SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தலைவலி குணமாக சில எளிய வழிகள்!

2022-12-13@ 15:26:44

நன்றி குங்குமம் டாக்டர்
 
சிறியவர் முதல் பெரியவர் வரை


எல்லாருக்கும் தலைவலி வருவதுண்டு. தலைவலி வர பல காரணங்கள் உண்டு. அதில் ஜலதோஷத்தினால் தலைவலி ஏற்பட்டிருந்தால், அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே தலைவலியை எளிதில் சரிசெய்யலாம். அதற்கு எந்தெந்த பொருட்களை எப்படி பயன்படுத்துவது பார்க்கலாம்:

கிராம்பு மற்றும் உப்புக் கலவை:

கல் உப்பிற்கு நீரை உறிஞ்சிக்கொள்ளும் திறன் உள்ளது. சிறிது கிராம்பு சிறிது கல் உப்பை பால் கலந்து அரைத்து பற்றிட ஈரத்தினை உறிஞ்சிக்கொள்ளும் தன்மை இந்த கலவைக்கு உள்ளது, இதனால் தலைவலி குறையும்.

வெந்நீரும் - எலுமிச்சைச் சாறும்:

வயிற்றில் வாயு உற்பத்தியாகுவதாலே பெரும்பாலான தலைவலிகள் வருகிறது. இதற்கு சிறிது எலுமிச்சை சாற்றை ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் கலந்து அருந்தினால் தலைவலி குணமாகும். இந்த சாறு வாயு உற்பத்தியை குறைத்து தலைவலியை சரிசெய்கிறது.

யூகலிப்டஸ் தைலம்:


யூகலிப்டஸ் தைலம் தலைவலிக்கு நல்ல மருந்து ஆகும். இதனைக் கொண்டு மசாஜ் செய்தால் தலைவலிக்கு உடனே நல்ல தீர்வு கிடைக்கும்.

சூடான பால்:

தலைவலி இருக்கும்போது கொஞ்சம் சூடான பால் குடித்தால் தலைவலி விரைவாக குறையும். சாப்பாட்டில் கொஞ்சம் நெய் சேர்த்து உண்டாலும் தலைவலி குறையும்.

பட்டையை அரைத்துத் தடவுதல்:

மசாலா பொருட்களில் ஒன்றான பட்டை தலைவலிக்கு மிகவும் நல்ல மருந்து ஆகும். சிறிது தண்ணீர்விட்டு பட்டையை நன்கு மைபோல் அரைத்து நெற்றியில் பற்றுப்போட வேண்டும். இப்படி பற்றுப் போட்டால் நொடிப் பொழுதில் தலைவலி காணாமல் போய்விடும்.

மல்லியும் சர்க்கரையும் சேர்த்து குடித்தல்:

கொஞ்சம் மல்லியை ஒன்றிரண்டாக தட்டி சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து குடித்தால் தலைவலி நீங்கும்.  மேலும் சளிபிடித்தலால் உண்டான தலைவலியாக இருந்தாலும் உடனடியாகக் குணமாகும்.

இஞ்சி, சீரகம், தனியா கலந்த தேநீர் குடித்தல்:

தலைவலி உடனே கட்டுப்பட, சிறிது இஞ்சி அல்லது சுக்கு அதனுடன் சிறிது சீரகம், தனியா சிறிது சர்க்கரை இவற்றை தண்ணீரில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்தால் சுக்கு காபி ரெடி. இதனை ஒரு நாளைக்கு 2 முறை குடித்துவந்தால் தலைவலி உடனே சரியாகிவிடும்.

தொகுப்பு : பொ.பாலாஜி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்