வெடிப்பு வேதனை நீங்கி மென்மையான பாதம் பெற நல்லெண்ணெய் மசாஜ்
2015-02-01@ 19:44:00

தலை முதல் கால் வரை அனைவரையும் கவரும் வகையில் அழகாக இருந்தால்தான் ஒருவர் முழு அழகு உடையவராக கருதப்படுவர். இதில் பாதத்தின் அழகும் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு காலில் வெடிப்பு ஏற்படுகிறது. இது அழகை கெடுப்பது மட்டுமல்ல; கடுமையான வலியையும் தரும். வெடிப்பு ஏற்பட்டால் சில நேரங்களில் நடக்கக்கூட முடியாத வகையில் வலி இருக்கும். நாம் உடைகளை அணியும்போது வெடிப்பில் சிக்கிக் கொள்ளும். போதிய பராமரிப்பு இல்லாதது, தண்ணீர் சத்து குறைபாடு, ஊட்டச்சத்து போன்றவை இதற்கான காரணங்களாகும். செருப்புகளை அணிந்து சென்றாலும் பாதங்களில் குதிகால் வெடிப்பு வந்துவிடும். பொதுவாக இந்த பிரச்னை ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் இருக்கக்கூடியதே.
கால் வெடிப்பு இரண்டு வகைப்படும். 1.சோரியாஸிஸ், 2. சாதாரண கால் வெடிப்பு.
சோரியாஸிஸ் காரணமாக உள்ளங்காலில் வெடிப்புகள் உண்டாகி அரிப்பு ஏற்படும். சிலநேரங்களில் ரத்தம் கூட வரலாம். உள்ளங்காலில் வெடிப்பு வந்தவர்கள் மருத்துவரை அணுகி சோரியாஸிஸ்தானா? என உறுதி செய்தபிறகு அதற்குரிய சிகிச்சை பெறவேண்டும். சாதாரண வெடிப்பு என்பது தண்ணீர்ச்சத்து குறைவினால் வரக்கூடியவை. பாதத்தின் ஓரங்களில் வரும், எளிய சருமப்பிரச்னையாக இருந்தாலும் மிகுந்த தொல்லை கொடுக்கும். பாதத்தின் விளிம்பு பகுதியில் உள்ள தோல் உறிந்து, தகடுகள் போல் காணப்படும். தோல் உரிந்து, பாளம் பாளமாக வெடிப்பு ஏற்பட்டு கடுமையான வலியும் ஏற்படும். இவற்றுக்கான தீர்வு:
காரணங்கள் என்ன?
* சிலருக்கு கடினமான செருப்பு அணிவதாலும், சிலருக்கு சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினாலும் கால் வெடிப்பு ஏற்படுவதுண்டு. ஆகையால், “மாய்சரைசர்ஸ்“ போன்ற களிம்புகளை பயன்படுத்தவேண்டும்.
* தோலினால் ஆன காலணியை அணிபவர்களுக்கு காலில் வெடிப்பு வருவதில்லை. காலில் வரும் வியர்வையை காலணி உள்வாங்கிக்கொள்ளும். தோல் உலரும்போது ஈரப்பதமுள்ள காலணி நமக்கு பாதுகாப்பாக அமையும்.
* அதிக எடை உள்ளவர்கள், வறண்ட சருமத்தினர், அதிகமாக அழுக்கான இடங்களில் நடப்பவர்கள், தோட்ட வேலை செய்பவர்களுக்கு காலில் வெடிப்பு வர வாய்ப்புகள் அதிகம்.
வெடிப்பை தவிர்க்க...
பாதங்களை தூய்மையாக பார்த்துக்கொண்டாலே வெடிப்பு குணமாகும். வீட்டிற்குள்ளேயே தனியாக வைத்திருக்கும் காலணிகளை போட்டுக்கொள்ளுதல் நல்லது. அதே வேளையில் துணி துவைக்கும்போது சோப்பு தண்ணீரில் அதிகமாக நிற்காமல் பார்த்துக்கொள்ளவும். அதேபோல் காலுறைகளையும் தூய்மையாக அணியவும்.
எளிய சிகிச்சை
* ஒரு அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி, அதில் எலுமிச்சை சாறு, உப்பு, கிளிசரின் மற்றும் ரோஸ்வாட்டர் ஆகியவற்றை சேர்த்து கலந்து, அதில் பாதங்களை வைக்கவேண்டும். சிறிது நேரத்திற்கு பின்பு மெருகேற்ற உதவும் கல்லைக்கொண்டு குதிகாலை தேய்க்கவேண்டும். இவ்வாறு தினமும் இரவில் தூங்கும் முன் செய்தால், குதிகால் வெடிப்பில் இருந்து விடுபடலாம்.
* கால்களை நன்கு சுத்தமாக கழுவி, பின் பாதத்தில் வெஜிடேபிள் எண்ணெய் கொண்டு சிறிதுநேரம் மசாஜ் செய்து, இரவில் கால்களில் சாக்ஸ் போட்டுக்கொள்ள வேண்டும். பின்பு காலையில் எழுந்து கால்களை கழுவவேண்டும். இவ்வாறு செய்து வர பாதங்கள் மென்மையாவதோடு, குதிகால் வெடிப்புகளும் நீங்கும்.
* வாழைப்பழத்தை அரைத்து, அதனை பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின்பு கழுவலாம்.
* வெதுவெதுப்பான நீரில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைக்கவேண்டும். பின்னர் பாதங்களின் மேல் எலுமிச்சை சாறு மற்றும் வேஸ்லின் கலந்த கலவையை தேய்த்து, காலையில் பாதங்களை கழுவினால், குதிகால் வெடிப்பை தவிர்க்கலாம்.
* தேனில் அதிகப்படியான ஆன்டிபாக்டீரியல் பொருள் இருப்பதால், அதனை வெதுவெதுப்பான நீரில் ஊற்றி, அந்த நீரில் பாதங்களை சில நிமிடம் ஊற வைத்து, பின் பாதங்களை ஸ்கரப் செய்தால், அழுக்குகள் நீங்கி, பாதங்கள் மென்மையாகும்.
* ஆலிவ் ஆயிலை பஞ்சில் நனைத்து, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்பு பாதத்தில் சாக்ஸ் அணியலாம்.
* 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸில், சிறிது ஜிஜோபோ ஆயில் ஊற்றி பேஸ்ட் செய்து, அதனை பாதங்களில் தடவி சிறிதுநேரம் மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவவேண்டும். இந்த முறையை ஒருநாள் விட்டு ஒருநாள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* இரவில் படுக்கும்போது, நல்லெண்ணெய்யை குதிகால்களில் தடவி மசாஜ் செய்து படுத்தால் குதிகால் வெடிப்பு மற்றும் பாத வறட்சியையும் தவிர்க்கலாம்.
* பச்சை மஞ்சளையும், கறிவேப்பிலையையும் சேர்த்து அரைத்து தொடர்ந்து மூன்று நாட்கள் காலில் தேய்த்து வர குதிகால் வெடிப்பு சரியாகும்.
மேலும் செய்திகள்
பெண்களுக்கு பேக் பெய்ன் வரக் காரணம்?
சினைப்பை சிக்கல் கவனம் அவசியம்
எந்த எண்ணெய் நல்லது?
கிளைசெமிக்னா என்னன்னு தெரியுமா?
Ladies.. that three days?
காக்கைக்கும் வலிப்புக்கும் என்ன சம்பந்தம்?
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!
பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!
சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!
13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்