SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்கானிக் CTM டெக்னிக்ஸ்!

2022-08-01@ 17:15:01

நன்றி குங்குமம் டாக்டர்

கிளென்சிங், டோனிங், மாய்ஸ்சுரைசிங் இனி ஈஸி!

பொலிவான முகத்தோற்றம் வேண்டும் என விரும்பாதவர் யார்? இன்று முகப் பராமரிப்புக்கு என்று எத்தனையோ விதவிதமான கிளென்சிங், டோனிங், மாய்ஸ்சுரைசிங் டெக்னிக்குகள் வந்துவிட்டன. ஆனால், அதில் அனைத்துமே ஆரோக்கியமானதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. இதோ உங்களுக்கேற்ற ஆர்கானிக் சிடிஎம் டெக்னிஸ் இங்கே... கிளென்சிங் செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள அழுக்குகளும், இறந்த செல்களும் வெளியேற்றப்படுகின்றன.

டோனிங்  செய்வதன்  மூலம் சருமத்துளைகள் இறுக்கப்பட்டு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப்பசை வெளியேறுவது தடுக்கப்படுகிறது.உடலில் உள்ள ஹைட்ரஜன் அளவை pH என்ற அளவால் குறிப்பார்கள்.  மாய்ஸ்சுரைசிங் செய்வதன் மூலம் சருமத்தின் pH அளவு தக்க வைக்கப்படும்.தற்போது கடைகளில்  கிடைக்கும் கிளின்சிங், டோனிங், மாய்ஸ்சுரைசிங் க்ரீம்கள் வேதிப்பொருட்கள் கலந்ததாக உள்ளதால், அவற்றைப் பயன்படுத்தும்போது,  சிலருக்கு சருமத்தில் உள்ள எண்ணெய்ப்பசை முழுமையாக நீக்கப்பட்டு, சருமத்தின் வறட்சி அதிகரித்து, பொலிவற்றதாக ஆக்கிவிடுகிறது.

அதனால், ரசாயனங்கள் சேர்க்காமல் இயற்கையான பொருட்களைக் கொண்டு எண்ணெய் சருமம், வறண்ட சருமம் என அனைத்து சருமத்திற்கும் ஏற்ற வகையில், பக்க விளைவு ஏற்படுத்தாத டோனர் மற்றும் மாய்ஸ்சுரைசர் தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம்.

புதினா இலைகள்

புதினா இலைகள் சிறந்த டோனராக செயல்படும். மேலும் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை முழுமையாக வெளியேற்றவும் உதவும். புதினா இலைகளைக் கொதிக்கவைத்த நீரில் போட்டு , குளிரவைத்து பின் அந்த நீரால் முகத்தைத் துடைத்து எடுத்து பின், மீண்டும் அந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

தயிர்

அரைகப் தயிர், சிறிதளவு மஞ்சள் தூள், அரை  தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஆகியவற்றை  கலந்து முகத்தில் தடவி குளிர்ந்த நீரில் கழுவி வர  எண்ணெய்ப்பசை நீங்கி முகம் ப்ளீச்சிங் செய்தது போல் பளிச்சென தோற்றமளிக்கும்.

பப்பாளி

பப்பாளிப்பழத்தை அரைத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு நீரில் கழுவி விடவும் . இவ்வாறு செய்யும் போது சருமத்தில் உள்ள துளைகள் ஆழமாக சுத்தமாவதோடு எண்ணெய்ப்பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.

கிரீன் டீ மாய்ஸ்சுரைசர்

கிரீன் டீ - 3 தேக்கரண்டி, பாதாம் எண்ணெய் - 1 தேக்கரண்டி, கற்றாழை ஜெல் - 3 தேக்கரண்டி, தேன் மெழுகு - 2 தேக்கரண்டி, கிரீன் டீ எசென்ஷியல் எண்ணெய் - 1.

கற்றாழை

கற்றாழையில் உள்ள ஜெல் சிறந்த மாய்ஸ்சுரைசராக செயல்படுவதோடு டோனராகவும் செயல்படும். அதற்கு அந்த ஜெல்லை தினமும் முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப்பசை நீங்கும்.

தேக்கரண்டி


செய்முறை: ஒரு சிறிய பாத்திரத்தில் பாதாம் எண்ணெய், தேன்மெழுகு இரண்டையும் கலந்து, கொதிக்கும் நீரின் மேல் வைக்கவும். தேன் மெழுகு உருகியதும் சிறிது குளிரவைத்து, கிரீன் டீ, கற்றாழை ஜெல், கிரீன் டீ எசென்ஷியல் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கிரீம் பதம் வரும்வரை கலந்து குளிர்சாதனப் பெட்டியில் குளிர வைக்கவும். பின்னர், முகத்தில் தடவி உலரவிட்டு கழுவ வேண்டும்.

கிரீன் டீ, கற்றாழை ஆகியவை வறண்ட சருமத்தைக் குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டவை. தேன் மெழுகு சருமத்தை மென்மையாக மாற்றும். பாதாம் எண்ணெய் சருமத்தைப் பொலிவாக்கும்.
 
குங்குமப்பூ மாய்ஸ்சுரைசர்

குங்குமப்பூ - 1 தேக்கரண்டி, பன்னீரில் ஊறவைத்த பாதாம் - 4, கற்றாழை ஜெல் - 2 தேக்கரண்டி, கிளிசரின் - 1 தேக்கரண்டி, வைட்டமின் ஈ எண்ணெய் - 1 தேக்கரண்டி.
செய்முறை: ஊறவைத்த பாதாமை தோல் நீக்கி, சிறிது பன்னீர் சேர்த்து அரைத்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும். ஒரு சிறிய பாத்திரத்தில் கற்றாழை ஜெல், குங்குமப்பூ, வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் கிளிசரின் சேர்த்துக் கலந்து முகத்தில் தடவி உலர விட்டு கழுவ வேண்டும். இது சரும சுருக்கங்களை நீக்கும். மேலும் புற ஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். கிளிசரின் மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்க முக்கியப் பங்காற்றும்.

தொகுப்பு: ரிஷி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்