குழந்தைகளுக்குமா இந்தப் பிரச்சனை?
2015-02-03@ 17:10:42

மனசே... மனசே...
குழந்தை அடிக்கடி பொம்மைகளை போட்டு உடைத்தால், சில பெற்றோர் அதை தவறான நடத்தை என கண்டிப்பார்கள். சிலரோ, அதை தங்கள் குழந்தையின் சுதந்திரத்தின் வெளிப்பாடு என நினைத்துக் கொள்வார்கள். பொதுவாகவே பெற்றோர், தங்கள் குழந்தை சக வயது குழந்தைகள் போல இல்லாமல் வித்தியாசமாக நடந்துகொண்டாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. வளர வளர தானாகவே சரியாகிவிடும் என எண்ணுவார்கள்.
குழந்தைகளுக்கு ஏற்படும் மனநலச் சிக்கல்கள் ‘நரம்பியல் வளர்ச்சி சார்ந்த (NeuroDevelopmental Disorders) பிரச்னைகள்’ எனக் கூறப்படுகின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் மனநல பாதிப்புகள், ஒருவருக்கு பிற்காலத்தில் ஏற்படவிருக்கும் மனநலக் கோளாறுகளை முன்னறிவிக்கும் விதமாகவும் பல நேரங்களில் அமையும். குழந்தை பிறந்து வளரும் போது, இவ்வுலகில் வாழ உதவுகின்ற பல்வேறு திறன் களையும் கற்றுக் கொள்கிறது. ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் ஒவ்வொரு திறன்களை (முதல் அடியை எடுத்து வைப்பது, முதல் முறை சிரிப்பது...) கற்றுக் கொள்கிறது. இத்திறன்பாடுகள் ‘வளர் மைல்கற்கள்’ (Developmental Milestones ) எனக் குறிப்பிடப்படுகின்றன.
குழந்தைகள் வளரும் போது கற்கும் திறன்களை 5 வகையாக பிரிக்கலாம்.
1. மொத்த இயக்க திறன்கள் (உட்காரு தல்/தவழுதல், ஓடுதல்...)
2. நேர்த்தியான இயக்க திறன்கள் (கைகளைக் கொண்டு சாப்பிடுதல், வரைதல்...)
3. சமூக திறன்கள் (சிரித்தல், பாசம் காட்டுதல், குடும்ப நபர்களுடன் நல்லுறவோடு இருத்தல், உணர்ச்சிகளை வெளிக்காட்டுதல்/ உணர்ச்சிகளை புரிந்து கொள்ளுதல்...)
4.பேச்சு/மொழித் திறன்கள் (வார்த்தைகளை உபயோகப்படுத்துதல், சைகை செய்தல், மற்றவர் பேசுவதைப் புரிந்து கொள்ளுதல்...)
5.அறிவுத்திறன்கள் (பகுத்தறிவு, நினைவாற்றல், சிந்தனை, பொம்மையை எடுக்க அதை நோக்கித் தவழுதல்...)
பொதுவாக எல்லா குழந்தைகளும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சில திறன்களைக் கற்றுக்கொண்டு வளர்ச்சியடைகிறார்கள். எனினும், குறிப்பிட்ட மைல்கற்களை அடைவதில் ஒவ்வொரு குழந்தைக்கும் சற்று வேறுபாடு இருக்கும். ஒரு குழந்தை தன் வயதொத்த குழந்தையிடமிருந்து குறிப்பிட்ட மைல்கற்களை அடைவதில் மிகுந்த தாமதம் காட்டினால் (6 மாதத்துக்கும் மேல்), அதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். சில குழந்தைகள் தாமதமாக மைல்கற்களை அடையலாம். மைல்கற்களை அடையாமலேயே போகும் வாய்ப்பும் உண்டு. குழந்தை வளர்ச்சியில் ஏற்படும் இவ்விதத் தாமதம், பெரும்பாலும் நீண்ட கால வளர்ச்சி அல்லது கற்றல் பிரச்னையின் ( Developmental/learning disability) அடையாளமாக இருக்கலாம். சில குழந்தைகளுக்கு ஒரு திறன்பாட்டில் மட்டும் தாமதம் ஏற்பட்டிருக்கலாம்... அல்லது பல திறன்பாடுகளிலும் ஒரு சேரத் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். உதாரணமாக... பேச்சு/மொழித் திறனில் தாமதம் ஏற்பட்டால், கூடவே, அறிவு மற்றும் சமூகத் திறன்களிலும் தாமதம் ஏற்படலாம்.
ஏன் வளர்ச்சியில் தாமதம்?
பொதுவாக இரு முக்கிய காரணங்களால் வளர்ச்சியில் தாமதம் ஏற்படுகிறது.
1. மரபணு மரபணு அல்லது குரோமோசோம் குறைபாடுகள் (டவுன் சிண்ட்ரோம்/ஃப்ரஜில் ‘X’சிண்ட்ரோம்)
2. சுற்றுச்சூழல்வயிற்றில் இருக்கும் போது/பிறந்தவுடன் தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்களின் தாக்குதல் (Lead poisoning)...
நோய்த் தொற்று (நரம்பு மண்டலம்)
குறைப் பிரசவம்
கர்ப்ப கால சிக்கல்கள்
கடுமையான வறுமை
மோசமான ஊட்டச்சத்து
அக்கறை இன்மை.
தாமத வளர்ச்சிக்கு
ஆரம்ப சிகிச்சை மைல்கற்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்
மாற்றங்கள்/வளர்ச்சியை அந்தந்த வயதில் குழந்தைகளிடத்தில் எதிர்பார்க்கலாம். குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், குழந்தை நல மருத்துவரையோ/உளவியல் நிபுணரையோ ஆலோசிக்க வேண்டும். அவர்கள், குழந்தையின் நிலையைக் கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சையை பரிந்துரை செய்வதன் மூலம் அக்குழந்தை பயனடைய முடியும். சிறு வயதிலேயே (3 வயதுக்குள்) இதைக் கண்டறிவதன் மூலம், அக்குழந்தை தகுந்த சிகிச்சை பெற்று நலம் பெறும் வாய்ப்பு பன்மடங்காகிறது (Early Intervention ). குழந்தைகளின் தன்மைக்கேற்ப, அவர்களுக்கு பேச்சு சிகிச்சை (Speech Therapy), தொழில்சார் சிகிச்சை ( Occupational Therapy) , உடல் மற்றும் நடத்தை சிகிச்சை (Physical and Behavioural Therapy ) அளிக்கப்படுகிறது.
ஆட்டிஸம், ஏடிஹெச்டி (Attention Deficit Hyperactive Disorder ADHD), அறிவுத்திறன் குறைப் பாடு (Intellectual Disability) போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் பலக் குழந்தைகளுக்கு, சிறுவயதில் வளர்ச்சியில் தாமதத்துக்கான அறிகுறிகள் இருந்திருக்கும். அதை சரியான நேரத்தில் கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்காவிட்டால், அக்குழந்தைக்கு வளர்ச்சியில் முன்னேற்றம் இல்லாமலேயே போகலாம். இவ்வித சிகிச்சைகள், ஒரு குழந்தை தன்னுடைய அதிகபட்ச செயல்பாட்டை அடைந்து வீட்டில் மற்றும் சமூகத்தில் ஒன்றி வாழ உதவும். குழந்தையின் குடும்பத்துக்கும் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலையும் வழங்கும். ஒவ்வொரு குழந்தையும் பிரச்னையின் தன்மைக்கேற்ப, இக்குழந்தைகள் யாருடைய உதவியும் இன்றி செயல்படலாம்... சிலர் ஓரளவு உதவியுடன் வாழலாம்... இன்னும் சிலருக்கு அதிகபட்ச உதவி தேவைப்படலாம். மொத்தத்தில், ஆரம்ப கால சிகிச்சை குழந்தையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
வளர் மைல்கற்கள்
தங்கள் குழந்தை சரியாக வளர்ச்சியடைகிறதா என்பதை சக வயது குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்த்து தெரிந்து கொள்வது வழக்கம். ஒரு குழந்தை வயதுக்கேற்ற வளர்ச்சியடைந்துள்ளதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? பொதுவான வளர் மைல்கற்கள் இதோ...
