உடல் எடையை குறைக்கும் கறிவேப்பிலை
2022-11-18@ 17:29:03

நன்றி குங்குமம் தோழி
சமையலில் சேர்க்கும் கறிவேப்பிலை பல மருத்துவ குணங்கள் கொண்டது.
*கறிவேப்பிலை உடல் எடையை குறைக்க உதவும். தினமும் பல் துலக்கிய பின் வெறும் வயிற்றில் சிறிது கறிவேப்பிலை உருண்டையை சாப்பிட்டுவர உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.
*சளியால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் கறிவேப்பிலையை துவையலாக அரைத்து உண்ண சளித் தொல்லை குறையும்.
*கறிவேப்பிலையில் ஆன்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளதால், புற்று நோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
*நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைப்பதிலும் கறிவேப்பிலை பெரும் பங்கு வகிக்கிறது.
*கண்பார்வை பிரச்சனையை சரியாக்கி, பார்வை தெளிவிற்கு பெரிதும் உதவுகிறது.
*தலைமுடி கருப்பாக கறிவேப்பிலை, மருதாணி, கரிசலாங்கண்ணி அரைத்து அடையாக தட்டி, காய வைத்து, எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வர முடி வளர்ச்சி அதிகரிக்கும். இளநரை மறையும். உடல் உஷ்ணம் குறையும்.
*பித்தத்தால் ஏற்படும் மயக்கம், வாந்தியை கட்டுப்படுத்தி உடலை சமநிலைப்படுத்தும்.
*கறிவேப்பிலையை அப்படியே உணவில் சேர்ப்பதைவிட, பொடியாக்கி சமையலின் போது சேர்க்க அதன் முழுபலனும் கிடைக்கும்.
- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.
மேலும் செய்திகள்
வறண்ட கூந்தலுக்கு வாழைப்பழ மாஸ்க்!
குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்கும் சிடா
பல் சொத்தை விடுபட எளிய வழிகள்!
வசம்பு வைத்தியம்!
வெங்காயத்தாளின் மருத்துவ குணங்கள்!
மரபு மருத்துவத்தில் மலச்சிக்கலை நெறிப்படுத்தும் முறை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!