குழந்தைகள் நலம்: ஈரம்!
2015-03-25@ 15:40:58

இன்றைய எந்திரத்தனமான வாழ்க்கை சூழலில், வீட்டில் பாட்டி, தாத்தா போன்ற அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் இல்லாத நிலையில் குழந்தையை நல்லபடியாக வளர்த்தெடுக்க இளம் தாய்மார்கள் படுகின்ற பாடு கொஞ்சநஞ்சமல்ல. அதுவும், அடிக்கடி உடுத்தி இருக்கிற ஆடையை அசிங்கப்படுத்தி, படுக்கையை ஈரமாக்கும் குழந்தை என்றால், சொல்லவே தேவையில்லை. உடை மாற்றுதல், படுக்கையை சுத்தம் செய்தல், குழந்தை அசிங்கப்படுத்திய துணிகளை துவைத்தல் என வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டே இருக்கும்... இவற்றோடு, ‘யூரினரி இன்ஃபெக்ஷன்’ எனும் சிறுநீரகத் தொற்று, சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பும் சேர்ந்து கொள்ளும்.
‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பார்கள். அதனால், பெற்றோர் குழந்தையின் சிறுநீர் பிரச்னையில் கவனமாக இருக்க வேண்டும். இந்த ‘ஈரப்’ பிரச்னையைத் தடுக்க, அதில் இருந்து விடுபட, குழந்தை நல மருத்துவர் ஜெயகுமார் ரெட்டி தகுந்த ஆலோசனை அளிக்கிறார். ‘‘பிறந்த குழந்தைகள் சிறுநீர் போவதற்கு முன் அழுவது பற்றிதான் பெரும்பாலான பெற்றோருக்கு சந்தேகம் வருகிறது. பிறந்த குழந்தைகள் இயற்கை உபாதையான சிறுநீர் கழிப்பதற்கு முன் அழுவது இயல்பான செயல். அதில் ஒன்றும் தவறில்லை. உண்மையில், பிறந்த குழந்தை ஆண், பெண் என எந்தப் பாலினத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், சொட்டுச் சொட்டாக சிறுநீர் கழிப்பதுதான் முக்கிய பிரச்னை.
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மூன்றிலிருந்து 6 மாதம் வரை சிறுநீர்பை, சிறுநீர் வெளியேறும் துளை இரண்டும் ஒன்றாக வேலை செய்யாது. இது குழந்தையின் ஒன்றரை வயது வரை நீடிக்கும். ஆண் குழந்தைகளுக்கு சிறுநீர் வெளியேறும் இடம் இறுக்கமாக இருக்கும். இதன் காரணமாக, சிறுநீர் கழிப்பது மிகவும் சிரமமாக இருக்கும். 1 வயது வரை சிறுநீர் வெளியேறும் இடம் இறுக்கமாக இருப்பது இயல்பானது. அதனால், குழந்தைகளுக்கு ஒரு பிரச்னையும் ஏற்படாது. அதற்குப்பிறகும், சிறுநீர் வெளியேறும் இடம் ‘டைட்’ ஆக இருந்தால்தான் பிரச்னை.
இதனால் குழந்தைகளுக்கு யூரினரி இன்ஃபெக்ஷன் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. சிறுநீர் உடலிருந்து சீராக வெளியேற முடியாத காரணத்தால், பிளாடருக்குள் போய் மீண்டும் கிட்னியை அடையும். இதனால் குழந்தைப் பருவத்திலேயே கிட்னி ஃபெயிலியர் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பிறந்த குழந்தைகள் 6 மாதம் வரை ஒரு நாளில் 8 முதல் 10 முறை சிறுநீர் போகும். அதன் பிறகு, 5 அல்லது 6 முறை சிறுநீரை வெளியேற்றும். 1 வயது கடந்த குழந்தைகள் ஒரு நாளில் மூன்றிலிருந்து 5 தடவை சிறுநீர் போகும்.
