வயிற்றைக் காக்கும் ஓமம்!
2022-12-15@ 15:52:15

நன்றி குங்குமம் டாக்டர்
ஓமவாட்டர் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.
ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும்.ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.
தினமும் ஓமத் தண்ணீர் குடித்தால் ஆஸ்துமா நோய் வரவே வராது.அரை தேக்கரண்டி ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும். வயிற்றுவலி ஏற்பட்டால், ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகிவிடும்.
நாட்டு மருந்துக்கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். மூட்டுவலிக்கு இதைத் தடவினால் நாளடைவில் மூட்டு வலி குணமாகும். இந்த எண்ணெயைப் பஞ்சில் தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக்கொண்டால் பல் வலி மறையும்.வயிறு கடமுடா வென சத்தம் போட்டால், ஓம எண்ணெயை வயிற்றின் மீது தடவலாம். ஓமப்பொடி சிறிது, உப்பு சிறிது, ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும்.
மந்தம்
பொதுவாக மந்தமானது சிறு குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக்கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாகச் சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய்ப்பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.
தொப்பையைக் குறைக்க
தினமும் இரவில் தூங்கப் போகும் போது அன்னாசிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் பொடி செய்தஓமம் இரண்டு தேக்கரண்டி இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்கவிட வேண்டும். அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும். காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்றாக கரைத்து குடிக்க வேண்டும். இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் தொப்பை காணாமல் போய்விடும்.
இடுப்பு வலி நீங்கசிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப்பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்புவலி நீங்கும்.
தொகுப்பு : கவிதா பாலாஜி
Tags:
வயிற்றைக் காக்கும் ஓமம்!மேலும் செய்திகள்
ஆயுளை நீடிக்கச் செய்யும் நெல்லி
வெயிலில் காக்க… 5 இயற்கை ஃபேஸ்பேக்!
கீரைச் சாறுகளும் பயன்களும்
கொழுப்புசத்தை குறைக்கும் வெங்காயம்
வறட்டு இருமலை போக்கும் வாழைத்தண்டு
மாதவிடாய் சீராக ஈஸி வைத்தியம்!
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!