சிறப்பான சிகப்பு அரிசி!
2022-12-28@ 17:46:37

நன்றி குங்குமம் டாக்டர்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் அரிசியில் பல வகைகள் உள்ளன. அதில் ஒவ்வொன்றும் உடலுக்கு பல நன்மைகளை தருபவையாக இருக்கிறது. அந்தவகையில், சிகப்பு அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்:.பிரவுன் ரைஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சிகப்பு அரிசியை, தீட்டப்படாத அரிசி என்றும், முழு அரிசி என்றும் சரக்கு அரிசி என்றும் அழைக்கப்படுகிறது.
சிகப்பு அரிசியில் கார்போஹைட்ரேட், மெக்னீசியம் அதிகம் உள்ளது. இது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.சிகப்பு அரிசியில் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளதால், ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து ரத்தத்தை சீராக்கும் திறன் கொண்டது.புற்றுநோய் உண்டாக்கக்கூடிய வேதியியல் பொருட்கள் பெருங்குடலை அணுகாத வண்ணம் சிகப்பு அரிசியில் உள்ள நார்ச்சத்து பார்த்துக் கொள்வதால், கோலோன் புற்றுநோய் தடுக்கப்படுகிறது.
சிகப்பரிசியில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளதால் இருதய நோய்களை தடுக்க உதவும். மேலும், மெக்னீசியம் சிகப்பு அரிசியில் நிறைந்துள்ளதால், மலக்கட்டு ஏற்படாமல், மலச்சிக்கலை சரி செய்ய உதவுகிறது.சிகப்பு அரிசியில் இருக்கும் எண்ணெய், நம் உடலில் இருக்கும் எல்.டி.எல் (Low Density Lipoprotein) என்கிற கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
சிகப்பு அரிசியில் உள்ள தாது உப்புகள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.சிகப்பரிசியில், சாதம், தோசை, புட்டு, ரவை உப்புமா, அடை, கொழுக்கட்டை என பலவற்றை சமைக்கலாம். ஆனால், வெள்ளை அரிசி சமைக்க எடுத்துக் கொள்ளும் நேரத்தைவிட, சிகப்பு அரிசி அதிகநேரம் எடுத்துக் கொள்ளும்.
புளிக்க வைக்கப்பட்ட சிகப்பு அரிசியில் சிறுநீர்ப்பை, கல்லீரல், உணவுக் குழாய் மற்றும் ரத்தப் புற்று நோய்கள் வராமல் காக்கக் கூடிய தன்மைகள் இருக்கின்றன. சிவப்பு அரிசி ரத்தத்தில் இறுக்கத்தன்மையை தளர்த்தி பிராணவாயு கிரகிப்பை அதிகப்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் வாய்ப்பை தடுக்கிறது. ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி, ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது.
Tags:
சிறப்பான சிகப்பு அரிசி!மேலும் செய்திகள்
கோடைக்கு ஏற்ற குளிர்ச்சி பானங்கள் 3!
ஆரோக்கியம் காக்கும் பரட்டைக் கீரை
சூட்டை தணிக்கும் நன்னாரி !
நலம் காக்கும் நவதானியங்கள்!
பலம் தரும் பண்ணைக் கீரை!
ஹெல்த்தி தோசைகள் 3
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!