2 மாதம்
- பிரகாசமான வண்ணங்களை நோக்கி தலையைத் திருப்பும் பெற்றோரின் குரலை அடையாளம் கண்டு கொள்ளும்
- கை, காலை சுழற்றி உதைக்கும் பாட்டிலா/மார்பா என அடையாளம் கண்டு கொள்ளும் சத்தத்தையோ/பேச்சையோ கேட்டால் அமைதியாகி விடும்.
- பேசுவதைப் போல் பாவித்து ஒலி எழுப்பும பெற்றோர் பேசி விளையாடுகையில் பேச்சின் ஒலியை எழுப்ப முயற்சி செய்யும்
- நகரும் பொருட்களை தன் கண்களால் பின் தொடரும்
- தலையை அசையாமல் வைத்துக் கொள்ளும் தெரிந்த மனிதர்கள்/பொருட்களை தூரத்தி லிருந்தே அடையாளம்கண்டுகொள்ளும்
- தான் மகிழ்ச்சியாக/சோகமாக இருப்பதை மற்றவருக்கு தெரியப்படுத்தும்.
- பெயரைக் கூறி அழைத்தால் அதை புரிந்து கொள்ளும் ஒலி வரும் திசையை நோக்கி திரும்பும் பொருட்களை நோக்கி நகர்ந்து எடுத்துக் கொள்ளும்
- பின்னால் திரும்பி படுக்கையில் தன் பாதத்துடன் விளையாடும் உண்ணும் போது பாட்டிலை பிடித்துக் கொள்ள உதவும்
- பழகிய முகங்களைத் தெரிந்து கொண்டு யாரெனும் அந்நியர் எனில் அதை தெரிந்து கொள்ளத் தொடங்கும் பேச்சு மற்றும் ஒலியை பின்பற்ற முயற்சி செய்யும் குப்புறப் படுக்கும்.
- பிடித்த பொம்மைகளை வைத்திருக்கும் ‘இல்லை’ என்பதை புரிந்து கொள்ள முயற்சிக்கும் விரல்களை வைத்துப் பொருட்களை குறிப்பிட்டு காட்டும் அந்நியரைப் பார்த்து பயப்படும் உதவியின்றி உட்கார முடியும் தவழும் மற்றவர்களின் ஒலி மற்றும் சைகைகளை பின்பற்றும்.
- உட்கார்ந்த நிலைக்கு வர முடியும் கொஞ்ச நேரத்துக்கு உதவியின்றி நிற்க முடியும்
- கப்/தொலைபேசியை வைத்து பெரியவர்கள் போல் பாவிக்கும் ‘கண்ணாமூச்சி’ விளையாட்டு விளையாடத் தெரியும்.போய் வருகிறேன் (Byebye) என கையசைக்கும்
- பாத்திரத்தில் பொருட்களைப் போடத் தெரியும் அம்மா, அப்பா ஒலியை ஏற்படுத்தும்.
- பொருட்களை தள்ள/இழுக்க பிடிக்கும் குறைந்தபட்சம் 6 வார்த்தைகளை சொல்லும் பிறர் சொல்லும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றும்
- ஷூ, சாக்ஸ், கையுறைகளை பிடித்து இழுக்கத் தெரியும்
- புத்தகத்தில் உள்ள பெயரை சொன்னால், அதனின் படத்தை சுட்டிக் காட்டும் தானே உண்ணும்
- கிரயானை (Crayons) வைத்து காகிதத்தில் கோடு போடும் உதவியின்றி நடக்கும்... பின்னோக்கி நடக்கும்
- தனக்கு வேண்டிய விஷயத்தை சுட்டிக்காட்டும் மற்றும் வார்த்தைகளை பயன் படுத்தி தனக்கு வேண்டிய விஷயத்தை கேட்க முயற்சி செய்யும்.
- 2 வார்த்தை சொற்றொடர்களை உருவாக்கி பயன்படுத்தும் எண்ணுவதற்கும் அதிகமான வார்த்தைகளை பேசும் பழக்கப்பட்ட படங்களை அடையாளம் கண்டு கொள்ளும்
- பந்தை முன்னோக்கி உதைக்கும் டீஸ்பூன் உபயோகித்து ஓரளவுக்குத் தானே உண்ணும் அதிகமாக மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கும்
- புத்தகத்தை வைத்து விளையாடும் போது அதிலுள்ள பக்கங்களை (இரண்டு/மூன்றாக) திருப்பும் உடம்பின் நடுப்பகுதியை (கண், காது, மூக்கு, வயிறு) சுட்டிக் காட்டி அடையாளம் கண்டு கொள்ளும் பாசத்தை வெளிப்படுத்தும்.
