SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

T2DM… சர்க்கரை நோயை வெல்ல!

2022-06-23@ 17:53:45

நன்றி குங்குமம் டாக்டர்

டைப் 2 டயாபடீஸ் மெல்லிடஸ் என்பதன் சுருக்கமே T2DM (Type 2 Diabetes Mellitus). ஒரு காலத்தில் பணக்கார வியாதி என்று கருதப்பட்ட இது இன்று, வாழ்க்கை முறை சீரழிவுகளால் எளிய குடும்பங்களைச் சேர்ந்த 30+ வயதினரிடையேகூட அதிகமாகக் காணப்படுகிறது.

* T2DM என்பது உடலில் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாத அல்லது போதுமான அளவு இன்சுலினைப் பயன்படுத்தாத ஒரு குறைபாடு.

* இந்தக் குறைபாடு காரணமாக, உடலின் குளுக்கோஸ் ஆற்றலுக்காக செல்லுக்கு அனுப்பப்படுவதில்லை. எனவே, அதிகளவில் ரத்தத்தில் திரட்டப்படுகிறது.

* சர்வதேச அளவில் சர்க்கரை நோயின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் சர்க்கரை நோயின் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் நகர்ப்புறங்களைப் போலவே கிராமப்புறங்களிலும் T2DM பாதிப்பு அதிகரித்துவருகிறது.

* அதிக எடை அல்லது உடல் பருமன், வயது, நீரிழிவு நோயின் குடும்ப வரலாறு, அடிவயிற்றில் கொழுப்பு, உடல் செயலற்ற தன்மை/ உட்கார்ந்த வாழ்க்கை முறை, கர்ப்பகால நீரிழிவு வரலாறு, புகைபிடித்தல், PCOS, அசாதாரண கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்றவற்றால் சர்க்கரைநோய் உருவாக வாய்ப்புகள் அதிகம்.

* இதனை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், T2DM உள்ளவர்களுக்கு மாரடைப்பு, சிறுநீரக நோய், நரம்பியல் நோய்,கண்நோய், செவித்திறன் குறைபாடு, பாதத்தில் காயம் போன்றவை ஏற்படும் சாத்தியம் அதிகம்.

* இந்த குறைபாட்டுக்கு அதற்கான மருந்துகளை உட்கொள்வதுடன் வாழ்க்கை முறை மாற்றங்கள், ஆரோக்கியமான உணவை உண்பது மற்றும் உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.

* ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் உடற்பயிற்சிகளும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி செய்யும்போது,  தசைகளை அதிகமாகப் பயன்படுத்துவோம். இது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸைப் பயன்படுத்துகிறது. இதனால் ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸின் அதிகப்படியான திரட்சி குறைகிறது. இந்த செயல்முறையின் மூலம், உடல் இன்சுலின் உணர்திறன் அதிகரிக்கத் தொடங்குகிறது, இதனால் செல்கள் ஆற்றல் உற்பத்திக்கு அதிக குளுக்கோஸை எடுக்க முடியும்.

* அதேவேளையில் T2DM ஆபத்தை ஏற்படுத்தும். அதிகப்படியான உடல் எடை, வயிறு அல்லது உள்ளுறுப்பு கொழுப்பைக் குறைக்கவும் உடற்பயிற்சிகள் உதவுகிறது.

* 30+ வயதைக் கடந்தவர்கள் குறைந்தபட்சம் தினசரி பத்தாயிரம் அடிகள் நடப்பது. வாரத்துக்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான மற்றும் தீவிரமான உடற்பயிற்சிகள் செய்வது முக்கியம். வாரந்தோறும் மூன்று நாட்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதை அமெரிக்க சர்க்கரை நோய் சீரமைப்பு மையம் உட்பட பல்வேறு சர்வதேச மருத்துவ அமைப்புகளும் அறிவுறுத்துகின்றன.      

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

 • china_taiwan

  தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

 • guinness-record-pull-ups-08

  பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

 • egypt-sun-temple-8

  எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்