பழம் சாப்பிட விரும்பு!
2015-01-21@ 14:21:50

குழந்தைகள் பழங்களே சாப்பிடுவதில்லை என்பதுதான் பெரும்பாலான அம்மாக்களின் புலம்பல். அந்தப் பழம் சூடு... இந்தப் பழம் குளிர்ச்சி என அவர்களாகவே சிலபல பழங்களுக்குத் தடை விதிக்க, குழந்தைகளின் விருப்பமோ ஸ்ட்ராபெர்ரி, லிச்சி, கிவி என வெளிநாட்டுப் பழங்கள் பக்கம் இருக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்ற பழங்கள் எவை? தவிர்க்க வேண்டிய பழங்கள் உண்டா? குழந்தைகள் நல மருத்துவர் ஜெ.கே.ரெட்டி விளக்குகிறார்.
“குழந்தைகளுக்கு தினமும் ஒரு பழம் கொடுக்க வேண்டும். அதிக விலையில் விற்கப்படும் பழங்கள்தான் நல்லது என்கிற கண்ணோட்டம் தவறு. மற்ற எல்லாப் பழங்களைக் காட்டிலும் வாழைப்பழத்தில்தான் அதிக அளவிலான கலோரி இருக்கிறது. குழந்தை எடை குறைவாக இருந்தால் பச்சை வாழைப்பழம், பூவன்பழம், நேந்திரம்பழம் கொடுக்கலாம். நல்ல கலோரி கிடைப்பதோடு, மலச்சிக்கலும் நீங்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்கிற கருத்து தவறானது. வாழைப்பழத்துக்கும் சளிக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது.
புகை போடுவது, கற்களைக் கொண்டு பழுக்க வைப்பது என செயற்கையாக பழுக்க வைக்கப் படும் பழங்களை கொடுக்கவே கூடாது. வாழை, கொய்யா, பப்பாளி, மாதுளை, மாம்பழம் ஆகிய பழங்களைக் கொடுக்கலாம். மாம்பழத்தில் சூடு அதிகம் என்பதால் அளவாகக் கொடுக்கவும். வேற்று மண்ணில் விளைந்து நமக்கு இறக்குமதி செய்யப்படுகிற ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்கள் பதப்படுத்தப் பட்டுதான் இங்கு வருகின்றன. ஆப்பிளை அழுகாமல் ஃப்ரெஷ்ஷாக கொண்டு வருவதற்காக மெழுகு பூசப்படுகிறது. திராட்சை செழித்து வளர ரசாயன உரங்களில் முக்கி எடுக்கப்படுகிறது. அந்த ரசாயன திரவம்தான் திராட்சையில் இருக்கும் வெள்ளைப் படிமமாகத் தெரிகிறது.
இவற்றைத் தவிர்ப்பது நல்லது. இவை வயிற்று வலி, வயிற்றுப் போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும். எந்த ஒரு பழத்தையும் நன்றாக சுத்தப்படுத்திக் கொடுக்க வேண்டும். ஆப்பிள், ஆரஞ்சு பழங்களில் கலோரி குறைவு என்பதால், எடை அதிகமுள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். சீத்தா பழம் போன்று விதை அதிகமுள்ள பழங்களை கொடுக்கும்போது கவனம் தேவை. குழந்தை விதையினை முழுங்கி விட்டால் அது நுரையீரல் போன்ற பகுதிகளில் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு பழத்தை அப்படியே பழமாக உட்கொண்டால்தான் முழுமையான சத்துகள் கிடைக்கும். பழச்சாறாக மாற்றும்போது அதிலுள்ள நார்ச்சத்து கிடைக்காமல் போய் விடும். சில பழங்களை தோலுடன் சாப்பிடக் கொடுக்கலாம்.
பழங்களால் குழந்தைக்கு எவ்வளவு கலோரி சேர்கிறதோ அதை செரிக்கும் அளவுக்கு குழந்தையின் உடல் இயக்கமும் இருக்க வேண்டும். ‘ஓடி விளையாடு பாப்பா’ என்று பாரதியார் சொன்னது போல நம் குழந்தையும் ஓடியாடி விளையாடும்போதுதான் இந்த கலோரிகள் செரிக்கும்” என்றார்.
மேலும் செய்திகள்
நவீன குழந்தை வளர்ப்பும்... நச்சரிக்கும் பிரச்சனைகளும்!
டிஜிட்டல் நன்மையை நோக்கி குழந்தைகளை வழிநடத்த வேண்டும்!
குழந்தைகளை ஆக்டிவாக்கும் கலர்ஃபுல் ஆக்டிவிட்டிஸ்!
பெற்றோர்களே உஷார்!: Chubby Cheeks பாப்பாக்கள்...
சிசுவின் சீரற்ற பாதம்...பெற்றோர்களே கவனியுங்கள்!
குழந்தைகளின் பேச்சு குறைபாடு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!