நலம்பல தரும் நன்னாரி
2022-07-07@ 15:22:32

நன்றி குங்குமம் தோழி
வாசகர் பகுதி
‘நன்னாரி’ மகத்துவம் வாய்ந்த மூலிகையாகும். இதன் வேரை உடல்நலம் காக்கும் வழிகளில் உட்கொண்டு பலன்களை அடையலாம். குறைந்த செலவில் உடல் ஆரோக்கியம் தரும் மூலிகை இது.
* நன்னாரி வேரை ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து குடித்து வந்தால் வாத நோய்கள் குணமாகும்.
* நன்னாரி வேரில் சாறு எடுத்து காலை, மாலை இருவேளையும் குடித்து வந்தால் தோல் நோய்கள் குணமாகிவிடும்.
* நன்னாரி வேர், வெட்டி வேர் இரண்டையும் சமஅளவு எடுத்து கஷாயமாக தயாரித்து குடித்தால் பித்த சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் உடல் சூடு தணியும்.
* நன்னாரி வேர், நெருஞ்சிமுல் இரண்டையும் சம அளவு எடுத்து கஷாயம் தயாரித்து குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள் கரைந்துவிடும்.
* நன்னாரி, தனியா, சோம்பு மூன்றையும் சமஅளவு எடுத்து பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
* நன்னாரி வேரை, நெல்லிக்காய் சாறில் ஊற வைத்து, உலர்த்தி பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் கொழுப்பு கரையும். இதயம் வலுவடையும்.நன்னாரியை பயன்படுத்துவோம். உடல் நலமுடன் வாழ்வோம்.
- எஸ். பாரதி, மதுரை.
Tags:
நலம்பல தரும் நன்னாரிமேலும் செய்திகள்
தேனீ நஞ்சின் நோய் தீர்க்கும் பண்புகள்
அன்னமயகோசம் எனும் ஆடல் களம்
அடினோ வைரஸ் ஆபத்து உஷார்!
மனம் எனும் மாயலோகம்!
செக்கச் சிவந்த செர்ரி!
எப்போதும் கேட்கும் ஒலிகள்!
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...