SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வலியில்லா ஊசி நிவாரணம் ஈஸி! அக்குபஞ்சர் ஏன்…யாருக்கு…எப்போது?

2022-07-07@ 15:51:52

நன்றி குங்குமம் டாக்டர்

மாற்று மருத்துவங்களில் இன்று வெற்றிகரமான ஒன்றென அக்குபஞ்சர் கருதப்படுகிறது. மிக மெல்லிய ஊசியைக் கொண்டு செய்யப்படும் அற்புதமான சிகிச்சை இது. அக்குபஞ்சர் அடிப்படையில் சீன மருத்துவமுறை என்றாலும் இதன் தத்துவார்த்த பின்புலங்கள் நம் இந்திய மரபோடும் தொடர்புடையதுதான். நம் உடல் என்பதே பஞ்ச பூதங்களின் கூட்டுதான். இதன் ஆற்றலே உடலை இயக்குகின்றன. நம் உடலில் ஏழு சக்கரங்கள் இருக்கின்றன. நவீன மருத்துவம் இதனை நாளமில்லா சுரப்பிகள் என வகைப்படுத்துகிறது. இதிலும் இந்த பஞ்சபூதக் கூட்டு உள்ளது. இதன் அடிப்படையில் உடலில் சக்தி ஓட்டங்கள் நிகழ்கின்றன. இந்த சக்தி ஓட்டத்தின் முக்கியமான புள்ளிகளை அக்கு புள்ளிகள் என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்தப் புள்ளிகளை விரல்களால் தூண்டி சிகிச்சை அளிப்பது அக்குப்ரெஷர் என்றால் மிக மெல்லிதான ஊசிகளை அந்த இடத்தில் செலுத்தி உடலின் சக்தி ஓட்டத்தை சமன் படுத்தி உடலின் உபாதைகளைச் சீராக்குவது அக்குபஞ்சர்.சீன தத்துவ மரபில் ‘யின் -யாங்’ என்ற இருமைத் தத்துவம் அடிபடையானது.  இவ்வுலகில் உள்ள எல்லா ஆற்றல்களையும் யின்-யாங் என்ற இருவகை ஆற்றல்களாகப் பிரிக்கலாம். இதில் யின் என்பது நேராற்றல் அல்லது ஆண் என்றும் யாங் என்பதை எதிராற்றல் அல்லது யாங் என்றும் வரையறுக்கப்படுகிறது. ஆண்-பெண், இரவு  பகல், சூரியன்  சந்திரன், நெருப்பு-நீர் என பிரபஞ்சத்தின் எல்லா இருப்புமுமே யின்-யான் ஆற்றல் கேந்திரங்கள்தான். இந்த யின்னும் யானும் சமவிகிதத்தில் இருக்கும்போதே ஓர் உயிர்பொருள் ஆரோக்கியமாகவும் சமநிலையிலும் இருக்கும். இதில் ஏதேனும் ஓரிடத்தில் மாறுபாடு நிகழ்ந்தாலும் உடலின் சமநிலை கெட்டு நோய்க்குறிகள், வலிகள் தோன்றும்.

அப்போது, உடலின் எந்த பாகத்தில் பிரச்சனை உள்ளதோ அதற்கான அக்குப்புள்ளிகளை அக்கு ஊசிகள் மூலம் தூண்டி உடலின் ஆற்றலை சமநிலைக்குக் கொண்டு வந்து பிரச்சனைக்குத் தீர்வு காண்பதே அக்குபஞ்சரின் அடிப்படை. இன்று அக்குபஞ்சர் பலவிதமான நோய்களுக்கு நல்லதொரு மாற்று மருத்துவமாகப் பயன்படுகிறது. குறிப்பாக நீண்டகால நோய்களான புற்றுநோய் போன்ற பெரிய நோய்களின் தாக்கத்தால் உடல் வலியால் அவதிப்படுபவர்களுக்குக்கூட அக்குபஞ்சரில் நல்ல நிவாரணம் கிடைக்கிறது.

அலோபதி மருத்துவர்களேகூட அக்குபுள்ளிகள் எனப்படும் பாகங்களை தூண்டுவதன் மூலம் உடல் நரம்புகள், தசைப்பகுதி, இணைப்புத் திசுக்கள் போன்றவற்றில் இருக்கும் வலியுணர்வைத் தணியச் செய்யும் இயற்கையான வலி நிவாரணியாக அக்குபஞ்சர் இருக்கிறது என்று கருதுகிறார்கள்.

