குழந்தைகளுக்கான பல் பராமரிப்பு
2022-09-10@ 13:01:26

நன்றி குங்குமம் டாக்டர்
பிறப்பு முதலே கவனம்:
பிறந்தது முதலே தாய்ப்பால், ஆறு மாதங்களில் பருப்பு உள்ளிட்ட புரத உணவு போன்றவை கொடுத்து ஆரோக்கியமான பல் வளர்ச்சிக்கான அஸ்திவாரம் அமைக்க வேண்டும்.
மழலைப் பருவத்தில்…
பல் முளைக்கும் முன்பு ஆறு மாதங்களில் கைகளை நன்றாகச் சுத்தம் செய்துவிட்டு, குழந்தைகளின் ஈறுகளை மிக மென்மையாக தடவி விடலாம். இதனால் ஈறுகள் வலுவாகும்.
பால் பல்லின் தொடக்கம்
ஆறு முதல் பனிரெண்டு மாதங்களில் ஓரிரு பால் பற்கள் முளைக்கத் தொடங்கும். இப்போது முதலே பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பல்லின் ஆரோக்கியத்தை காத்திடுங்கள்.
இரண்டு வயதில்
பற்கள் முளைப்பதால் ஈறுகளில் நமைச்சல் இருக்கும். இதனால் எதையாவது கடித்துக்கொண்டு இருப்பார்கள். நல்ல தரமான ஃபேசிஃபையர்களை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வாங்கிக்கொடுக்கலாம். இதனால் தெற்றுப் பல் முளைக்காமல் இருக்கும்.
பால் பற்களின் பருவம்
குழந்தைகளுக்கான நல்ல தரமான ஃப்ரஷ்ஷையும் ஃப்ளோரைடு கலந்த தரமான பற்பசையையும் மருத்துவர் பரிந்துரையின்படி வாங்கிக் கொடுத்து பல் துலக்கக்
கற்றுக்கொடுங்கள்.
குழந்தைப் பருவம்
3+ வருடங்களில் உங்கள் மேற்பார்வையில் குழந்தை தினசரி இரண்டு முறை பல் துலக்குகிறதா என்பதை உறுதிபடுத்துங்கள். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரைச் சந்தித்திடுங்கள்.
குழந்தைப் பருவம் முழுதும்…
பிறரோடு ஸ்பூன்கள், ஸ்ட்ராக்கள், உணவுத் தட்டுகள் பகிர்வதைத் தடுத்திடுங்கள். இதனால், பாக்டீரியா ஓர் உடலில் இருந்து இன்னொரு உடலுக்குப் பரவாது.
முதிர் பற்கள்
6+ வயதில் பால் பற்கள் உதிர்ந்து பெரியவர்களைப் போல பற்கள் முளைக்கத் தொடங்கும். இந்நாட்களில் டூத் ப்ரஷ்ஷை பெரியவர்களுக்கான மாற்றி விடுங்கள். தவறாமல் பல் மருத்துவரைச் சந்திந்திடுங்கள்.
பதின் பருவம் முதல்…
தினசரி இருவேளை பல் துலக்குவதோடு வருடம் இரு முறை பல் மருத்துவரைச் சந்தித்திடுங்கள். உணவு உண்டதும் வாய் கொப்பளித்து பல் மற்றும் வாய் பராமரிப்பைச் சரியாகப் பேணிடுங்கள்.
தொகுப்பு :லயா
மேலும் செய்திகள்
குழந்தைகளுக்கான புற்றுநோய்… தடுக்க… தவிர்க்க!
பவுண்டரிகளை குழந்தைகள் உருவாக்குவதில்லை!
ஞானப்பல்… ஒரு பார்வை!
காற்று மாசால் ஏற்படும் மூளைப் பாதிப்பு!
குழந்தைகளுக்கான புற்றுநோய்…
குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு... காரணங்களும் தீர்வுகளும்!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!