பன்னீர் ஆப்பிளின் பயன்கள்!
2022-12-27@ 14:47:52

நன்றி குங்குமம் டாக்டர்
ஊட்டச்சத்துக்கள் மிகுந்த பன்னீர் ஆப்பிளின் பயன்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்:இது ஆப்பிள் இனத்தைச் சார்ந்து இருப்பதால் இதனை பன்னீர் ஆப்பிள், ரோஸ் ஆப்பிள் என்றும் நீர்ச்சத்து நிறைந்து இருப்பதால், வாட்டர் ஆப்பிள் என்றும் ஜாமூன் ஃபுரூட் என்றும் அழைக்கிறார்கள்.
இதன் பெயரில்தான் ஆப்பிள் என்று இருக்கிறது. ஆனால், இதன் சுவை ஆப்பிள் போல இருக்காது, அதற்கு நேர்மாறாக இனிப்பும், புளிப்பும் கலந்தும், கொய்யாப்பழத்தின் சுவையை போன்றும் இருக்கும்.இந்தப் பழம் பார்ப்பதற்கு கண்ணாடி போன்ற தோற்றமும், இளம் சிவப்பு மற்றும் ரோஸூம் கலந்த நிறத்தில் இருக்கும். இதன் வடிவம் கோயில் மணி போன்று இருக்கும். எனவே, பார்த்தவுடன் சுவைக்க தூண்டும்.
பன்னீர் ஆப்பிள் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மருத்துவத்திற்கு இந்தப் பழம் பெரிதும் உதவுகிறது.
இந்த பன்னீர் ஆப்பிளில் வைட்டமின், சி, ஏ, நியாசின், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, போன்ற ஏராளமான உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இந்த பன்னீர் ஆப்பிளின் சாறு கல்லீரல் மற்றும் மூளை சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.பன்னீர் ஆப்பிள் பூக்கள் காய்ச்சலை விரட்ட உதவுகிறது, பூக்களைத் தண்ணீரில் போட்டு நன்றாக தொதிக்க வைத்து குடித்தால் காய்ச்சல் சரியாகிவிடும்.பன்னீர் ஆப்பிள் பழத்தின் விதைகள் வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு பயன்படுத்துகிறார்கள்.
பன்னீர் ஆப்பிளின் இலைகள் கண்களில் வரும் கட்டிகள் மற்றும் வாத சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.பன்னீர் ஆப்பிள் வேர் வலிப்பு பிரச்னைக்கு தீர்வு தருகிறது.நீரிழிவு நோய், புற்றுநோய் தடுப்பு, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, செரிமான பிரச்னைகள், வலிப்புத்தாக்கங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பிரச்னைகளை சரி செய்ய உதவும் மருந்துகளில் இந்த பழம் பயன்படுத்தப்படுகிறதுஇந்த பன்னீர் ஆப்பிளில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் குழந்தைகளுக்கு அதிகம் தரலாம் அவர்களுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். இது நீர்ச்சத்து மிகுந்த காய் என்பதால் கோடைக்காலத்தில் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
தொகுப்பு : தவநிதி
மேலும் செய்திகள்
ஆரோக்கியம் காக்கும் பரட்டைக் கீரை
சூட்டை தணிக்கும் நன்னாரி !
நலம் காக்கும் நவதானியங்கள்!
பலம் தரும் பண்ணைக் கீரை!
ஹெல்த்தி தோசைகள் 3
ஹெல்த்தி துவையல்கள் 5
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி