SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

ஜிம் டயட்…

2022-07-29@ 16:57:59

நன்றி குங்குமம் டாக்டர்

ஃபிட்டாகுங்க… கெத்தாகுங்க!


ஃபிட்டாக இருக்க வேண்டும் என்றால் தினசரி ஜிம்மில் மாங்கு மாங்கென பாடுபட வேண்டும் என்பது எவ்வளவு உண்மையோ அதற்கு இணையான உண்மை ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும்தான். உடற்பயிற்சி முழுமையாகப் பலன் அளிக்க வேண்டும் என்றால், ஹெல்த்தி டயட் பிளானும் அவசியம். புதிதாக ஜிம்முக்குச் செல்பவர்களுக்கான பிரத்யேக டயட் பிளான் என்னவென சொல்கிறார் டயட்டீஷியன் கோவர்த்தினி.

உணவுதான் நம் உடலின் எரிசக்தி. எனவே, உணவைத் தவறாமல் எடுத்துக்கொள்வது அவசியம். ஜிம்முக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன், நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, புரோட்டீன்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்கள்  நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். நம் உடலில் கிளைக்கோஜன் அளவை அதிகமாக வைத்திருக்க இவை உதவும். ஜிம்முக்குச் செல்லும் முன் எதுவும் சாப்பிடாமல் செல்லவே கூடாது.

உடல் எடையைக் கூட்ட ஜிம்முக்குச் செல்பவர்கள் நல்ல ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், விரைவில் ஃபிட்டான உடலைப் பெற இயலும். உடல் எடையைக் குறைக்க ஜிம் செல்பவர்கள் திரவ  உணவான ஓட்ஸ் கஞ்சி போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால், உடற்பயிற்சிக்குப் பின் ஸ்லிம் ஃபிட் உடல்வாகு கிடைக்கும்.

பொதுவாக, அதிகமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஜிம்முக்குச் செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்பே நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுகளை இரண்டு மணி நேரத்துக்கு முன் உண்ண வேண்டும். இவ்வாறு உட்கொண்டால், உடலின் குளுக்கோஸ் அளவு சீராகும். உடற்பயிற்சி செய்ய தேவையான ஆற்றல் கிடைக்கும்.

உடற்பயிற்சியின் போதும் பின்பும் சிற்றுண்டி/பானம்

*உடற்பயிற்சியின் பின் மென்மையான தேங்காய் நீர் எலக்ட்ரோலைட் இழப்பை மாற்ற உதவுகிறது.
*நட்ஸ் உடற்பயிற்சிக்குப் பிறகு எடுத்துக்கொள்ளலாம்.
*உடற்பயிற்சி செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பழச்சாறுகள் அல்லது பழங்கள் அல்லது காய்கறி சாலட் சாப்பிடலாம்.

எடை அதிகரிக்க ஜிம் செல்பவர்களுக்கான டயட் பிளான்

காலையில் பாதாம், பேரீச்சம் பழம் அல்லது தேனுடன் வால்நட் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன், வேகவைத்த மூன்று முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்துச் சாப்பிட வேண்டும்.கோதுமை பிரெட் துண்டில் ஒரு டேபிள் ஸ்பூன்  வெண்ணெயைத் தடவ வேண்டும். பின்பு, வேர்க்கடலை சேர்த்து, டோஸ்ட் செய்து சாப்பிட வேண்டும். இதற்குப் பதிலாக, புரோகோலியை  ஆலிவ் எண்ணெயில் உப்புடன் சேர்த்து வதக்கி அரை கப் விகிதம் சாப்பிட வேண்டும். தினசரி காலை உணவான  இட்லி, தோசையையும் எடுத்துக்கொள்ளலாம்.

எடை குறைக்க ஜிம்முக்குச் செல்பவர்களுக்கான டயட் பிளான்

*50 மி.லி ஆறிய வெண்ணீருடன் உலர் திராட்சை மற்றும் பேரீச்சம் பழம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
*காலை உணவை ஓட்ஸ் போன்ற திரவ  உணவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

புதியவர்களுக்கான ஜிம் டயட் பிளான்

*பிடித்த பழங்களின் ஃபுரூட்ஸ் ஸ்மூத்தி ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.
*கால் கப் தயிரில் முக்கால் கப் ப்ளூபெர்ரி சேர்த்து, இரண்டையும் கலந்து சாப்பிட வேண்டும்.
*இரண்டு வாழைப்பழம் எடுத்துக்கொள்வது மிகவும் சிறந்தது.
*ஒரு கையளவு உலர் திராட்சையைச் சாப்பிட வேண்டும்.
*உடல் எடையை சரியாகப் பராமரிக்க தூக்கம் மிகவும் அவசியம். சராசரியாக எட்டு மணி நேரம் உறங்க வேண்டும். உறங்காமல் இருப்பதே உடல் எடையைத் தொந்தரவு செய்யும்.
 இந்த  உணவுகளுக்கு தடா!
*எளிய கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வதைக் குறைக்கவும்
*இனிப்பு பொருட்கள்
*பேஸ்ட்ரிகள், ஐஸ் - கிரீம் போன்றவை
*சர்க்கரை
*மைதாவில் செய்த உணவுகள்
*பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும் - பதப்படுத்தப்பட்ட உணவுகள் குறைவான ஊட்டச்சத்து மற்றும் அதிக கலோரிகளைக் கொண்டிருக்கின்றன, அவை நல்லதைவிட அதிக தீங்கு விளைவிக்கும். சோடாக்கள், சிப்ஸ் மற்றும் பிஸ்கட்களைத் தவிர்த்திடுங்கள்.
*நன்றாக வறுத்த எதுவும் சுவையாக இருக்கும்தான். ஆனால், அதில் உடலுக்குத் தீங்கான கொழுப்பு அமிலங்கள் இருக்கும். எனவே, அது உங்கள் எடை இழப்பு இலக்குகளை அடைய நிச்சயமாக உதவாது.
*குளிர் பானங்கள்.

தொகுப்பு: இளங்கோ

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்