3 மணி நேரத்துக்கு ஒரு தடவை யூரினை வெளியேற்றிவிட்டு, சிறுநீர்பையை காலியாக வைத்திருக்க வேண்டும். இந்தப் பழக்கம் வருவதற்கு 2 வயதில் இருந்தே பயிற்சி கொடுக்க வேண்டும். குழந்தைகளிடம் வெறுமனே ‘பாத்ரூம் போய்ட்டு வா’ என்றால் போகாது. பெற்றோரும் குழந்தையுடன் சேர்ந்து பாத்ரூம் சென்று வர வேண்டும். அம்மா, அப்பா அறையிலோ, பாத்ரூமுக்கு வெளியிலோ நின்று கொண்டு, ‘யூரின் பாஸ் பண்ணிவிட்டு வா’ என்றால் குழந்தைகள் போகாது. தன்னை அதட்டுவதாகத்தான் குழந்தைகள் புரிந்து கொள்ளும். குழந்தைகளுக்கு உணவு உண்ணும் பழக்கம் இயல்பாக வரவேண்டும் என்பதற்காக, எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுகிறோம் அல்லவா? அதைப்போன்றுதான், குழந்தைகளுக்குத் தனியாக சிறுநீர் கழிக்கும் பழக்கம் வரும்வரை பெற்றோரில் எவரேனும் ஒருவர் குழந்தையுடன் பாத்ரூம் சென்றுவருவது நல்லது.
3 அல்லது 4 மணிக்கு ஒரு தடவைகுழந்தைகள் சிறுநீர் கழிக்க பழக்கப்படுத்த வேண்டும். சிறுநீர் கழிக்கும் நேரங்களில் குழந்தைகளை ‘சீக்கிரம் சீக்கிரம்’ என அவசரப்படுத்தக் கூடாது. போதுமான கால அவகாசம் கொடுக்க வேண்டும். இப்படி குழந்தைகள் தானாகவே சிறுநீர் கழிக்கிற பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
5 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளுக்கு சளி, இருமல் போன்றவை இல்லாமல் காய்ச்சல் மட்டும் இருந்தால், யூரினரி இன்ஃபெக்ஷன் இருக்கலாம். வீட்டில் ஒரு குழந்தைக்கு கிட்னி பிராப்ளம் இருந்தால் மற்றொரு குழந்தையையும் பரிசோதனை செய்வது நல்லது.
1 வயது வரை குழந்தைகளுக்கு படுக்கையில் சிறுநீர் கழிப்பது தெரியாது. ஒரு வயதைக் கடந்த பிறகு குழந்தைகளுக்கு படுக்கையை ஈரமாக்குவது தெரியும். 2 வயதுக்கு மேலே, குழந்தைகளால் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்த முடியும். வாரத்தில் 2 தடவையாவது குழந்தைகள் படுக்கை மற்றும் போர்வைகளை ஈரப்படுத்தும். இப்பழக்கம் 5 வயது வரை நீடிக்கும். சில குடும்பங்களில், 10 வயது வரை கூட படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கும். இதற்கும் பரம்பரைத்தன்மைக்கும் தொடர்பு உள்ளது.
குழந்தைகள் படுக்கையை ஈரமாக்குவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆழ்ந்த உறக்கம் இல்லாமை, சிறுநீர்பை அளவில் சிறியதாக இருத்தல் போன்றவை முக்கிய காரணங்கள். இப்பழக்கத்தைத் தடுப்பது மிகவும் எளிதான செயல். மாலை 6 மணிக்குமேல், குழந்தைகள் கேட்டால்தான் குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். இரவில் குளிர்பானங்கள், ஜூஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். படுக்கை அறையில் ஏ.சி. அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்து உள்ள உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். மாலை வேளையில் கண்டிப்பாக டாய்லெட் போக வைக்க வேண்டும். தூங்கச் செல்லும் 1 மணி நேரத்துக்கு முன்பும் படுக்கச் செல்லும் வேளையிலும் மறக்காமல் சிறுநீர் கழிக்க செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், குழந்தைகளிடம் உள்ள தேவையில்லாத எந்தப் பழக்கத்தையும் எளிதாக மாற்றலாம்...’’
Tags:
In the context of today's mechanical life home grandmother grandfather as well as the development of the child in the absence of experienced adults and young mothersமேலும் செய்திகள்
நவீன குழந்தை வளர்ப்பும்... நச்சரிக்கும் பிரச்சனைகளும்!
டிஜிட்டல் நன்மையை நோக்கி குழந்தைகளை வழிநடத்த வேண்டும்!
குழந்தைகளை ஆக்டிவாக்கும் கலர்ஃபுல் ஆக்டிவிட்டிஸ்!
பெற்றோர்களே உஷார்!: Chubby Cheeks பாப்பாக்கள்...
சிசுவின் சீரற்ற பாதம்...பெற்றோர்களே கவனியுங்கள்!
குழந்தைகளின் பேச்சு குறைபாடு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!