- கைகளை மேலே உயர்த்தி பந்தை மேலே வீசும் மூன்று சக்கர வண்டியை ஓட்டும் தானே ஷூ போட்டுக் கொள்ளும் வீட்டின் கதவுகளை திறக்கும் புத்தகத்தை வைத்து விளையாடும் போது, ஒவ்வொரு பக்கங்களாக திருப்பும்பொதுவான ரைம்ஸை (rhymes) மீண்டும் பாடும்
- பேசும் போது சின்ன வாக்கியங்களை உபயோகிக்கும் ஒரு நிறத்தின் பெயரையாவது சரியாக சொல்லத் தெரியும்
- பேசும் போது சில நேரங்களில் 5-6 வாக்கியங்களை உபயோகிக்கும் கைகளை மேலே உயர்த்தி பந்தை மேலே வீசும் எண்ணுவதின் அர்த்தத்தை புரிந்து கொள்ளும் மற்றும் சில எண்களையும் தெரிந்திருக்கும் (‘உனக்கு ஒன்றுதான்’ என்றால், அது என்னவென்று புரியும்) ஒருவரை வரைய முயற்சி செய்கையில் குறைந்தது 2 உடல் பாகங்களை வரையத்தெரிந்திருக்கும்
- கதையை ஞாபகத்தில் வைத்து, அதில் சில பாகங்களையாவது சொல்லத் தெரிந்திருக்கும் நேரத்தைப் பற்றி தெளிவாக புரியத் தொடங்கி இருக்கும்
- ‘ஒத்த’ மற்றும் ‘வெவ்வேறு’ ஆகியவற்றின் அர்த்தம் அறிந்து கொள்ளும் கற்பனைத் திறன் இருக்கும்; விளையாட்டில் கற்பனைக்கு வடிவம் கொடுக்கத் தெரியும்.
- பேசும் போது சில நேரங்களில் 5-6 வாக்கியங்களை உபயோகிக்கும் கற்பனை விளையாட்டு விளையாடும் பாலினம் பற்றி புரியும் (தான் பெண்/ஆண் என புரியும்)
- 10 அல்லது அதற்கு அதிக பொருட்களைஎண்ணத் தெரியும் பெரிய கதைகளை சொல்லத் தெரியும் பெயரையும் முகவரியையும் (சொல்லிக் கொடுத்திருந்தால்), சொல்லத் தெரியும்
- குதிக்க, ஊஞ்சலாட, ஏற, குட்டிக்கரணம் போடத் தெரியும் ஒருவரை வரையும் போது அதில் இரு பரிமாணத்தில் உடலை வரைந்து இருக்கும் (உடல் வரைய குச்சி போடாமல் வட்டம் போடத் தெரியும்)
- உதவியின்றி உடையணிய மற்றும் கழற்றத் தெரிந்திருக்கும் ஃபோர்க் (Fork), ஸ்பூன் மற்றும் (சில நேரங்களில்) மேஜைக்கத்திபயன்படுத்தும்.
(மனம் மலரட்டும்!)
Tags:
The child toys are often put on the break some parents would denounce it as misconduct. To others it's theirமேலும் செய்திகள்
நவீன குழந்தை வளர்ப்பும்... நச்சரிக்கும் பிரச்சனைகளும்!
டிஜிட்டல் நன்மையை நோக்கி குழந்தைகளை வழிநடத்த வேண்டும்!
குழந்தைகளை ஆக்டிவாக்கும் கலர்ஃபுல் ஆக்டிவிட்டிஸ்!
பெற்றோர்களே உஷார்!: Chubby Cheeks பாப்பாக்கள்...
சிசுவின் சீரற்ற பாதம்...பெற்றோர்களே கவனியுங்கள்!
குழந்தைகளின் பேச்சு குறைபாடு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!