சமையலறையில் வலி நிவாரணிகள்!
2015-01-30@ 15:29:01

விழுந்தாலும் மருந்து, எழுந்தாலும் மருந்து என்று மருந்துகளை நினைத்தாலே வெறுப்பாக இருக்கிறதா? அதிலும், வலி நிவாரணிகளுக்கு வேறு ஏதாவது மாற்று இருக்கிறதா என்று தேடுகிறீர்களா?
வயிற்றுவலிக்கு அன்னாசி
ஃப்ரெஷ்ஷான அன்னாசிப்பழத்தை ஒரு கப் நிறைய வெட்டிக் கொள்ளுங்கள். இந்த அன்னாசிப்பழம் ஜீரணத் தொல்லைகளால் வரும் வலியை விரைவில் சரி செய்யும் என்கிறது கலிஃபோர்னியா ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம். அன்னாசிப்பழத்தில் இருக்கும் Proteolytic என்ற என்சைம்தான் இந்த மாயாஜாலத்தைச் செய்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
நீண்ட நாள் வலிக்கு மஞ்சள்
இந்தியர்களின் கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்த மஞ்சள் பல மகத்துவங்கள் கொண்டது என்பது நாம் அறிந்ததே. இது அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ஆஸ்பிரின் போன்ற வலி நிவாரணிகளைவிட மூன்று மடங்கு சக்தி வாய்ந்தது மஞ்சள் என்றும் ஆர்த்ரைட்டிஸ் போன்ற நீண்டநாள் வலிகளால் அவதிப்படுபவர்களில் 50 சதவிகிதம் பேருக்கு மஞ்சள் நல்ல பலனைத் தந்திருக்கிறது என்பதையும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
Cyclooxygenase 2 என்ற வலியை உருவாக்கும் என்சைமை மஞ்சள் கட்டுப்படுத்துகிறது என்கிறார் உணவியல் நிபுணரான ஜூலியன் ஒயிட்டகர். உடல் வலி, கை வலி, கால் வலி என்று பல்வேறு வலிகளால் அவதிப்படுபவர்கள் கால் டீஸ்பூன் மஞ்சள் தூளை சமையலில் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார் ஜூலியன்.
Tags:
Goes for a drug it's frustrating to think drugs have emerged as a drug? In fact if there was an alternative analgesics for something else?மேலும் செய்திகள்
எடைக் குறைப்புக்கான அறுவை சிகிச்சைகள்!
தூக்கம் காக்கும் 10 வழிகள்!
மனம் எனும் மாயலோகம்! டிப்ரஸன் அரக்கன்!
புற்றுநோய்க்கு புதிய சிகிச்சைகள்
ஜென் z இளசுகள்...ட்ரெண்டி அசைவங்கள்!
நீங்க ஜிம்முக்குப் புதுசா? 8 தவறுகள் எச்சரிக்கை
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!