SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரோக்கியம் தரும் ஆயில் புல்லிங்!

2023-01-31@ 17:52:02

நன்றி குங்குமம் தோழி

ஆயில் புல்லிங் என்பது ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறையின் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு  தீர்வுகளைக் காணலாம். ஆயில் புல்லிங் செய்வதால் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம்  உமிழும் நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப்படுகின்றன. மேலும், ஆயில் புல்லிங் செய்வதன் மூலம், மூட்டு வலி, முழங்கால் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல்  நோய்கள்,  மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத் தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற  நோய்கள்  சரியாகும்  என்கின்றனர்  ஆராய்ச்சியாளர்கள்.

எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்தவித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. ஏதாவது நோய்க்கான மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் செய்யலாம். ஆயில் புல்லிங் செய்யும் போது, ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும், பயப்பட வேண்டியதில்லை ஒன்றும் ஆகாது.

கறைகள் படிந்த பற்கள்  உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங்  செய்து வந்தால், பற்கள்  வெண்மையாக மாறிவிடும். மேலும்,  ஈறுகளும்  ஆரோக்கியமானதாக காணப்படும். தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி, வாய் துர்நாற்றம் சரியாகும்.ஆயில் புல்லிங்கை தினமும் செய்தால், உடலின் ஆற்றலானது அதிகரித்து, நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கும். ஒற்றை  தலைவலியால் அவஸ்தைப்படுபவர்கள், தொடர்ந்து ஆயில் புல்லிங் செய்து வந்தால், அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.

ஆயில் புல்லிங் செய்யும் முறை:

காலை  எழுந்ததும், வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில்  ஊற்றி அதை வாய்  முழுவதும் படும்படியாக 10 நிமிடம் கொப்பளிக்க வேண்டும், அவ்வாறு செய்வதற்கு முன் வெதுவெதுப்பான தண்ணீர் இரண்டு டம்ளர் அளவு குடிக்க  வேண்டும். பிறகு ஆயில் புல்லிங் செய்வது நல்லது.

தொகுப்பு :  தவநிதி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • switzerland-japan-win

  சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

 • choco-fac-fire-27

  அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

 • missii

  வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்