SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வசம்பு வைத்தியம்!

2023-01-27@ 16:06:12

நன்றி குங்குமம் தோழி

வசம்பு காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது.  உடல் வெப்பத்தை அதிகரிக்கும்.  பசியை உண்டாக்கும் தன்மை கொண்டது.  வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிறு கனமான உணர்வு  போன்றவற்றுக்கு  நல்ல மருந்தாகும்.வசம்பு எப்பேர்ப்பட்ட  கொடிய  விஷத்தன்மையையும்  முறிக்கக் கூடியது  அதனால்  கட்டாயம்  வீட்டில் வசம்பு  வைத்திருக்க வேண்டியது அவசியம்.

வசம்பை தூள் செய்து இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து   தேனில் குழைத்து சாப்பிட்டு  வர, எல்லா  வகையான தொற்றுநோய்களும் நீங்கிவிடும்.  இது எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும்  கிடைக்கும்.  வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று தேக்கரண்டி கொடுத்தால்  உள்ளிருக்கும் விஷம் முழுக்க வெளியே வந்துவிடும்.
வசம்பைச்சுட்டு, கரியைத் தேனில் குழைத்து, குழந்தைகளின் நாக்கில் சிறிதளவு பூசி வர, நன்றாகப் பேசுவதற்கான  வாய்ப்புகள்  அதிகரிக்கும்.  குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி, பேதி  கட்டுப்படும்.

பாட்டி வைத்தியத்தில் இடம் பெறும் மருந்துகளில் பிரதான இடம் வசம்புக்கு உண்டு.  கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி வசம்பைச்சுட்டு, அந்தக் கரியைப் பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.  இதனால், குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன  தொற்றுநோய்களோ  வராமல்  தடுக்கப்படுகிறது.  இதனாலேயே  இதற்கு,  பிள்ளை  வளர்ப்பான்  என்ற இன்னொரு பெயரும் உண்டு.

தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதனுடன் கறிவேப்பிலை, மஞ்சள்தூள் வசம்புத் தூள் சேர்த்து கொதிக்கவிட்டு, கிருமி நாசினியாகவும்  பயன்படுத்தலாம்.  ஆனால், இதை தொடர்ச்சியாக  எடுத்துக் கொள்ளக்கூடாது.வசம்புடன்  மஞ்சளை  வைத்து சிறிது  நீர் தெளித்து  மையாக  அரைத்து  தேள்,  பூரான், வண்டுக்கடியில்  பூசி வர  விஷம்  முறியும்.  

கடுப்பும் முற்றிலும் நீங்கும்.தேங்காய்  எண்ணெயில் வசம்பை  பொடித்துப் போட்டு அதனுடன் குப்பைமேனி சாறை  சேர்த்து  நன்கு காய்ச்சி  எண்ணெயை வடிகட்டி  எடுத்து வைக்கவும். இந்த எண்ணெயை சிரங்கின் மீது தடவிவர சிரங்கு விரைவில்  குணமாகும்.வசம்புடன் பூண்டு வைத்து அரைத்து வெல்லத்துடன் சேர்த்துத் தின்றால் குடலில் உள்ள தீமை தரும் பூச்சிகள்  மலத்துடன்  வெளிப்படும். இதனை 3 மாதங்களுக்கு ஒரு முறை செய்து வரலாம்.

தொகுப்பு : கவிதா, சிதம்பரம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்