யாருக்கு அக்குபஞ்சர் தேவை?

*புற்றுநோய் சிகிச்சையான கீமோவுக்குப் பிறகு மயக்கம் மற்றும் வாந்தியுணர்வு கொண்ட நோயாளிகள்
*பல் வலி
*ஃபிப்ரோமயால்ஜியா எனும் முதுகுத்தண்டுவடம் நரம்பு மண்டலம் வலி உள்ளவர்கள்.
*மைக்ரேன் தலைவலி, ஒற்றைத் தலைவலி, டென்ஷன் தலைவலி
*பிரசவ வலி
*கீழ் முதுகு வலி, இடுப்பு வலி
*கழுத்து வலி
*ஆஸ்டியோஆர்த்தரைடிஸ் எனும் எலும்புப் பிரச்சனை உள்ளவர்கள்
*மாதவிலக்குப் பிரச்சனை உள்ளவர்கள்
*ஜீரண மண்டலப் பிரச்சனை உள்ளவர்கள்
*டென்னிஸ் எல்போ எனப்படும் முழங்கை வலி உள்ளவர்கள்
*எலும்பு மூட்டுகளில் வலி உள்ளவர்கள்
*சர்க்கரை நோயாளிகள்
*உயர் ரத்த அழுத்தம்

மேலே சொன்னவர்கள் தவிர அன்றாட அலைச்சல் மற்றும் வேலைப்பளுவால் உடல்வலி, அசதி, கடும் மனச்சோர்வு போன்ற பிரச்சனை உள்ளவர்கள்கூட அக்குபஞ்சரோ அக்குபிரஷர் சிகிச்சையோ எடுத்துக்கொள்ளலாம்.

யார் கவனமாக எடுக்க வேண்டும்?

*ரத்தம் உறையும் பிரச்சனை உள்ளவர்கள்
*இதயத்துக்கான பேஸ்மேக்கர் பொருத்தியவர்கள்
*கர்ப்பிணிகள்

இவர்கள் சிகிச்சை எடுக்கும் முன்பு நிபுணரிடம் இந்தப் பிரச்சனைகளை தெளிவாகச் சொல்லிவிடுவது நல்லது. அதற்குத் தகுந்தாற்போல் சிகிச்சை தர அவர்களுக்கு அது உதவியாக இருக்கும்.

எப்படிப் பரிசோதிப்பர்

அக்குபஞ்சர் பரிசோதனைகள் நிபுணருக்கு நிபுணர் வேறுபடும். அலோபதி மருத்துவர்களின் அடிப்படைப் பரிசோதனைகள்கூட செய்வார்கள். ஒருவரின் நோய்க்குறி, பிரச்சனை, வாழ்க்கைமுறை போன்றவற்றை விரிவாகக் கேட்ட பின்பே சிகிச்சையைத் தொடங்குவார்கள். சில நிபுணர்கள், உடலின் வலி மிகுந்த அல்லது பிரச்சனை உள்ள பகுதியைப் பரிசோதிப்பது, நாவின் வடிவம், நிறம் ஆகியவற்றைப் பரிசோதிப்பது, முகத்தின் நிறத்தை பரிசோதிப்பது, நாடிப் பிடித்துப் பார்ப்பது போன்ற அடிப்படை பரிசோதனையும் செய்வார்கள்.

ஊசி செலுத்துதல்

அக்குபஞ்சர் ஊசிகள் மிக மெலிதானவை. உடலில் வலி இல்லாமல் செலுத்தக்கூடியவை. ஒருவரின் பிரச்சனைக்கு ஏற்ப ஐந்து முதல் ஏழு ஊசிகள் வரை வலி உள்ள இடத்திலோ அல்லது அதற்கான அக்குப்புள்ளியிலோ செலுத்துவார்கள். பிறகு, அவ்வூசிகளை மெலிதாய்  அசைத்தோ, சுழற்றியோ, சூடுபடுத்தியோ சிகிச்சை தருவார்கள். இதனால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.         

தொகுப்பு  - மோனி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்