதைப் பார்க்கிறோம். வீடு, தொழிற்சாலை, சாலை எனப் பல இடங்களிலும் எதிர்பாராத நேரத்து மின்சார விபத்து தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மின்சார தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவியாக எவற்றை செய்ய வேண்டும்? எவற்றைத் தவிர்க்க வேண்டும்? விளக்குகிறார் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் சத்யா காளியண்ணன்.
மின் தாக்குதலுக்கு உள்ளானவரை காப்பாற்ற போகிறவர்கள், முதலில் அவரை எந்தக் காரணம் கொண்டும் நேரடியாகத் தொடக்கூடாது. மெயின் ஸ்வி ட்சை ஆஃப் பண்ணி மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும். வோல்டேஜ் அதிகமாக இருக்கும்போது, பிளக் பாயின்ட், ஸ்விட்ச், எலெக்ட்ரிகல் சர்க்யூட் போன்ற மின்சார உபகரணங்களில் இருந்து அவரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இதற்கு கண்டிப்பாக மரத்தால் செய்யப்பட்ட பொருட்களைத் தான் பயன்படுத்த வேண்டும்.
தாக்குதலுக்கு ஆளானவரைச் சுற்றி தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உயர மான இடத்தில் இருந்து மின்சாரம் தாக்கி கீழே விழும்போது, கழுத்துப் பகுதியில் அடிபட நிச்சயம் வாய்ப்பு உள்ளது. எனவே, உயரமான இடங்களில் இருந்து மின்சாரம் தாக்கி கீழே விழுந்தவரின் கழுத்தை அசைக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
அவருக்கு சுயநினைவு உள்ளதா? எந்தவித சிரமமும் இல்லாமல் சுவாசிக்க முடிகிறதா? இதையெல்லாம் பரிசோதனை செய்ய வேண்டும். வீட்டில் உள்ளவர்களின் உடலில் ஈரப்பதம் இருந்தாலும், பாதுகாப்பான காலணிகள் அணியாமல் இருந்தாலும் வீட்டில் உபயோகப்படுத்தப்படும் குறைந்த அளவு மின்சாரத்தாலும் ஆபத்து ஏற்படும். மின்சாரம் தாக்கி சுயநினைவு இழந்தவர்கள், சுவாசிக்க சிரமப்படுபவர்கள், நெஞ்சுவலி, படபடப்பு, தீக்காயங்களால் அவதிப்படுபவர்கள், மின்சார தாக்குதலுக்கு ஆளான குழந்தைகள், தாய்மை அடைந்த பெண்கள் ஆகியோரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
பொது இடங்களில் யாராவது மின்சாரம் தாக்கப்பட்டு கிடந்தால், உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு மூச்சு சுவாசம் மற்றும் நாடித்துடிப்பு சீராக இல்லையென்றால், முதலுதவி செய்ய தெரிந்தவர்கள் நெஞ்சை அழுத்திவிடுதல் என்ற Cardiopulmonary resuscitation என்ற C.P.R. முதலுதவி சிகிச்சையை செய்வது அவசியம். மயக்கமாக இருப்பவர்களுக்கு வாய் வழியாக சாப்பிட எதுவும் கொடுக்கக்கூடாது.அவ்வாறு கொடுக்கப்படும் உணவுப் பொருளால் சுவாசக் குழாய்க்குள் அடைப்பு ஏற்பட்டு நிலைமை இன்னும் மோசமாகும்.
மின்சார தாக்குதல் காரணமாக உடலில் ஏற்பட்ட தீக்காயங்களை துணியால் சுற்றக்கூடாது. தீப்புண்கள் மீது ஐஸ்கட்டி வைப்பதோடு, குளிர்ந்த நீரையும் மெதுவாக ஊற்றலாம். கரன்ட் ஷாக்கால் உள்ளுறுப்புகள் பாதிப்பு அடைய வாய்ப்புகள் அதிகம். முக்கியமாக, இதயம், மூளை, சதைப் பகுதிகள் பாதிப்பு அடையும். கிட்னியும் பாதிக்கப்படலாம்.மின்சார தாக்குதலுக்கு உள்ளானவர்களின் முகத்தில் தண்ணீர் தெளிக்கக் கூடாது. வலிப்பு மாதிரி அவர்களுக்கு ஏற்பட்டால், இரும்புப் பொருள் எதுவும் கொடுக்கக் கூடாது.
அவர்களை இடதுபுறமாக படுக்க வைப்பது நல்லது. கரன்ட் ஷாக் காரணமாக கை, கால்களை உதறும்போது எலும்புகள் உடைய வாய்ப்பு உள்ளது. எனவே, கை, கால்கள் இயல்புக்கு மாறான நிலையில் இருந்தால் அவை அசையாமல் இருக்கும்படி நீளமான பொருளுடன் சேர்த்து கட்டி மருத்துவமனைக்கு கொண்டு வருவது நல்லது. முதலுதவி சிகிச்சையைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு வந்த பிறகும் சுவாசம், இதயத்துடிப்பு சீராக இல்லையென்றால், C.P.R. முதலுதவி சிகிச்சையைத் தொடர்ந்து, உரிய சிகிச்சைகள் கொடுக்க வேண்டும்.
மின்சார தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு இதயத்துடிப்பில் (ECG) மாற்றம் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். அடிப்படையான ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும். மின்சார தாக்குதலில் சதை அதிக பாதிப்பு அடைந்து உள்ளதா என்பதை சிறுநீர் பரிசோதனை மூலமாகவே அறிய முடியும். முதலுதவி எனும் பெயரில் தவறாக எதுவும் செய்வதைவிட, நேரத்தை வீணாக்காமல் உடனே மருத்துவமனைக்கு கொண்டு வருவது நல்லது.’’
Tags:
'Electric attacking sacrifice' in the newspapers regularly see vittataip ceytiyaki mandate. House factory road manyமேலும் செய்திகள்
அதிகரிக்கும் எலும்புமுறிவு...
பார்க்கின்ஸன் ப்ளஸ்...
திடீர்னு மூச்சடைச்சா என்ன பண்ணுவீங்க?
அரிப்பை போக்கும் ஒளிக்கதிர்கள்
குதிகால் வலிக்கு தீர்வு
உடலுக்கும் மனசுக்கும் ரீசார்ஜ்!
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!